MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஆலிவரின் மாஸ்டர் மைண்ட் யார்? மதிவதினியால் மாட்டப்போகும் பெரும்புள்ளி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஆலிவரின் மாஸ்டர் மைண்ட் யார்? மதிவதினியால் மாட்டப்போகும் பெரும்புள்ளி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆலிவர் தேவசகாயத்தை பிடிக்க களத்தில் இறங்கி உள்ள மதிவதினி, பாண்டியனிடம் இதுகுறித்து பேசி உள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 24 2026, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி மற்றும் சக்தி இருவரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த போது அங்கு ஆலிவர் தேவசகாயம் அவர்களை மடக்கி, கொலை செய்ய திட்டமிட்டு இருந்தான். ஆனால் ஆலிவர் அனுப்பிய ரெளடிகளிடம் இருந்து தப்பிய ஜனனி மற்றும் சக்தி இருவரும் காரில் மதுரைக்கு வந்தனர். வரும் வழியில் ஜனனி தலையில் அடிபட்டு மயக்கம் போட்டு விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் கண்விழித்துள்ளார். அவருடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என டாக்டர் சொல்லி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
நந்தினி சொன்ன குட் நியூஸ்
Image Credit : youtube/suntv

நந்தினி சொன்ன குட் நியூஸ்

ஜனனி கொடைக்கானல் சென்றபோது ஹோட்டல் உணவுகளை அதிகம் சப்பிட்டதால், அது அவருக்கு ஒத்துக்கவில்லையாம். இதனால் வீட்டில் சமைத்த சத்தான உணவுகளை மட்டும் ஜனனிக்கு கொடுக்குமாறு சொல்லி இருக்கிறார்கள். இதற்காக வீட்டிற்கு சென்றுள்ள ரேணுகா மற்றும் நந்தினி, ஈஸ்வரி குணமாகி வரும் விஷயத்தை விசாலாட்சியிடம் சொல்கிறார். அதைக்கேட்ட அவர் ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார். நாளைக்கு நாங்க நாலு பேரும் சேர்ந்து இந்த வீட்டுக்குள்ள ஒன்னா வருவோம், லைஃபையே புதுசா பாக்க போறோம், புது நம்பிக்கையோட புது வாழ்க்கையை ஆரம்பிக்க போறோம் என நந்தினி கூறி உள்ளார்.

Related Articles

Related image1
கதையை முடிக்க சொன்ன ஆலிவர்... ஜனனிக்காக கழுகு போல் காத்திருக்கும் ரவுடிகள் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஜனனிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பத்தியில் காத்திருந்த ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது
35
களத்தில் குதித்த மதிவதினி
Image Credit : youtube/suntv

களத்தில் குதித்த மதிவதினி

மறுபுறம் இன்ஸ்பெக்டர் பாண்டியனை சந்திக்கும் மதிவதினி, ஆலிவரை உடனே பிடிக்க வேண்டும் என கூறுகிறார். அதற்கு அவர், அந்த ஆளு நாம நினைக்குற மாதிரி ஒரு சில வேலைகளை மட்டும் பார்க்கவில்லை. கொடைக்கானலில் அவனுக்காக ரெண்டு, மூணு டீம் வேலை பாக்குறாங்க என சொல்கிறார். அப்போ இதற்கு பின்னணியில் இருந்து செயல்படும் ஆள் சாதாரணமானவராக இருப்பார் என தெரியவில்லை. அவர் மிகவும் பயங்கரமானவராக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த ஆளையும் எப்படியாவது நாம் பிடிக்க வேண்டும் என மதிவதினி சொல்ல, பாண்டியனும் அதற்கான வேலைகளில் இறங்குகிறார்.

45
ஆலிவருக்கு ஆப்பு
Image Credit : youtube/suntv

ஆலிவருக்கு ஆப்பு

ஜனனியை தவறவிட்ட பின்னர் தனக்கு மேலே இருக்கும் பாஸ் ஒருவரிடம் போன் போட்டு பேசுகிறார் ஆலிவர் தேவசகாயம். அவரிடம், போலீஸ் என்னை அடையாளம் கண்டுபிடிச்சி தேட ஆரம்பிச்சிட்டாங்க என சொல்கிறார். அதற்கு அந்த பாஸ், நீ உயிரோட இருந்தால், உன்னை வச்சு, இந்த நெட்வொர்கை டிராக் பண்ணுவார்கள். அதனால நீ செத்துரு, இப்போ நீ சாகலேனா, உன்னை நானே தேடி வந்து கொல்லுவேன் என சொல்லி போனை கட் பண்ணுகிறார். ஜனனியால் தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம் என ஆலிவர் தேவசகாயம் குமுறுகிறார்.

55
யார் அந்த பாஸ்?
Image Credit : youtube/suntv

யார் அந்த பாஸ்?

ஆலிவரை போன் போட்டு கொல்லுவேன் என மிரட்டியது யார் என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஆலிவரே இவ்வளவு கொடூரமானவனாக இருக்கிறார் என்றால், அவனுக்கு மேலே இருப்பவர் அதைவிட டேஞ்சர் ஆனவன் போல் தெரிகிறார். அநேகமாக அவன் புது வில்லனாக இனி வரும் நாட்களில் எண்ட்ரி கொடுப்பார் போல தெரிகிறது. அவர் மதிவதினியின் முன்னாள் கணவர் ராணாவாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அந்த ட்விஸ்ட் இனி வரும் எபிசோடுகளில் எதிர்பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
வானதியிடம் வாய்விட்டு மாட்டிக்கொண்ட சோழன்... நிலா எடுத்த எதிர்பாரா முடிவு - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
முத்து - மீனாவை கைது செய்த போலீஸ்... சீதாவை அடிச்சு துரத்திய அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image3
16 வருஷமா ஒரே Playist தான் – அதுவும் இவங்க 2 பேர் சாங்க்ஸ் – ஓபனாக பேசி வசமாக மாட்டிக்கிட்ட ஜனனி அசோக் குமார்!
Related Stories
Recommended image1
கதையை முடிக்க சொன்ன ஆலிவர்... ஜனனிக்காக கழுகு போல் காத்திருக்கும் ரவுடிகள் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஜனனிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பத்தியில் காத்திருந்த ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved