MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனி போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்... அந்தர் பல்டி அடித்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது ட்விஸ்ட்

ஜனனி போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்... அந்தர் பல்டி அடித்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது ட்விஸ்ட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார் விசாலாட்சி. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 29 2026, 08:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தனக்கு பிரஷர் அதிகமானதால் மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்த அவரது தம்பிகள் வீட்டில் வந்து யாருமே அவரை பார்க்க வரக்கூடாது என்றும், உங்களால் தான் என்னுடைய அண்ணன் இந்த நிலைமையில் இருக்கிறார் என சொல்கிறார். அவர் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என சொல்லமுடியாது என்று டாக்டர் கூறிவிட்டதாக கதிர் சொன்னதும் அதைக்கேட்ட விசாலாட்சி பதறிப்போகிறார். தன் அண்ணனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உங்க யாரையும் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
குணசேகரனின் டிராமா
Image Credit : youtube/suntv

குணசேகரனின் டிராமா

ஆஸ்பத்திரிக்கு சென்றதும் அங்கு டாக்டர், ஆதி குணசேகரனை பரிசோதித்துவிட்டு, அவருக்கு பிரஷர் அதிகமானதால் தான் இப்படி ஆனதாகவும், அவரை இனி எப்போ வேண்டுமானாலும் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறுகிறார். ஆனால் அவரிடம் பேசும் ஆடிட்டர், இன்னும் கொஞ்ச நாளைக்கு அவர் இங்கேயே ஐசியூவில் இருக்கட்டும் என சொல்வதோடு, எங்கள் வீட்டில் இருந்து பெண்கள் யார் வந்து கேட்டாலும் அண்ணன் சீரியஸாக இருப்பதாக சொல்லுமாறு டாக்டரிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிடுகிறார். இதன்மூலம் ஆதி குணசேகரன் சீரியஸாக இருப்பது போல் காட்டி, அவர் மீது போடப்பட்டுள்ள கேஸை எல்லாம் வாபஸ் வாங்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

Related Articles

Related image1
ஜனனிக்கு ஆப்பு... ஆதி குணசேகரனின் முடிவுக்கு ஓகே சொல்வாரா ஈஸ்வரி? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
ஜனனியை தீர்த்துக்கட்ட ஈஸ்வரியை பகடைக்காயாக பயன்படுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
35
ஜனனி கேட்ட கேள்வி
Image Credit : youtube/suntv

ஜனனி கேட்ட கேள்வி

இதையடுத்து வீட்டுக்கு போகும் கதிர் மற்றும் ஞானம், அனைவரிடம் கெஞ்சி கேட்கிறார்கள். இனியாவது அந்த மனுஷனை நிம்மதியா இருக்க விடுங்க என கதிர் கேட்கிறார். அப்போது குறுக்கிட்டு பேசும் ஜனனி, டாக்டரே பொண்டாட்டி, பிள்ளைங்க எல்லாம் போய் பாக்கலாம்னு சொல்றாரு, நீங்க என்னமோ யாருமே பார்க்க கூடாது, தொந்தரவு பண்ணக் கூடாதுனு பேசுறீங்க என கேட்க, அதைக்கேட்டதும் கடுப்பாகிறார் கதிர். வழக்கம்போல் ஜனனியை பார்த்து நீ வாய மூடு டி, உன்னால தான் என்னோட அண்ணன் சாகக் கிடக்கிறார் என்று தன்னுடைய டிராமாவை ஸ்டார்ட் பண்ணுகிறார். அப்போது அருகில் இருந்த விசாலாட்சி ஜனனியை தடுத்து நிறுத்துகிறார்.

45
மனம் மாறும் விசாலாட்சி
Image Credit : youtube/suntv

மனம் மாறும் விசாலாட்சி

அப்போது பேசும் ஞானம், ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோரிடம் நீங்க மூணு பேரும் கையெழுத்து போட்டு கொடுத்தீங்கனா எல்லாம் சரியாகிடும் என சொல்கிறார். அவர் கையெழுத்து கேட்டதும் அதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று சந்தேகப்படுகிறார் ஜனனி. உடனே அருகில் இருந்த விசாலாட்சி, தாய் பாசத்தால் அந்தர் பல்டி அடிக்கிறார். அனைவரையும் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்கிறார். அவரிடம் இப்படி மாத்தி மாத்தி பேசாத அம்மா என சொல்கிறார் சக்தி. போதும்யா உடனே அம்மா மாரிட்டியானு கேட்காத, அவன் உசுரு முக்கியம் என சொல்ல, ஜனனி ஷாக் ஆகிறார்.

55
வழக்கு வாபஸ் வாங்கப்படுமா?
Image Credit : youtube/suntv

வழக்கு வாபஸ் வாங்கப்படுமா?

இதையடுத்து என்ன நடக்கப்போகிறது. ஜனனி பேச்சைக் கேட்காமல் மனம் மாறும் நிலையில் இருக்கும் ஈஸ்வரி, வழக்கை வாபஸ் வாங்க சம்மதிப்பாரா? நந்தினியும், ரேணுகாவும், அவர்கள் பேச்சை கேட்டு வாபஸ் வாங்க சம்மதித்து கையெழுத்து போடுவார்களா? ஜனனியின் போராட்டம் தொடருமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai Today Episode : டபுள் கேம் ஆடும் சிந்தாமணி... கைதான மனோஜை மீட்பாரா ரோகிணி? சிறகடிக்க ஆசை
Recommended image2
அடுத்தடுத்து 3 முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் சன் டிவி... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Recommended image3
Ethirneechal Today Episode : ஆதி குணசேகரனுக்கு என்னாச்சு? கதறி அழுத கதிர்; கல்லுமாதிரி நின்ற ஜனனி
Related Stories
Recommended image1
ஜனனிக்கு ஆப்பு... ஆதி குணசேகரனின் முடிவுக்கு ஓகே சொல்வாரா ஈஸ்வரி? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
ஜனனியை தீர்த்துக்கட்ட ஈஸ்வரியை பகடைக்காயாக பயன்படுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved