MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனிக்கு ஆப்பு... ஆதி குணசேகரனின் முடிவுக்கு ஓகே சொல்வாரா ஈஸ்வரி? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

ஜனனிக்கு ஆப்பு... ஆதி குணசேகரனின் முடிவுக்கு ஓகே சொல்வாரா ஈஸ்வரி? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, வீட்டை விட்டு வெளியேறியதை பயன்படுத்தி, தன் மேல் போடப்பட்ட வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்க வைக்க திட்டமிட்டுள்ளார் ஆதி குணசேகரன். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 25 2026, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிருடன் சண்டைபோட்ட கையோடு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் ஜனனி. அவர் மதிவதினி உடன் சேர்ந்து ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்புவது பற்றி ஜனனி பேசியதை ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து குணசேகரனுக்கு அனுப்பி வைத்துள்ளார் ராவணன். அதைப்பார்த்த குணசேகரன், ஈஸ்வரியிடம் அந்த வீடியோவை காட்ட, அவர் ஜனனி மீது கோபமடைந்து, சக்திக்கு போன் போட்டு உடனடியாக ஜனனியை வீட்டுக்கு வர சொல்கிறார். ஆனால் தற்போது நான் அங்கு சென்றால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதை கருத்தில் கொண்டு ஜனனி, வீட்டுக்கு வர மறுத்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மதிவதினியிடம் உண்மையை மறைக்கும் ஜனனி
Image Credit : youtube/suntv

மதிவதினியிடம் உண்மையை மறைக்கும் ஜனனி

சக்தி, மதிவதினி வீட்டில் ரகசிய கேமரா இருக்கும் விஷயத்தை சொல்லிடலாம் என ஜனனியிடம் சொல்ல, அவரோ, அவங்க ஃபேமிலி விஷயமா வெளியூர் போயிருக்காங்க, அதனால இப்போ அவங்ககிட்ட இதப்பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் என கூறிவிடுகிறார். மறுபுறம் ஆதி குணசேகரனும் தன்னுடைய தம்பிகளுடன் கூடி பேசி, ஜனனி வெளியில் இருந்தால் நமக்கு எதிராக ஏதாவது ஒரு வேலையை பார்ப்பாள், அதனால் அவளை வீட்டுக்கு வர வைக்க வேண்டும் என திட்டம்போடுகிறார். இங்கு வர வைத்து அவளின் சோலியை முடிக்க வேண்டும் என கூறுகிறார். அதுமட்டுமின்றி வழக்கு சம்பந்தமாக பேச வக்கீலையும் வீட்டுக்கு வரச் சொல்கிறார் குணசேகரன்.

Related Articles

Related image1
ஜனனி - ஈஸ்வரி இடையே சண்டையை மூட்டிவிட்ட ராவணன் - அனல்பறக்கும் ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
ஜனனியை தீர்த்துக்கட்ட ஈஸ்வரியை பகடைக்காயாக பயன்படுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
35
வக்கீல் சொன்ன புதுக்கதை
Image Credit : youtube/suntv

வக்கீல் சொன்ன புதுக்கதை

இதையடுத்து மறுநாள் காலையில் வீட்டுக்கு வரும் வக்கீல், குணசேகரனுக்கு எதிரான வழக்கு பற்றி ஈஸ்வரியிடம் கூறுகிறார். படிச்சு முடிச்சதுமே நாச்சியப்பன் அவரது மகள் ஜனனியை, இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. அதனால் ஏமாற்றம் அடைந்த ஜனனி, அப்பத்தாவின் தூண்டுதலின் பேரில், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். திரும்பி வந்ததும் அவர் உங்களை அவர் பக்கம் இழுக்க பார்க்கிறார். இதெல்லாம் சேர்ந்து பல வழக்காக மாறி நிற்கிறது என வக்கீல் ஒரு கதையை அவிழ்துவிட, அதற்கு ஈஸ்வரி, அப்படி என்ன வழக்கு குணசேகரன் மீது போட்டிருக்கிறார்கள் என கேட்கிறார். அதையெல்லாம் விளக்கமா சொன்னா உங்களுக்கு கன்பியூஸ் ஆகிவிடும் என சொல்லி எஸ்கேப் ஆகிறார் வக்கீல்.

45
வாக்குமூலம் கொடுப்பார்களா?
Image Credit : youtube/suntv

வாக்குமூலம் கொடுப்பார்களா?

இப்போ நான் ஒரே ஒரு விஷயம் தான் கேக்குறேன். குணசேகரன் சாருக்கு எதிரா உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லேன்னு, வாக்குமூலமா நீங்க எழுதி கையெழுத்து போட்டு கொடுத்து அதை நான் வாங்கிவிட்டால் எல்லாமே சமாதானமாக போயிரும். இப்போ நீங்க வழக்கை நடத்தினால் செலவுக்கு என்ன செய்வீர்கள். குணசேகரன் சாருக்கு எதிரா வழக்கு நடத்த அவரிடமே காசு வாங்க முடியுமா என கேட்கிறார். அதுமட்டுமின்றி இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஜனனியும் வந்தாக வேண்டும். அவங்களும் வந்துவிட்டால் இன்னையோட எல்லா பிரச்சனையையும் முடிச்சிடலாம் என வக்கீல் சொல்ல, அப்போது அனைவரும் மெளனம் காக்கிறார்கள்.

55
ஈஸ்வரிக்கு உண்மை தெரியவருமா?
Image Credit : youtube/suntv

ஈஸ்வரிக்கு உண்மை தெரியவருமா?

அந்த சமயத்தில் குறுக்கிட்டு பேசும் ஆதி குணசேகரன். பழசையே திரும்ப திரும்ப பேசி இந்த குடும்பம் நிம்மதி கெட்டு போகணுமா, இல்லை எல்லாவற்றையும் மறந்துவிட்டு அடுத்தகட்டத்துக்கு போகணுமா, அதுக்கு அவளும் வரணும் என சொல்கிறார். அப்போது அருகில் இருந்த ஈஸ்வரி, ஜனனி வருவா, அவளை நான் வர வைக்கிறேன் என சொல்கிறார். இதையடுத்து, ஈஸ்வரியை தனியாக அழைத்து சென்று பேசும் ரேணுகா மற்றும் நந்தினியிடம், இந்த கோர்ட், கேஸ் எல்லாம் யார் ஆரம்பிச்சது என கேட்கிறார் ஈஸ்வரி. அவரிடம் நடந்தவற்றை எல்லாம் உடைத்து கூறுவார்களா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Related Stories
Recommended image1
ஜனனி - ஈஸ்வரி இடையே சண்டையை மூட்டிவிட்ட ராவணன் - அனல்பறக்கும் ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
ஜனனியை தீர்த்துக்கட்ட ஈஸ்வரியை பகடைக்காயாக பயன்படுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved