MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கதற கதற சாட்டையடி வாங்கிய ரோகிணி; சந்தோஷத்தில் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

கதற கதற சாட்டையடி வாங்கிய ரோகிணி; சந்தோஷத்தில் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் பேச்சை நம்பி அவரின் ஷோரூமுக்கு வந்த ரோகிணிக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் விஜயா. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 28 2026, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் போலி சாமியார் ரோகிணி சொல்லி தான் நான் உங்களை ஏமாற்றினேன் என விஜயாவிடம் சொல்ல, அவர் எப்படியாவது ரோகிணியை பழிவாங்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார். அவரிடம் நான் ரோகிணியை பழிவாங்க பிளான் வைத்திருப்பதாக கூறி, ரோகிணிக்கு போன் போட்டு பேசுகிறார். அவரிடம் பாசமாக பேசுவது போல் நடித்த மனோஜ், அவரை தன்னுடைய ஷோரூமுக்கு வரச் சொல்கிறார். ரோகிணியும் மனோஜ் மனம் மாறிவிட்டதாக சந்தோஷமடைகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரோகிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி
Image Credit : jiohotstar

ரோகிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

மனோஜ் போன் போட்டு அழைத்ததால், அவரைப் பார்க்க ஆசை ஆசையாய் ரோகிணி ஷோரூமுக்கு வருகிறார். அங்கு பார்த்தால், யாருமே இல்லை, சந்தோஷ் மட்டும் தான் இருக்கிறார். இன்னைக்கு கடை லீவு எல்லாருக்கு செட்டில் பண்ணிக் கொண்டிருக்கிறார் பாஸ், உங்களுக்கு செட்டில் பண்ணப் போறாருனு சொல்லி ரோகிணியை உள்ளே அழைத்து செல்கிறார். உள்ளே சென்று பார்க்கையில், விஜயா கால்மேல் கால்போட்டு சேரில் அமர்ந்திருக்க, அவர் அருகில் மனோஜ் நின்றுகொண்டிருக்கிறார். அதைப்பார்த்ததும் ஏதோ ஒன்னு இங்க நடக்கப்போகுதுனு ரோகிணிக்கு சந்தேகம் வந்துவிட்டது.

35
சாட்டையடி வாங்கும் ரோகிணி
Image Credit : jiohotstar

சாட்டையடி வாங்கும் ரோகிணி

அங்கிருந்து சென்றுவிடலாம் என ரோகிணி கிளம்பப் பார்க்க அவரை மனோஜ் பிடித்துக் கொள்கிறார். கொஞ்ச நேரத்தில், சாட்டையடி கொடுப்பவரை சந்தோஷ் அங்கு அழைத்து வருகிறார். என்ன நீங்க கூப்பிட்டா மட்டும் தான் வருவாரா, காசு கொடுத்தா யார் கூப்டாலும் வருவாரு என சொல்லி, அந்த சாட்டையால் ரோகிணியை அடிக்க வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் அடி தாங்க முடியாமல் ரோகிணி அங்கு சுருண்டு விழுகிறார். எல்லோருமே பயந்துபோகிறார்கள், குறிப்பாக சாட்டையடி கொடுத்தவர், அங்கிருந்து பயந்து ஓடிவிடுகிறார்.

45
மயக்கம் போட்டு விழுந்த ரோகிணி
Image Credit : jiohotstar

மயக்கம் போட்டு விழுந்த ரோகிணி

அதன்பின்னர் சந்தோஷும் விஜயாவும் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். இவ மயக்கம் தெளிஞ்சதுக்கப்புறம், நீயும் வந்திரு என சொல்லிவிட்டு மனோஜை மட்டும் விட்டுச் செல்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ரோகிணிக்கு மயக்கம் தெளிகிறது. அவர் எழுந்ததும், நீ இப்படி பண்ணுவனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல மனோஜ் என சொல்லிவிட்டு ரோகிணி அழுதுகொண்டே அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். சாட்டையடி வாங்கிய ரோகிணிக்கு அவருடைய அம்மா வீட்டில் ஒத்தனம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சிந்தாமணி அங்கு வருகிறார்.

55
விஜயா மீது புகார்
Image Credit : jiohotstar

விஜயா மீது புகார்

நான் தான் அந்த பெண் சாமியாரிடம் உன் பெயரை சொல்ல சொன்னேன் என கூறும் சிந்தாமணி, நான் மாட்டினால் மாஸ்டருக்கும் எனக்கும் இருக்குற நட்பு துண்டிச்சுபோயிடும், அங்க என்ன நடக்குதுனே தெரியாது என கூறுகிறார். பரவாயில்ல ஆண்ட்டினு ரோகிணியும் சொல்கிறார். மறுபுறம் விஜயா வீட்டிற்கு மகளிர் ஆணையத்தில் இருந்து ஒரு பெண்மணி வருகிறார். நீங்க ஆள் வச்சு அடித்ததாக கூறி உன்னுடைய மருமகள் உன்மீது புகார் கொடுத்திருக்கிறார் என விஜயாவிடம் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TTF vasan vs Jason : அடாவடி செய்த ஜேசன்... அடிதடியில் இறங்கிய டிடிஎஃப் வாசன்! போர்களமாக மாறிய பிக் பாஸ் வீடு
Recommended image2
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Recommended image3
Siragadikka Aasai Salary : சிறகடிக்க ஆசை சீரியலில் யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா?
Related Stories
Recommended image1
ரோகிணியை சிக்க வைக்க மக்கு மனோஜ் போட்ட மாஸ்டர் பிளான் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
சவாலில் தோற்றுப்போன விஜயா... சைக்கோவாக மாறிய அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved