MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரோகிணியை சிக்க வைக்க மக்கு மனோஜ் போட்ட மாஸ்டர் பிளான் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

ரோகிணியை சிக்க வைக்க மக்கு மனோஜ் போட்ட மாஸ்டர் பிளான் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், தன்னுடைய அம்மாவை ஏமாற்றிய ரோகிணியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என முடிவெடுத்து பிளான் ஒன்றை போட்டுள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்

2 Min read
Author : Ganesh A
Published : Mar 27 2026, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் நகையை திருடிய போலி பெண் சாமியார், விஜயாவிடம் வந்து மன்னிப்பு கேட்டதோடு, தன்னை இந்த செயலை செய்ய சொன்னது சிந்தாமணி தான் என்று சொல்லாமல் பழியை ரோகிணி மீது தூக்கிப் போட்டிருக்கிறார். இதனால் அவரை பழிவாங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார் விஜயா. மறுபுறம் மனோஜ் ஷோரூமில் இருக்கும் போது ஜீவா அவருக்கு மேட்ரிமோனியில் பார்த்த பெண்ணை வர வைத்திருக்கிறார். யமுனா என்கிற அந்த பெண் மனோஜ் உடன் பேசியுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
மனோஜுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Image Credit : jiohotstar

மனோஜுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மனோஜிடம் யமுனா, இதுவரை தனக்கு 4 முறை கல்யாணம் பிக்ஸ் ஆகியும், சில காரணங்களால் தள்ளிப்போனதாக சொல்கிறார். அது என்ன காரணம் என மனோஜ் கேட்க, முதல்முறை கல்யாணத்துக்கு முன் மாப்பிள்ளையோட அப்பா இறந்துட்டாங்க, அடுத்த முறை மாப்பிள்ளையோட அம்மா இறந்துட்டாங்க. மூன்றாவது முறை அப்பா, அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க, நான்காவது முறை மாப்பிள்ளை ஃபேமிலியே விபத்தில் இறந்துவிட்டது என சொல்ல, அதைக்கேட்டு ஷாக் ஆன மனோஜ், அடுத்த என்னையும் கொல்ல பிளான் பண்றியா என மனசுக்குள்ளேயே நினைத்துக் கொண்டு அவரிடம் யோசித்து சொல்வதாக சொல்லி அனுப்புகிறார்.

Related Articles

Related image1
விஜயா மூஞ்சில் கரியை பூசிய மீனா.. டுபாக்கூர் சாமியாரால் சிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Related image2
சவாலில் தோற்றுப்போன விஜயா... சைக்கோவாக மாறிய அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடந்தது?
35
தடபுடல் விருந்து
Image Credit : jiohotstar

தடபுடல் விருந்து

மறுபுறம் வீட்டில் தடபுடலாக விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. மீனா மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளதால், அதற்காக விருந்து ஏற்பாடு செய்துள்ள அண்ணாமலை தன்னுடைய நண்பன் பரசு, விஜயாவின் தோழி பார்வதி என எல்லோரையும் அழைத்திருக்கிறார். விருந்துக்கு வந்திருந்த சீதாவிடம், அருணுக்கு உன் மேல் இருந்த கோபம் குறைந்துவிட்டதா என அண்ணாமலை கேட்க, அவரும் அவர் சமாதானம் ஆகிவிட்டதாக சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் போலீஸ் வீட்டுக்கு வருகிறது. அவர்களிடம் என்ன சார் எதுவும் பிரச்சனையா என முத்து கேட்க, நாங்க வந்தாலே பிரச்சனையா தான் இருக்குமா என கேட்கிறார் போலீஸ்.

45
கோபத்தில் விஜயா
Image Credit : jiohotstar

கோபத்தில் விஜயா

அவர்கள் திருடர்களை பிடிக்க உதவியதன் விழைவாக தங்கள் நகை திரும்ப கிடைத்ததாக தம்பதியினர் போலீஸ் உடன் வந்து முத்துவுக்கும், மீனாவுக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் அதை முத்து வாங்க மறுத்தாலும், பின்னர் அண்ணாமலை சொன்னதால் வாங்கிக் கொண்டார். இதையெல்லாம் பார்க்க முடியாத விஜயா, மனோஜ் உடன் ரூமுக்குள் சென்று, என்னை இந்த நிலமைக்கு ஆளாக்கிய ரோகிணியை சும்மா விடக் கூடாது என சொல்கிறார். மனோஜும் தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாக சொல்கிறார்.

55
மனோஜ் போடும் பிளான்
Image Credit : jiohotstar

மனோஜ் போடும் பிளான்

இதையடுத்து ஷோரூமுக்கு செல்லும் மனோஜ், அங்கிருந்து தன்னுடைய போனில் இருந்து ரோகிணிக்கு போன் போடுகிறார். இதைக்கேட்டு குஷியான ரோகிணி, மனோஜிடம் ஹாப்பியாக பேச, அவரும் நல்லபடியாக பேசுவதுபோல் நடிக்கிறார். உன்கிட்ட முக்கியமான விஷயம் பேச வேண்டும் என மனோஜ் சொன்னதும், நீ எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன் என சொல்லும் ரோகிணி, போனை வைக்கும் முன் ஐ லவ் யூ சொல்கிறார். மனோஜும் பதிலுக்கு ஐ லவ் யூ டூ என சொல்லி போனை வைக்கிறார். இதனால் குஷியாக இருக்கும் ரோகிணிக்கு லைட்டாக டவுட்டும் வருகிறது. இத்தனை நாள் நம்மீது எரிந்து விழுந்த மனோஜ் இப்போ எதுக்கு பாசமா பேசுறான் என சந்தேகப்படுகிறார். பின்னர் அவனுக்கு நம்மை சிக்க வைக்கும் அளவுக்கு மூளை இல்லை என சொல்லி, அவர் அழைத்த இடத்துக்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரேவதியை காப்பாற்ற ஏன் ஆம்புலன்ஸ் வரவில்லை: இயக்குநர் வச்ச பெரிய டுவிஸ்ட் – கார்த்திகை தீபம் சீரியல் பகீர் ரகசியம்!
Recommended image2
மூன்று முடிச்சு முதல் அழகே அழகு வரை... இந்த வார டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் இதோ
Recommended image3
துளசியின் கொடூர சதி... தவிக்கும் ஆனந்தி! - 'சிங்கப்பெண்ணே' இன்றைய எபிசோட் அதிரடி!-
Related Stories
Recommended image1
விஜயா மூஞ்சில் கரியை பூசிய மீனா.. டுபாக்கூர் சாமியாரால் சிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
சவாலில் தோற்றுப்போன விஜயா... சைக்கோவாக மாறிய அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved