- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அம்மாவை இழந்த கிரிஷ்... அடைக்கலம் தர மறுக்கும் விஜயா; முத்து எடுத்த முடிவு என்ன? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அம்மாவை இழந்த கிரிஷ்... அடைக்கலம் தர மறுக்கும் விஜயா; முத்து எடுத்த முடிவு என்ன? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷின் அம்மா கல்யாணி இறந்துவிட்டதாக லட்சுமி சொல்ல, அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மகேஸ்வரி வீட்டுக்கு சென்று ரோகிணியை சந்தித்து பேசிய மீனா, கிரிஷை எப்படியாவது மனோஜுடன் பழக வைக்குமாறு கூறுகிறார். அதுமட்டுமின்றி நீ கற்பனையிலேயே உருவாக்கிய அம்மா இனி இருந்தா என்ன செத்தால் என்ன என மீனா சொன்னதும், தான் உருவாக்கிய அந்த கல்யாணி கதாபாத்திரத்தை அப்படியே முடிவுக்கு கொண்டு வர முடிவெடுக்கிறார் ரோகிணி. இதற்காக புது பிளான் ஒன்றையும் போட்டிருக்கிறார். அந்த பிளான் படி நடந்தால் கிரிஷ் இனி நம் வீட்டிலேயே இருப்பான் என சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கல்யாணி இறந்துவிட்டதாக கூறும் லட்சுமி
மறுநாள் அண்ணாமலை வீட்டிற்கு வரும் லட்சுமி, முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்கிறார். ஏதாச்சும் பணம் வேணுமா என விஜயா கேட்கிறார். அதெல்லாம் இல்லை என சொல்லும் லட்சுமி, என் பொண்ணு என சொல்லி கண்கலங்கியதும், உங்க மகள் வரமாட்டேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா என முத்து கேட்க, என் பொண்ணு இனி எப்பவுமே வரமாட்டா என சொல்கிறார் லட்சுமி. என்னமா சொல்றீங்க என முத்து கேட்க, என் பொண்ணு ஒரேயடியாக எங்களை விட்டு போயிட்டா என சொல்லும் லட்சுமி, தன் மகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக கூற, மீனா மற்றும் ரோகிணியை தவிர அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
லட்சுமிக்கு ஆறுதல் சொல்லும் விஜயா
என்ன ஆச்சு என முத்து கேட்க, அவள் துபாயில் கார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக கூறுகிறார். இதைக்கேட்கவே கஷ்டமாக இருப்பதாக அண்ணாமலை சொல்ல, அருகில் இருந்த விஜயாவும் அடப்பாவமே உங்களுக்கு ஒரே பொண்ணு தான, எனக்கு என்ன சொல்றதுனே தெரியல என ஃபீல் பண்ணுகிறார். பெத்தவங்க இருக்கும்போது பிள்ளைங்க ஆயுசு முடிவதெல்லாம் பெரிய கொடுமை, மனசை தேத்திக்கோங்க என ஆறுதல் கூறுகிறார் விஜயா. நீங்கள் அங்க போய் பார்த்தீங்களா என முத்து கேட்க, அதற்கு லட்சுமி, அவ முகம் பார்க்க முடியாத அளவுக்கு சேதமடைஞ்சதால் பார்க்க முடியவில்லை. நான் அங்கு செல்லும் வரை உடல் தாங்காது என சொன்னதால் அவளுடைய தோழிகளே இறுதிச் சடங்கை செய்துவிட்டதாகவும் லட்சுமி சொல்கிறார்.
கிரிஷுக்கு அடைக்கலம் தர மறுக்கும் விஜயா
இதையெல்லாம் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மீனா, இது உலக மகா நடிப்புடா சாமி என மனசுக்குள்ளேயே கிண்டலடிக்கிறார். பின்னர் கிரிஷை உங்க வீட்டிலேயே வைத்துக் கொள்ளுமாறு லட்சுமி சொன்னதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஜயா, கிரிஷை இந்த வீட்டில் வைத்துக்கொள்ள முடியாது என கூறுகிறார். ஆனால் அண்ணாமலையும், முத்துவும் கிரிஷ் இங்க தான் இருப்பான் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிடுகிறார்கள். இதையடுத்து என்ன ஆனது? கிரிஷ் வீட்டுக்குள் வந்ததும் மனோஜ் உடன் நெருக்கம் ஆவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

