- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சீதா கொடுக்கும் ஐடியா... ரோகிணி விஷயத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்
சீதா கொடுக்கும் ஐடியா... ரோகிணி விஷயத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய அனைத்து உண்மையும் தெரிந்த மீனா, அவரை காப்பாற்ற புது பிளான் ஒன்றை போட்டிருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் பேசி சமாதானம் ஆன கையோடு, சபரிமலைக்கு சென்ற முத்து, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்ததும் அங்கு மீனா இருப்பதை பார்த்து குஷியாகிறார். பின்னர் முத்துவிடம் தனியாக பேசும் மீனா, இனி குடிக்க மாட்டீங்க தான என கேட்கிறார். அதற்கு முத்து தான் கடவுளிடம் ஒரு புது டீலிங் போட்டிருப்பதாக கூறுகிறார். அது என்ன என மீனா கேட்க, இனிமேல் இந்த நாட்களில் மட்டும் குடிப்பேன் என ஒரு லிஸ்டை சொல்கிறார். அதுமட்டுமின்றி அதற்கு கடவுள் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார். அப்படி பார்த்தால் பாதி நாள் குடிக்க தான் போறீங்க. நீங்க திருந்தவே மாட்டீங்க என கோபமடைகிறார். அதெல்லாம் இல்லை, கொஞ்சம் தான் குடிப்பேன் என சொல்லி மீனவை கூல் டவுன் பண்ணுகிறார் முத்து.
மீனா எடுக்கும் முடிவு
பின்னர் தன்னுடைய அம்மாவீட்டிற்கு செல்லும் மீனா, அங்கு கோவில் பிரசாதத்தை கொடுக்கிறார். அப்போது அங்கு வரும் சீதா, தன்னுடைய ஆஸ்பத்திரியில் மீண்டும் பணம் திருடுபோன விஷயத்தை சொல்கிறார். மேலும் ஒரு பெண் தான் அந்த பணத்தை எடுத்ததாக கூறும் சீதா, அவர் செஞ்சது தப்பு தான், ஆனால் பாவம் வேற வழியில்லாம இப்படி பண்ணிட்டாங்க. அந்த உண்மை வெளியே தெரிவதற்கு முன்னாடி அதை சரி செய்யனும் என கூறுகிறார். இந்த விஷயத்தை ரோகிணி விஷயத்தில் தொடர்பு படுத்தி பார்க்கும் மீனா, அவரைப்பற்றிய உண்மை வெளியே தெரியும் முன் அதை சரி செய்ய முடிவெடுக்கிறார்.
ரோகிணியை சந்திக்கும் மீனா
இதையடுத்து ரோகிணிக்கு போன் போட்டு மீனா பேச, தான் மகேஸ்வரி வீட்டில் இருப்பதாக கூறுகிறார் ரோகிணி. இதையடுத்து அங்கு செல்லும் மீனாவிடம் நல்லா இருக்கியா என ரோகிணியின் அம்மா லட்சுமி கேட்க, அதற்கு அவர், எப்படி நல்லா இருக்க முடியும். உங்க பொண்ணால தினமும் நிம்மதி இல்லாம இருக்கேன் என கோபத்துடன் பேசுகிறார். நீங்களாச்சு என்கிட்ட சொல்லிருக்கலாமே என சொல்ல, என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தான் அதை நான் சொல்லவில்லை என கூறுகிறார் லட்சுமி. அதற்கு மீனா, அவ வாழ்க்கை நல்லா தான் இருக்கு. இப்போ என் வாழ்க்கை தான் என்ன ஆகப்போகுதுனு தெரியல என சொல்கிறார்.
சென்டிமென்டாக பேசும் லட்சுமி
பின்னர் மீனாவிடம் மன்னிப்பு கேட்கும் லட்சுமி, என் பொண்ணு செய்த தப்புக்கெல்லாம் ஒரு வகையில நானும் காரணம் தான். அவளுக்கு புடிக்காத வாழ்க்கையை நான் அமைச்சு கொடுத்துட்டேன். அதுனால தான், இந்த தடவ அவளுடைய முடிவில் நான் தலையிடவில்லை. இருந்தாலும் ஒரு அம்மாவா அவளுடைய வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தான் என்னால நினைக்க முடியும். இந்த விஷயமெல்லாம் உனக்கு தெரிஞ்சது எனக்கு சந்தோஷம் தான் என சென்டிமென்டாக பேசுகிறார் லட்சுமி. இதையடுத்து என்ன ஆனது? ரோகிணியை காப்பாற்ற மீனா என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

