- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மீனாவின் ரீ-எண்ட்ரியால் கதிகலங்கிப் போன ரோகிணி; நீத்துவிற்கு வார்னிங் கொடுத்த ஸ்ருதி - சிறகடிக்க ஆசை சீரியல்
மீனாவின் ரீ-எண்ட்ரியால் கதிகலங்கிப் போன ரோகிணி; நீத்துவிற்கு வார்னிங் கொடுத்த ஸ்ருதி - சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா மீண்டும் வீட்டுக்கு எண்ட்ரி ஆன பின்னர் விஜயா மற்றும் மனோஜ் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். அதன் பின் என்ன ஆனது என்பதை பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீது கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்ற மீனா, முத்துவின் ஐய்யன் பூஜையில் கலந்துகொள்கிறார். அப்போது எதிர்பாரா விதமாக முத்து மீது குங்குமம் கொட்டிவிடுகிறது. இதனால் பதறிப்போன மீனா, வேகமாக சென்று முத்துவின் சட்டையில் கொட்டிய குங்குமத்தை துடைத்துவிடுகிறார். அப்போது மீனாவிடம் மன்னிப்பு கேட்கும் முத்து, நான் மலைக்கு போயிட்டு வருவதற்குள் நீ நம்முடைய வீட்டிற்கு சென்றிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என கூறி இருந்தார். இதனால் மனம் இறங்கிய மீனா, வீட்டுக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார்.
வீட்டுக்கு வந்த மீனா
மீனா பையுடன் வீட்டுக்கு வந்ததை பார்த்த விஜயா, அவரிடம் உன் இஷ்டத்துக்கு வருவியா என கடிந்து பேசுகிறார். பின்னர் இவள் போய்விட்டால் நாம் மறுபடியும் ரோகிணி சமைத்த சாப்பாடை சாப்பிட வேண்டுமே என யோசித்து, சரி வா என வரவேற்கிறார். வந்த உடனே மீனாவை சமைக்க சொல்கிறார் விஜயா, அவரை திட்டும் அண்ணாமலை, மீனா இல்லாதப்போ எப்படி சாப்பிட்டியோ அப்படியே சாப்பிடு என சொல்கிறார். மறுபுறம் மனோஜும், மீனாவை பார்த்ததும் நல்ல வேலை இனி நல்லா சாப்பிடலாம் என மனதுக்குள்ளேயே நினைத்துக் கொள்கிறார்.
ஸ்ருதியிடம் சிக்கும் நீத்து
ஸ்ருதியின் ரெஸ்டாரண்டிற்கு வந்த யூடியூபர்கள் சாப்பாடை வாங்கி நன்கு சாப்பிட்டுவிட்டு, எதுவுமே நல்லா இல்லை எனக்கூறி வீடியோ எடுக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்த ஸ்ருதி, அவர்களின் போனை பிடுங்கி வந்து, எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்ச பின்னர் தான் எதுவுமே நல்லா இல்லனு தோணுச்சா என கேட்கிறார். அதுமட்டுமின்றி அவர்கள் திட்டமிட்டு நெகடிவ் ரிவ்யூ கொடுப்பதை கண்டுபிடித்த ஸ்ருதி, அவர்களை போலீசில் ஒப்படைப்பதாக மிரட்டுகிறார். இதனால் பயந்துபோன அவர்கள் காசை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். பின்னர் இதெல்லாம் நீத்துவின் வேலை தான் என கண்டுபிடித்துவிடுகிறார் ஸ்ருதி. அவருக்கு போன் போட்டு வார்னிங் கொடுக்கிறார்.
மனோஜின் மேனேஜர் கொடுத்த ஐடியா
மனோஜின் கம்பெனியில் பணியாற்றும் மேனேஜர் அவருக்கு ஒரு புது ஐடியா கொடுக்கிறார். தான் ஒரு ஆர்டர் பிடித்து வந்திருப்பதாகவும், அதில் புது மண தம்பதிகளுக்கு தேவையான சீர்வரிசை பொருட்கள் அனைத்தையும் நாமே கொடுக்கலாம் என கூறுகிறார். அதற்கு ரோகிணியும் இந்த ஐடியா நன்றாக இருப்பதாக சொல்கிறார். இதையடுத்து மேனேஜர் ஜீவாவை பாராட்டுகிறார் மனோஜ். இதன்பின் என்ன ஆனது? மீனாவின் வரவால் ரோகிணிக்கு மீண்டும் சிக்கல் வந்துள்ளது. அனைத்து உண்மைகளையும் மீனா சொல்வாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

