- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரோகிணியின் ஃபிராடு வேலையை கண்டுபிடித்த விஜயா... முத்து எடுத்த அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ரோகிணியின் ஃபிராடு வேலையை கண்டுபிடித்த விஜயா... முத்து எடுத்த அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை சந்தித்து பேசிவிட்டு சென்ற ரோகிணியை விஜயா பார்த்துவிடுகிறார். இதையடுத்து வீட்டுக்கு வந்த ரோகிணியிடம் விஜயா என்ன கேட்டார் என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டில் முத்துவிடம் சண்டைபோட்டுவிட்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், அவரை சமாதானப்படுத்த தன் நண்பர்களிடம் ஐடியா கேட்ட முத்து, இன்றைய எபிசோடில் சபரிமலைக்கு மாலை போட்டு, மீனாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் தன்னுடைய மாமியாரிடம், தான் மாலை போட்டுள்ளதால், தனது கார் ஸ்டாண்டில் பூஜை போட இருப்பதாகவும், அதில் தவறாமல் வந்து கலந்துகொள்ளுமாறும் அவரை அழைக்கிறார். அப்போது மீனாவையும் தவறாமல் அழைத்து வருமாறு ஜாடைமாடையாக சொல்லிவிட்டு செல்கிறார்.
மீனா வீட்டில் அண்ணாமலை
பின்னர் மீனாவை பார்க்க அவரின் வீட்டுக்கு வரும் அண்ணாமலை, மீனாவிடம் நீ முத்து குடிக்கிறான் என்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வரவில்லை. அதன் பின்னணியில் வேறு காரணமும் இருக்கு, அது என்ன என கேட்க, மீனா அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லி சமாளிக்கிறார். நீ முத்து குடிச்சான் என்பதற்காக மட்டும் கோபித்துக் கொண்டு வந்திருந்தால், அவன் இப்போ மாலை போட்டு திருந்திட்டான். அதனால் மீண்டும் வீட்டு வந்துவிடு என சொல்லிவிட்டு கிளம்புகிறார். மாமாவிடம் உண்மையை சொல்ல முடியவில்லையே என மிகவும் வருந்துகிறார் மீனா.
ரோகிணியை திட்டிய மீனா
அந்த நேரத்தில் மீனாவுக்கு ரோகிணி போன் போட்டு பேசுகிறார். அப்போது உன்னால் என்ன நிம்மதியே போச்சு, இப்போ எதுக்குடி போன் பண்ணுன என கேட்க, நான் உங்களை பார்த்து பேச வேண்டும், அதனால் நான் சொல்லும் ஹோட்டலுக்கு வாங்க என அழைக்கிறார் ரோகிணி. பின்னர் அங்கு சென்ற மீனாவிடம் நீங்க இந்த விஷயத்தை உங்க அம்மாகிட்ட சொல்லிட்டீங்களானு கேட்க தான் வரச்சொன்னேன் என ரோகிணி சொல்ல, அதைக்கேட்டு டென்ஷன் ஆன மீனா, நீ உன்னோட சுயநலத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வியா, இப்படி பயந்து பயந்து வாழுறதெல்லாம் ஒரு வாழ்க்கையா என திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் மீனா.
விஜயாவிடம் மாட்டிக்கொண்ட ரோகிணி
ரோகிணியும் மீனாவும் ஓட்டலில் இருந்து வெளியே வந்த நிலையில், அந்த வழியாக ஆட்டோவில் சென்ற விஜயா அதை பார்த்துவிடுகிறார். என்ன இவளுங்க நமக்கு தெரியாம மீட் பண்ணிக்கிறாளுங்க, ஏதாவது சதித்திட்டம் தீட்டுறாளுங்களா என்கிற குழப்பத்துடனே ஆட்டோவில் செல்கிறார் விஜயா. இதையடுத்து வீட்டுக்கு வரும் ரோகிணியிடம் எங்கு போயிட்டு வர்ற என கேட்க, அவரோ, மீனாவை பார்த்துவிட்டு வந்ததை மறைக்கிறார். இதனால் டென்ஷன் ஆன ரோகிணி, ஏன்டி பொய் சொல்ற என கேட்க ரோகிணி ஷாக் ஆகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

