- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மீனா மீது வந்த டவுட்... ரோகிணிக்கு முத்து கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
மீனா மீது வந்த டவுட்... ரோகிணிக்கு முத்து கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும் ரோகிணியை முத்து எச்சரித்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை பற்றி எல்லா உண்மைகளும் தெரிந்தும் அதை வெளியே சொல்ல முடியாமல் மூடி மறைத்து வந்த மீனா, வீட்டில் இருந்தால் தனக்கு அதைப்பற்றிய குற்ற உணர்ச்சி இருப்பதால், அங்கிருந்து வெளியேற முடிவெடுக்கிறார். இதனால் முத்துவிடம் வேண்டுமென்றே சண்டைபோடும் மீனா, தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறி கிளம்பிச் செல்கிறார். மீனா வீட்டை விட்டு வெளியேறியதால் முத்துவை அவரது தந்தை அண்ணாமலை திட்டுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சத்யாவுக்கு ஐடியா கொடுக்கும் ரேகா
வீட்டுக்கு வந்த மீனாவிடம் அவரது அம்மா மற்றும் தம்பி சத்யா இருவரும் என்ன பிரச்சனை என்று கேட்கின்றனர். மாமா கூட சண்டை போட்டு வந்துட்டியா என்று கேட்டதும் கண்ணீர் விட்டு அழத் தொடங்குகிறார் மீனா. இதனால் அவரை சமாதானப்படுத்தும் அம்மா, நீ எதுவும் சொல்ல வேண்டாம் என சொல்கிறார். பின்னர் ஆபிஸுக்கு செல்லும் சத்யா, அங்கு டல் ஆக இருப்பதை பார்க்கும் அவரது பாஸ் ரேகா, அவரிடம் என்ன ஆச்சு என கேட்க, குடும்பத்தில் பிரச்சனை என சொல்கிறார். அந்த பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என சத்யாவுக்கு ஐடியா கொடுக்கிறார் ரேகா. பின்னர் சத்யா, முத்துவை சந்திக்கிறார்.
முத்துவுக்கு வந்த சந்தேகம்
சத்யாவிடம் என்ன நடந்தது என்பதை சொல்கிறார் முத்து. நான் குடிச்சுட்டு வந்ததால் தான் அவ கோபிச்சுட்டு போனால் என்பதை என்னால் ஏத்துக்கவே முடியவில்லை என்று சத்யாவிடம் சொல்லி புலம்பும் முத்து, கண்டிப்பாக அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது என சொல்லும் முத்து. அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என கூறுகிறார். மறுபுறம் வீட்டில் மீனா இல்லாததால், அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார் ரோகிணி. வீடு துடைத்துவிட்டு, அண்ணாமலைக்கு காஃபி போட்டு கொடுக்கிறார். அந்த காஃபி மோசமாக இருப்பதாக அண்ணாமலை சிக்னல் கொடுக்க மற்றவர்கள் உஷாராகி எங்களுக்கு காஃபி வேண்டாம் என சொல்கிறார்கள்.
ரோகிணியை எச்சரித்த முத்து
பின்னர் காலை டிபன் செய்கிறேன் என ரோகிணி சொல்ல, ஸ்ருதி, ரவி ஆகியோர் தாங்கள் வெளியே சாப்பிட்டுக் கொள்வதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். ரோகிணி இப்படு விழுந்து விழுந்து வேலை செய்வதை பார்த்த முத்து, இனி மீனா இந்த வீட்டுக்கு வரவே கூடாதுங்குறதுக்காக நீ இதெல்லாம் பண்ணுறியா என கேட்கிறார். இதையடுத்து என்ன ஆனது? மீனா அனைத்து உண்மையையும் தன்னுடைய அம்மாவிடம் சொன்னாளா? முத்து - மீனா சண்டை முடிவுக்கு வருமா? ரோகிணி சிக்குவாரா? மாட்டாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

