- Home
- Cinema
- தொலைக்காட்சி
- முத்து உடன் மோதல்.. வீட்டை விட்டு வெளியேறும் மீனா; ரோகிணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - சிறகடிக்க ஆசை அப்டேட்
முத்து உடன் மோதல்.. வீட்டை விட்டு வெளியேறும் மீனா; ரோகிணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - சிறகடிக்க ஆசை அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து குடித்துவிட்டு வந்ததால், அவருடன் சண்டைபோட்ட மீனா, வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றிருக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிந்த பின்னர் அதை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் குமுறி வருகிறார் மீனா. வீட்டில் இருப்பவர்களிடமும் முத்துவிடமும் உண்மையை மறைக்க மனமில்லாத மீனா, வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார். இதனால் முத்துவுடன் சண்டை போட்டு, அதை ஒரு காரணமாக வைத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார் மீனா. இதையடுத்து குடிபோதையில் வீட்டுக்கு வரும் முத்து குடும்பத்தினரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொள்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
வீட்டை விட்டு வெளியேறும் மீனா
முத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் மீனாவை தேடுகிறார். அப்போது அவள் வீட்டை விட்டு சென்றுவிட்ட விஷயத்தை அனைவரும் கூறுகிறார்கள். இப்படி குடித்துவிட்டு வந்தால் உன்கூட யாரு வாழ்வா என விஜயாவும் திட்டுகிறார். பின்னர் அண்ணாமலையிடம் என்ன நடந்தது என முத்து கேட்கிறார். அதற்கு அவர், நீ குடியை விட்டால் தான் திரும்பி இந்த வீட்டுக்குள் வருவேன் என சொல்லிவிட்டு மீனா தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறுகிறார். இவன் குடியெல்லாம் நிறுத்த மாட்டான், அவளும் இந்த வீட்டுக்கு வரமாட்டா, அதனால் நிம்மதியா இருக்கலாம் என விஜயா சொல்ல, அதற்கு அண்ணாமலை டென்ஷன் ஆகிறார்.
செம டோஸ் வாங்கிய விஜயா
மீனா வீட்டை விட்டு கிளம்பும் போது தடுத்து நிறுத்திய விஜயா, நீ இப்படி திடீர்னு வீட்டை விட்டு போயிட்டா, வீட்டு வேலையெல்லாம் யார் செய்வா என கேட்க, அதற்கு மீனா, நான் ஒன்னும் இந்த வீட்டு வேலைக்காரி இல்லை அத்தை, நானும் இந்த வீட்டு மருமகள் தான். நான் இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னாடி யார் பார்த்தாங்களோ அவங்களே பார்க்கட்டும் என ரோகிணியை பார்த்து சொல்லிவிட்டு கிளம்புகிறார் மீனா. பின்னர் முத்துவுக்கு அட்வைஸ் பண்ணும் ஸ்ருதி, முத்து குடிப்பது புதுசில்ல, ஆனால் அதை ஒரு காரணமாக வச்சிட்டு மீனா சென்றதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சொல்கிறார்.
ரோகிணிக்கு செம சம்பவம் வெயிட்டிங்
மீனா வீட்டை விட்டு கிளம்பியதால் ரோகிணி ஒரு பக்கம் நிம்மதி அடைந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இனி வீட்டு வேலையெல்லாம் ரோகிணி தான் செய்ய வேண்டும் என்கிற சூழல் வருகிறது. அவர் வீட்டை பெருக்கி, அனைவருக்கு காஃபி போட்டு கொடுப்பதை பார்த்த முத்து, இனி மீனா வீட்டுக்கு வரவே கூடாதுனு முடிவு பண்ணிட்டீங்களா என கேட்கிறார். இதையடுத்து என்ன ஆனது? கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்ற மீனாவை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தாரா முத்து? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

