- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரோகிணியோடு சேர்ந்து கூட்டுக் களவாணியாக மாறும் மீனா... சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் செம ட்விஸ்ட் வெயிட்டிங்
ரோகிணியோடு சேர்ந்து கூட்டுக் களவாணியாக மாறும் மீனா... சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் செம ட்விஸ்ட் வெயிட்டிங்
சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணியை பற்றிய உண்மையை வீட்டில் உள்ளவர்களிடம் மீனா உடைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரே கூட்டுக் களவாணியாக மாறி இருக்கிறார்.

Unexpected Twist in Siragadikka Aasai Serial
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்தும் அதை யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்து வருகிறார் மீனா. இதற்கு முக்கிய காரணம் ரோகிணி தான், அவர் மீனாவிடம், நீங்க உண்மையை சொன்னால் நானும் கிரிஷும், தற்கொலை செய்துகொள்வோம் என ரோகிணி பிளாக்மெயில் செய்த காரணத்தால் தான் மீனா, உண்மையை சொல்லாமல் அமைதி காத்து வருகிறார். இருப்பினும் அந்த குற்ற உணர்ச்சி மீனாவை வாட்டிவதைத்து வருகிறது. இதில் அடுத்த வாரம் ஒரு எதிர்பாரா ட்விஸ்ட் ஒன்று காத்திருக்கிறது. அது என்னவென்றால் ரோகிணியுடன் மீனாவும் கூட்டு சேர்ந்திருக்கிறார் அதைப்பற்றி பார்க்கலாம்.
வித்யாவுக்கு செம டோஸ் கொடுக்கும் மீனா
ரோகிணி இத்தனை நாள் செய்த பிராடு வேலைக்கு வித்யாவும் உடந்தையாக இருந்ததால் அவரை சந்தித்து நறுக்குனு நாலு கேள்வி கேட்பதற்காக மகேஸ்வரி வீட்டிற்கு செல்கிறார் மீனா. அப்போது ரோகிணியும் அங்கே இருக்கிறார். அவரைப்பார்த்து டென்ஷன் ஆன மீனா, ஒழுங்கு மரியாதையா வீட்ல உள்ள எல்லோரிடமும் உண்மையை சொல்லிடு என மீனா, ரோகிணியை கட்டாயப்படுத்துகிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் ரோகிணி, கிரிஷ் என்னுடனும் மனோஜ் உடனும் சேர்ந்த பின்னர் தான் சொல்ல முடியும் என கூறிவிடுகிறார்.
ரோகிணிக்கு மீனா கொடுத்த ஐடியா
மனோஜ் ஒரு இடத்திலும் கிரிஷ் ஒரு இடத்திலும் இருந்தால் எப்படி அவர்களுக்குள் நெருக்கம் வரும் என மீனா கேட்கிறார். அதற்கு ரோகிணி, நாம் ஏற்கனவே கிரிஷின் அம்மா துபாயில் இருக்கிறார் என்று கூறி இருப்பதால், எப்படி கிரிஷை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வர முடியும் என கேட்கின்றார். இதற்கு மீனா, அவங்க நீ கற்பனையில உருவாக்குன அம்மா தான, அந்த அம்மா இருந்தா என்ன, செத்தால் நமக்கென்ன என பேச்சுவாக்குல மீனா கத்துகிறார்.
அடுத்தடுத்த ட்விஸ்ட்
இதைக்கேட்டதும், நல்ல ஐடியா கொடுத்தீங்க மீனா என சொல்லி, தன்னுடைய கிரிமினல் புத்தியை உபயோகித்து ஒரு திட்டம் தீட்டுகிறார். அது என்னவென்றால், துபாயில் இருந்த கிரிஷோட அம்மா, அங்கேயே இறந்துவிட்டார் என புதுக்கதையை கட்டி, பாவம் கிரிஷுக்கு இனிமேல் யாருமே என சொல்லி அவனை நம்முடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என ஐடியா கொடுக்கிறார். இதற்கு மீனாவும் சம்மதம் தெரிவித்து கிரிஷை, ரோகிணியோடு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்போகிறார். இதன்மூலம் வித்யா, மகேஸ்வரி, ரோகிணி கூட சேர்ந்து மீனாவும் கூட்டுக் களவாணி ஆகப்போகிறார். இந்த ட்விஸ்டை யாருமே எதிர்பார்க்கல.

