- Home
- Cinema
- தொலைக்காட்சி
- திருட்டுப் பழி போட்ட ரோகிணி - மனோஜுக்கு செக் வைக்கும் ராஜா - ராணி! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
திருட்டுப் பழி போட்ட ரோகிணி - மனோஜுக்கு செக் வைக்கும் ராஜா - ராணி! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில், ராஜா - ராணி மீது திருட்டுப் பழி போட்ட ரோகிணிக்கு விசாரணையில் செம ட்விஸ்ட் காத்திருக்கிறது.

Siragadikka aasai serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் வார வாரம் ட்விஸ்ட்டுக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் இந்த வாரமும் செம ட்விஸ்டோடு தான் ஆரம்பமாகி இருக்கிறது. கிரீஷின் பாட்டி தொலைந்துபோன நிலையில், அவனை வீட்டை விட்டு வெளியேற்ற விஜயா மற்றும் மனோஜ் முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால் முத்து அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். பின்னர் மனோஜின் கடையில் இருந்த லாக்கரில் இருந்து 3 லட்சம் ரூபாய் திருடுபோனது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து ஷாக் ஆகிறார்கள். அந்த பணத்தை ரோகிணி தான் எடுத்திருப்பாள் என்று விஜயா சந்தேகப்படுகிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடில், கிரீஷை வேறு ஸ்கூலில் சேர்ப்பதற்காக அவனை அழைத்து செல்கிறார் ரோகிணி. மறுபுறம் முத்து மற்றும் மீனா இருவரும் கிரீஷின் பாட்டியை தேடி அலைகிறார்கள். அதேபோல் சிதா ஃபேமிலி டிரிப் செல்வதற்காக ஒட்டுமொத்த குடும்பத்தோடும் கிளம்புகிறார். அந்த நேரத்தில் முத்து மேல் உள்ள ஈகோவால் அவரை வச்சு செய்கிறார் அருண். மறுபுறம் ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்குகிறார்கள். முன்னதாக ரோகிணி தங்கள் கடையில் வேலை செய்யும் ராஜா - ராணி தான் பணத்தை திருடிவிட்டதாக அவர்கள் மீது புகார் கொடுத்திருந்தார்.
மனோஜ் - ரோகிணிக்கு ஆப்பு
இந்த நிலையில், ராஜா - ராணி இருவரும் வக்கீலோடு வந்து, தங்கள் மீது எந்தவித தவறும் இல்லை... பணத்தை அவர்களே எடுத்துக் கொண்டு எங்கள் மீது வீண் பழி போடுகிறார்கள் என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தன்னுடைய மனைவியிடம் மனோஜ் தவறாக நடந்துகொண்டதாக ராஜா ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இதைக்கேட்ட ரோகிணி ஷாக் ஆகிறார். அதற்கான ஆதாரமும் தங்களிடம் இருப்பதாக வக்கீல் சொல்கிறார். இதனால் பதறிப்போன மனோஜ், தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். இதை இப்படியே விட வேண்டும் என்றால் தாங்கள் எடுத்ததாக சொன்ன பணத்தை எங்களிடம் கொடுக்க வேண்டும் என டீல் பேசுகிறார்கள்.
செக் வைத்த ராஜா - ராணி
இதனால் மனோஜ் - ரோகிணி இருவரும் ராஜா - ராணிக்கு 3 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்கிற இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். மனோஜ் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டாரா? எப்போ அது நடந்தது? என்ன ஆதாரம் அவர்களிடம் இருக்கிறது? என பல கன்பியூஷன் ரோகிணிக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் இருக்கிறது. அதற்கெல்லாம் விடை இனி வரும் எபிசோடுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மனோஜ் செய்த தில்லு முல்லு வேலை வெளிவரவும் வாய்ப்பு உள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.