- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கிரீஷை அனாதை இல்லத்தில் சேர்க்க சொல்லும் விஜயா; முத்து எடுத்த அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்
கிரீஷை அனாதை இல்லத்தில் சேர்க்க சொல்லும் விஜயா; முத்து எடுத்த அதிரடி முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில், கிரீஷ் வீட்டில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஜயா மற்றும் மனோஜால் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka aasai serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷின் பாட்டி மருத்துவமனையில் இருந்து காணாமல் போனதால், அவரை தேடிக் கண்டுபிடிக்க முத்துவும் மீனாவும் முனைப்பு காட்டி வருகிறார்கள். அதுவரை கிரீஷ் நம்ம வீட்டில் தங்கட்டும் என முத்து, மீனா முடிவெடுத்திருக்க, அதற்கு விஜயா எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் கிரீஷின் மனம் புண்படும் வகையில் பேசிவிடுகிறார். இதனால் கிரீஷ் மனமுடைந்து சாப்பிடாமல் சென்றுவிடுகிறார். இதையடுத்து கிரீஷின் பாட்டியை கண்டுபிடிக்க என்ன வழி என தெரியாமல் முத்து இருக்க அவருக்கு மீனா ஒரு ஐடியா கொடுக்கிறார். அது என்ன என்பதை பார்க்கலாம்.
கிரீஷ் பாட்டியை கண்டுபிடிக்க நடக்கும் வேலை
கிரீஷ் படிக்கும் பள்ளியில் அவருடைய பாட்டி மற்றும் அம்மாவின் புகைப்படம் இருக்கும் அதை வைத்து அவர்களை கண்டுபிடித்துவிடலாம் என கூறுகிறார் மீனா. அதன்பின் அண்ணாமலை கிரீஷ் படிக்கும் பள்ளியில் அவர் தொடர்பான விவரங்களை போனிலேயே கேட்டு வாங்குகிறார். அப்போது அவரின் பாட்டி புகைப்படம் மட்டும் தான் பள்ளியில் இருப்பதாகவும் அவனின் அம்மா பெயர் கல்யாணி என்றும், அவர் வெளிநாட்டில் இருப்பதாக பள்ளியில் கூறியதாக அண்ணாமலை சொல்கிறார். அந்த நேரத்தில் அருகில் இருக்கும் ரோகிணி, நல்ல வேளை கிரீஷின் பள்ளியில் என்னுடைய புகைப்படம் கொடுக்கவில்லை என நிம்மதி அடைகிறார்.
ரோகிணி அறையில் கிரீஷ்
இதையடுத்து இரவில் முத்து - மீனாவின் அறையில் உறங்கும் கிரீஷ், திடீரென இரவில் எழுந்து தன்னுடைய அம்மாவான ரோகிணியிடம் சென்று, அவர் மடியில் படுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் திடீரென தூக்கத்தில் எழுந்துவிடுகிறார். இதனால் ரோகிணி மற்றும் கிரீஷ் ஷாக் ஆகின்றனர். பின்னர் அவர் தூக்கத்தில் பேசுவதை அறிந்து இருவரும் சிரிக்கிறார்கள். அந்த நேரத்தில் எழும் முத்து மற்றும் மீனா, கிரீஷை காணவில்லை என வீடு முழுவதும் தேடுகிறார்கள். அப்போது ரோகிணி அறையில் இருந்து கிரீஷ் வருவதை பார்த்து, என்ன என கேட்க, பாத்ரூம் சென்றதாக சொல்லி தப்பிக்கிறார் கிரீஷ். அவன் ஏன் அடிக்கடி ரோகிணி ரூமுக்கு செல்கிறான் என மீனாவுக்கு டவுட் வருகிறது. முத்து அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லி மீனாவை அழைத்து செல்கிறார்.
கிரீஷை வெளியே அனுப்ப நடக்கும் ஓட்டெடுப்பு
மறுநாள் விஜயா, கிரீஷை அனாதை இல்லத்தில் சேர்த்துவிடுமாறு கூறுகிறார். இதனால் கடுப்பாகும் முத்து, கிரீஷ் அனாதை இல்லை அவனுக்கு நாங்க இருக்கோம் என கூறுகிறார். உடனே மனோஜ் அவன் இந்த வீட்டில் இருப்பதை நீ மட்டும் முடிவு செய்யக் கூடாது, என சொல்லி ஓட்டெடுப்பு நடத்துகிறார். அப்போது கிரீஷ் வீட்டில் இருக்க வேண்டும் எனக் கூறி முத்து, மீனா, அண்ணாமலை ஆகியோர் கை தூக்குகிறார்கள். அவன் வீட்டில் இருக்க வேண்டாம் என கூறி மனோஜ், விஜயா மட்டும் கை தூக்குகிறார்கள். மனோஜ் ரோகிணியையும் கைதூக்க சொல்ல, அவரும் தூக்க வரும் நிலையில், அவர் கையை பிடித்து கெஞ்சுகிறார் கிரீஷ். பின்னர் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.