பொன்னி சீரியலில் திடீர் என மாற்றப்பட்ட நடிகர்! இனி அவருக்கு பதில் இவர்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பொன்னி' சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னி சீரியல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்குமே, இல்லத்தரசிகள் மத்தியிலும், இளம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் சுமார் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் 'பொன்னி' சீரியலுக்கு தற்போது தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
பொன்னி சீரியல் நடிகர்கள்:
2023 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல், இரண்டு ஆண்டுகளாக விறுவிறுப்பான காட்சிகளுடனும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வைஷ்ணவி சுந்தர், பொன்னி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்க, இவருக்கு ஜோடியாக சபரிநாதன் சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில், ரிஹானா, சூப்பர் குட் கண்ணன், வருன் உதய், கார்த்திக் சசிதரன், ஸ்ரீதேவி அசோக், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வசந்த் வெற்றி - வைஷ்ணவி திருமணம் எப்போது? தீவிரமாக நடக்கும் ஏற்பாடுகள்!
தடைபடும் பொன்னி திருமணம்
பொன்னியை சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தான் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பொன்னியின் அம்மா இளம் வயதாக இருக்கும் போதே இறந்துவிடும் நிலையில் அப்பாவும் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுகிறார். கடைசி காலத்தில் தன்னுடைய மகளை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என நினைப்பதால் பொன்னிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது பொன்னியின் அப்பா விபத்தில் சிக்குவதால் இந்த, திருமணம் தடைபடுகிறது. பொன்னி தந்தையின் நண்பரான சந்திரசேகரன் தன்னுடைய வீட்டில் ஒரு வேலைக்காரியாக தஞ்சம் அடைகிறார்.
பொன்னி மற்றும் அன்புடன் கண்மணி மகாசங்கமம்
பொன்னி சந்தசேகரின் மகனை திருமணம் செய்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. பின்னர் ஒவ்வொரு நாளும் பல திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பொன்னி மற்றும் அன்புடன் கண்மணி என்கிற சீரியலின் மகாசங்கமம் நடந்து கொண்டிருக்கிறது.
மாற்றப்பட்ட நடிகர்கள்
மாமியார் மற்றும் குடும்பத்தின் முன்னிலையில் சக்தி திருமணம் நின்று போனதுக்கு தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்பதை நிரூபித்து விட்டு, வீட்டை விட்டே வெளியேறியுள்ளார். கண்மணி மற்றும் அன்பு வீட்டில் இருக்கும் இவரை, சக்தி வலைபோட்டு தேடி கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான், முதல் சில வாரங்கள் மட்டுமே காட்டப்பட்ட பொன்னியின் அப்பா கதாபாத்திரம் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். அதன்படி, முத்தையா கதாபாத்திரத்தில் நடித்து வந்த வின்சென்ட்-க்கு பதில், அழகு இனி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.