- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அக்டோபர் மாதத்தில் இருந்து அதிரடியாக மாற்றப்படும் விஜய் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் - காரணம் என்ன?
அக்டோபர் மாதத்தில் இருந்து அதிரடியாக மாற்றப்படும் விஜய் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் - காரணம் என்ன?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் மற்றும் சிந்து பைரவி ஆகிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தை அதிரடியாக மாற்றி உள்ளனர். அதன் பின்னணியை பார்க்கலாம்.

Vijay TV Serial Timing Changed
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நேரம் மாற்றப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றப்பட இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 5-ந் தேதி தொடங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவால் இரண்டு சீரியல்களின் நேரத்தை அதிரடியாக மாற்ற உள்ளது விஜய். அது என்னென்ன சீரியல், அந்த சீரியல்கள் இனி எந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட உள்ளன என்கிற தகவலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்
விஜய் டிவியின் சின்ன மருமகள் மற்றும் சிந்து பைரவி ஆகிய சீரியல்களின் நேரம் தான் மாற்றப்பட உள்ளது. சின்ன மருமகள் சீரியல் தற்போது இரவு 9.30 மணிக்கும், சிந்து பைரவி சீரியல் இரவு 10 மணிக்கும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6-ந் தேதி திங்கட்கிழமை முதல் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளதால், சின்ன மருமகள் மற்றும் சிந்து பைரவி சீரியல்களின் நேரம் மாற்றப்பட இருக்கிறது.
புதிய டைமிங் என்ன?
விஜய் டிவி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆஹா கல்யாணம் சீரியல் முடிவடைந்துள்ளதால், அந்த நேரத்தில் பூங்காற்று திரும்புமா சீரியல் ஒளிபரப்பாக வாய்ப்பு உள்ளது. இந்த சீரியல் தற்போது 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் 6.30 மணிக்கு சிந்து பைரவி சீரியல் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. சின்ன மருமகள் சீரியலுக்கு இரவு 7.30 மணி ஸ்லாட் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேர மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
டிஆர்பி அடிவாங்குமா?
சின்ன மருமகள் சீரியல் 9.30 மணிக்கு ஒளிபரப்பான போது தான் டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வந்தது. ஆனால் தற்போது 7.30 மணிக்கு மாற்றப்பட்டால் அதன் ரேட்டிங் அடிவாங்க வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்னர் பாக்கியலட்சுமி சீரியலும் இதேபோல் நேரம் மாற்றப்பட்டதால் டிஆர்பியில் அடிவாங்கி, சில மாதங்களில் சீரியலையே இழுத்து மூடும் நிலை உருவானது, அதுபோன்ற நிலை சின்ன மருமகள் சீரியலுக்கும் வந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.