- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சிக்கிய ஆதாரம்; குணசேகரனின் கொட்டத்தை அடக்கும் கொற்றவை - தீப்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
சிக்கிய ஆதாரம்; குணசேகரனின் கொட்டத்தை அடக்கும் கொற்றவை - தீப்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியை குணசேகரன் தாக்கியதற்கான ஆதாரம் சிக்கி உள்ள நிலையில், அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியின் உடல்நிலை பற்றி டாக்டர் கூறியதைக் கேட்டு உறவினர்கள் அனைவரும் ஷாக் ஆகின்றனர். ஈஸ்வரியை கழுத்தை நெரித்து, சுவற்றில் தள்ளி தாக்கி இருப்பதாக டாக்டர் கூறியதும் அனைவரின் சந்தேகமும் ஆதி குணசேகரன் மீது திரும்புகிறது. அந்த ஆள் தான் இப்படி செய்திருப்பார், அவர்மீது ஆக்ஷன் எடுங்க என கொற்றவையிடம் தர்ஷன், தர்ஷினி கூற, அதற்கு ஜீவானந்தம், இது எமோஷனலாக எடுக்குற முடிவு கிடையாது. முறையான ஆதாரங்கள் இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது. தற்போது சென்று கேட்டால் கூட ஜீவானந்தம் தான் செய்தான் என்று கூட சொல்லிவிடுவார்கள் என சொல்கிறார்.
அறிவுக்கரசியிடம் சிக்கும் ஆதாரம்
பின்னர் இந்த கேஸை எடுக்க அனுமதி வாங்கும் கொற்றவை, அதை தானே விசாரிக்க உள்ளதாகவும் கூறுகிறார். உடனே குணசேகரனின் வீட்டுக்கு செல்ல கிளம்பும் கொற்றவையிடம் தர்ஷனும், தர்ஷினியும் உடன் செல்கின்றனர். அந்த நேரத்தில் ஈஸ்வரி அடிபட்டு கிடந்த அறையில் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று அறிவுக்கரசி தேடி வருகிறார். அப்போது அவருக்கு அங்கு ஒரு ஃபோன் சிக்குகிறது. அந்த ஃபோனில் ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இதைப்பார்த்து அறிவுக்கரசி ஷாக் ஆன நிலையில், அந்த ஆதாரத்தை தன்னுடைய ஃபோனுக்கு மாற்ற முயற்சிக்கிறார்.
அதிரடி ஆக்ஷனில் இறங்கிய கொற்றவை
அந்த சமயத்தில் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கும் கொற்றவை, நேராக ஈஸ்வரி அடிபட்டு கிடந்த அறைக்கு செல்கிறார். அப்போது அறை பூட்டி இருப்பதை கண்டதும் அவரும் சந்தேகம் அதிகமாகிறது. அந்த சமயத்தில் உள்ளே அறிவுக்கரசி மாட்டிக் கொண்டு முழிக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் கீழே வரும் கொற்றவை, இந்த வீட்டுப் பெண்களெல்லாம் அங்கு தீயா இருக்காங்க என குணசேகரனிடம் சொல்கிறார். அதற்கு அவர், சொத்தே அழிந்தாலும் சரி, இந்த வழக்கில் நான் ஜெயித்துக் காட்டுகிறேன் என கூறுகிறார். இதன்பின் கொற்றவையுடன் தர்ஷனும் தர்ஷினியும் ஆஸ்பத்திரிக்கு கிளம்புகிறார்கள்.
ஆதி குணசேகரனுக்கு ஆப்பு கன்ஃபார்ம்
அப்போது தர்ஷனை வீட்டில் இருக்க சொல்லும் கதிர், உங்க அம்மா செத்துட்டானு செய்தி வரும் அப்போ போயிக்கோ என நக்கலாக சொல்கிறார். இதைக்கேட்டு கடுப்பான தர்ஷன், அவரிடம் எகிற, என்னடா குரல் உசறுது என ஆதி குணசேகரன் சவுண்டு விடுகிறார். இதனால் இன்றைய எபிசோடு அனல்பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. அறிவுக்கரசி தன்னிடம் சிக்கிய ஆதாரத்தை போலீசிடம் ஒப்படைப்பாரா? அல்லது தானே வைத்துக் கொண்டு ஆதி குணசேகரனை பிளாக்மெயில் செய்வாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். ஒருவேளை இந்த ஆதாரம் போலீசிடம் சிக்கினால், குணசேகரன் கைதாவார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.