குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனில் நடந்த திடீர் டுவிஸ்ட்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷன் வீக் என்பதால் யார் வெளியேறப்போகிறார்கள் என்கிற பதற்றத்துடனே ரசிகர்கள் இருந்து வந்த நிலையில், நடுவர்கள் இருவரும் திடீர் டுவிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் இதில் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கும் அதுதான் முக்கிய காரணம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்து மன அழுத்தத்தில் இருந்த மக்களை மனம்விட்டு சிரிக்க வைத்த பெருமை இந்நிகழ்ச்சிக்கு உண்டு. இதனால் முதல் சீசனிலேயே இந்நிகழ்ச்சி வேறலெவலில் ஹிட் அடித்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து நடந்த இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகாவும் டைட்டிலை தட்டிச் சென்றனர். வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இதுவரை கிஷோர் மட்டும் எலிமினேட் ஆகி உள்ளார்.
இதையும் படியுங்கள்... தம்மாத்தூண்டு உடையில் கவர்ச்சியை அள்ளிவீசி... விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த லாஸ்லியா - வைரலாகும் போட்டோஸ்
கடந்த வாரம் இம்மியூனிட்டி வீக் என்பதால் அந்த வாரம் எலிமினேஷன் எதுவும் கிடையாது. அதேபோல் அந்த வாரம் வெற்றிபெற்ற ஆண்ட்ரியன் இந்த வாரம் நடந்துள்ள எலிமினேஷன் டாஸ்க்கில் இருந்து தப்பித்து சேஃப் ஜோனில் உள்ளார். இந்த வாரம் எலிமினேஷன் வீக் என்பதால் யார் வெளியேறப்போகிறார்கள் என்கிற பதற்றத்துடனே ரசிகர்கள் இருந்து வந்த நிலையில், நடுவர்கள் இருவரும் திடீர் டுவிஸ்ட் ஒன்றை கொடுத்துள்ளனர்.
அதன்படி இந்த வாரம் எலிமினேஷனே கிடையாது என அறிவித்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். வழக்கமாக இறுதிவாரம் நெருங்கும் சமயத்தில் தான் நோ எலிமினேஷன் என அறிவிப்பார்கள். ஆனால் இந்தமுறை ஆரம்ப கட்டத்திலேயே நோ எலிமினேஷன் என அறிவித்துள்ளதால் போட்டியாளர்களும் உற்சாகத்தில் திளைத்துப்போயினர்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனா இது..? சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஜெயம் ரவி