பொன்னியின் செல்வனா இது..? சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஜெயம் ரவி
சைரன் படத்திற்காக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியுள்ள நடிகர் ஜெயம்ரவியின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இப்படத்தில் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனாக நடித்து அசத்தி இருந்தார் ஜெயம் ரவி. அவரின் நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்து இருந்ததோடு, பாராட்டுக்களையும் பெற்றது. விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் ரிலீசாக உள்ளது.
இதுதவிர இறைவன், சைரன், அகிலன் போன்ற படங்களையும் கைவசம் வைத்துக் கொண்டு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இதில் அகிலன் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை பூலோகம் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... 4 மணிநேரம் மேக்-அப் போட்டு... காந்தாரா கெட்-அப்பில் கம்பீரமாக வந்த புகழ் - புல்லரிக்க வைக்கும் வீடியோ இதோ
அதேபோல் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிப்பில் சைரன் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது.
சைரன் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சைரன் படத்திற்காக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியுள்ள நடிகர் ஜெயம்ரவி சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஏலே படத்தை.. இரக்கமே இல்லாம திருடிருக்காங்க..! மம்முட்டி படத்தை வெளுத்து வாங்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம்