தம்மாத்தூண்டு உடையில் கவர்ச்சியை அள்ளிவீசி... விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்த லாஸ்லியா - வைரலாகும் போட்டோஸ்
நடிகை லாஸ்லியா, குட்டி ஸ்கர்ட் அணிந்து தொடையழகு முழுவதும் தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிய லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. அந்த வகையில் இவர் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்தார் லாஸ்லியா.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தனது சக பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷன் உடன் கூட்டணி அமைத்த லாஸ்லியா, அவருக்கு ஜோடியாக கூகிள் குட்டப்பா என்கிற திரைப்படத்தில் நடித்தார். கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்த இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படம் பிளாப் ஆனதால், லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனா இது..? சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஜெயம் ரவி
இதையடுத்து சட்டென உடல் எடையை குறைத்த லாஸ்லியா, படவாய்ப்புகளை பிடிப்பதற்காக படிப்படியாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பினார். விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் லாஸ்லியா. அவரின் இந்த அதிரடி மாற்றம் அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை லாஸ்லியா, அங்கு எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்கூல் பொண்ணு போல் குட்டி ஸ்கர்ட் அணிந்து தொடையழகு முழுவதும் தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வரும் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... 4 மணிநேரம் மேக்-அப் போட்டு... காந்தாரா கெட்-அப்பில் கம்பீரமாக வந்த புகழ் - புல்லரிக்க வைக்கும் வீடியோ இதோ