- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உடல் ரீதியாக டார்ச்சர் செய்தார்: சரவணனுக்கு எதிரா பொய் சொன்ன மயில்: ஷாக்கான பாண்டியன் அண்ட் ஃபேமிலி!
உடல் ரீதியாக டார்ச்சர் செய்தார்: சரவணனுக்கு எதிரா பொய் சொன்ன மயில்: ஷாக்கான பாண்டியன் அண்ட் ஃபேமிலி!
Thangamayil False Allegation Against Saravanan : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 682ஆவது எபிசோடில் தன்னை உடல் ரீதியாக கொடுமை செய்ததாக சரணனுக்கு எதிராக தங்கமயில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Pandian Stores 2 Episode 682 Today 6th January 2026
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 682ஆவது எபிசோடில் என்னை உடல் ரீதியாக டார்ச்சர் செய்தார்கள் என்றும், எல்லாவற்றையும் மறந்துவிட்டு ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வாழலாம் மாமா என்றும் தங்கமயில் கோர்ட்டில் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தார். என்ன நடந்தது என்பது பற்றி முழுவதுமாக பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 682ஆவது எபிசோடில் கோர்ட் காட்சி ஒளிபரப்பானது. இதில், ஜெயிலிலிருந்து பாண்டியன், சரவணன், செந்தில் மற்றும் கதிர் ஆகியோரும், மருத்துவனையிலிருந்து கோமதியும் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு முன்பே அரசி, ராஜீ மற்றும் மீனா ஆகியோர் காத்துக்கொண்டிருக்க முத்துவேல், சக்திவேல் மற்றும் பழனிவேலுவும் கோர்ட்டுக்கு வந்தார்கள். அதே போன்று தங்கமயில், பாக்கியம் மற்றும் மாணிக்கம் ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்தனர்.
பழனிவேல் மற்றும் தங்கமயில் கோர்ட் காட்சி:
இதில், பழனிவேலுவை பார்த்த மயில், சித்தப்பா என்று கூப்பிடவே, என்னது சித்தப்பாவா? யாருக்கு யார் சித்தப்பா? உனக்கு என்னுடைய அக்கா வீட்டில் என்ன குறை வைத்தார்கள், சரவணன் எம்புட்டு நல்ல பையன், தவம் இருந்தாலும் அவனை மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்கமாட்டான். அடிச்சானா இல்ல கொடுமைப்படுத்தினானா, என்ன ஒரு குறை தேவையில்லாமல் காசு செலவு செய்யமாட்டான். மற்றபடி அவன் தங்கம் மாதிரியான ஒரு பையன்.
அவன் மீது இப்படி புகார் கொடுத்து வச்சிருக்க, உனக்கு மனச்சாட்சி இல்லையா? ராணி மாதிரி பாத்துக்கிட்டாங்க. அப்படியிருக்கும் போது அவர்களை ஒரு நாள் முழுவதும் ஜெயிலில் வச்சிருக்க, அந்த பாவம் எல்லாம் உன்னை சும்மா விடாது. இப்படியே பேசிக்கிட்டு இருக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ராஜீ, மீனா மற்றும் அரசி தான் பழனிவேலுவை சமாதானம் செய்து வைத்து கூட்டிச் சென்றார்கள்.
கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட சரவணன், பாண்டியன், கோமதி
ஜெயிலிலிருந்து அனைவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்த நிலையில் எல்லோரும் அவர்களிடம் சென்று பேசினர். இதில், எல்லா தப்பையும் செய்துவிட்டு எதுவுமே தெரியாதது போன்று மாமா என்று சரவணனை பார்த்ததும் தங்கமயில் நாடகம் ஆடினார். மேலும், அப்போது கூட அவரது அம்மா சொல்வதைத்தான் கேட்டார்.
எதிரிக்கு எதிரி நண்பன் – முத்துவேலிடம் உதவி கேட்ட பாக்கியம்
நீங்க என்ன கோர்ட்டுக்கு வந்துருக்கீங்க என்று முத்துவேல் மற்றும் சக்திவேலிடம் சென்று பாக்கியம் பேசினார். மேலும், அரசி கல்யாணமே ஆகாமல் உங்களது வீட்டிற்கு வந்து உங்களை எந்தளவிற்கு கஷ்டப்படுத்தினார் என்று அவர்களை ஏற்றிவிட்டு. கடைசியில் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். உங்களது பேச்சைக் கேட்டு தான் நாங்கள் இப்போது கோர்ட்டு வரையிலும் வந்திருக்கிறோம். உங்களிடம் விசாரிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எங்களது வழக்கறிஞரிடம் சொல்லி உங்களையும் விசாரிக்க சொல்கிறோம்.
பழி வாங்கிய திருப்தியும், சந்தோஷம் கிடைக்கும்
அப்போது நீங்கள் எங்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வேண்டும் என்று கேட்டார். எங்களது பொண்ணை எந்தளவிற்கு கஷ்டப்படுத்துனாங்க என்று நீங்கள் பார்த்தீங்க தானே, கண்ணிர் விட்டு கதறும் போதும் கூட வீட்டிற்குள் கூட்டிச் செல்லவில்லை. இப்போது நம் இருவருக்கும் பொது எதிரி இந்த பாண்டியன் குடும்பம் தான். எதிரிக்கு எதிரி நண்பன் மாதிரி பாண்டியன் குடும்பத்திற்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கும் பழி வாங்கிய திருப்தியும், சந்தோஷம் கிடைக்கும் என்று சொல்ல அவர்களும் தலையை தலையை ஆட்டிக்கிட்டு அப்படியே செய்கிறோம் என்று சொல்லிவிட்டு கோர்ட்டுக்குள் சென்றுவிட்டார்.
Bakkiyam Plan Against Pandian Family 20 Year Sentence
இறுதியாக கோர்ட் சீன் ஒளிபரப்பானது. இதில், முதலாவதாக தங்கமயில் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். அவருக்கு எப்படி பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என்று பாக்கியம் சொல்லி கூட்டி வந்தார். மேலும், மாற்றி பேசினால் உன்னுடைய மாமன் கூட நீ வாழ முடியாது என்று பயமுறுத்தியும் வைத்திருந்தார். இதனால், கோர்ட்டில் நீதிபதியிடம் ஆமாம், என்னை வீட்டை விட்டு துரத்துவிட்டார்கள். என் வீட்டுக்காரருக்கு என்னை பிடிக்கவில்லை என்றார், மேலும், அவரது தரப்பு வழக்கறிஞர் உடல் ரீதியிலான வன்முறையில் உங்களது கணவர் ஈடுபட்டாரா என்று கேட்கும் போது அம்மாவின் பேச்சைக் கேட்டு ஆமாம் என்று வாய்க்கூசாமல் பொய் சொன்னார். இதைக் கேட்டு பாண்டியன், சரவணன், கோமதி, மீனா, அரசி என்று எல்லோருமே அதிர்ச்சியடைந்தனர்.
Pandian Stores 2 Today Promo Review Tamil
மேலும், 80 சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைத்தும், அது போதாது என்று இன்னும் வரதட்சணை வேண்டும் என்று கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் செய்திருக்கிறார்கள். இவர்கள் செய்த கொடுமையால் இந்த பொண்ணுக்கு அபார்ஷன் கூட ஆகியிருக்கிறது. இத்தனை கொடுமையும் செய்த பிறகு கடைசியாக டிவோர்ஸ் நோட்டீஸூம் அனுப்பியிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் வாதாடினார்.
Vijay TV Serial Pandian Stores 2 Latest Episode 682 Story
கடைசியாக, எனக்கு எனக்கு என்னுடைய மாமா கூட சேர்ந்து வாழ வேண்டும். அவ்வளவு தான். வேறு எதுவும் வேண்டாம். மாமா, நடந்த எல்லாவற்றையும் மறந்துவிடலாம். நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வாழலாம் என்று கூறி அழுதார். இது என்னடா கொடுமையா இருக்கு, இவ்வளவு பிரச்சனையை அடுக்கிக்கொண்டே போனிங்க, இந்த பொண்ணு என்னடானா சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்லுது என்று நீதிபதி கேட்க, பொண்ணுங்களுக்கு வேறு என்ன வாய்ப்பிருக்கிறது? என்னதான் நடந்தாலும் கடைசியில் புருஷன் கூட தான் சேர்ந்து வாழ வேண்டியிருக்கிறது என்று வழக்கறிஞர் கூறினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.