- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கணவருடன் சேர்ந்து வாழணும்; வீட்டு வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்ட தங்கமயில்: பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
கணவருடன் சேர்ந்து வாழணும்; வீட்டு வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்ட தங்கமயில்: பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Thangamayil Dharna Protest Against Pandian Decision: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் வீட்டைவிட்டு துரத்தப்பட்ட நிலையில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Vijay TV Pandian Stores 2 Serial Updates
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது டிஆர்பியில் பின்தங்கியிருந்தாலும் சுவாரஸ்யத்திற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமே இல்லை. கடந்த வார எபிசோடுகளில் தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்த சரவணன் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டார். இதையடுத்து தங்கமயில் அப்பா, அம்மாவை வரவழைத்து பஞ்சாயத்து பேசப்பட்டது. கடைசியாக இனிமேலும் தங்கமயில் இங்கு இருக்க கூடாது. நீங்களே கூட்டிக் கொண்டு சென்றுவிடுங்கள் என்று அவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டார்கள்.
Pandian Stores 2 Promo Dec 15-20
கடைசியாக நேற்றைய எபிசோடில் தங்கமயில், அவரது அப்பா மாணிக்கம் மற்றும் அம்மா பாக்கியம் ஆகிய மூவரையும் குழலில் வீட்டைவிட்டு துரத்தினார். மூவரும் நடுத்தெருவில் நிற்பது போன்றும், காந்திமதி, வடிவு மற்றும் மாரி உள்பட ஊரே வேடிக்கை பார்ப்பது உடன் முடிந்தது. இந்த நிலையில் தான் இனி இந்த வாரம் என்ன நடக்க போகிறது என்பது தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு அனைவரையும் உச்சகட்ட பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
Gomathi Bakiyam Fight
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை எபிசோடுக்கான புரோமோ வீடியோவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். முதல் காட்சியாக மீனா மற்றும் ராஜீ இருவரும் வாசலில் தண்ணீர் தெளித்து கூட்டி பெருக்கி கோலமிட வாசல் கதவை திறக்கிறார்கள். அப்போது வெளியிலேயே தங்கமயில் அமர்ந்திருப்பது கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
Pandian Stores 2 Saravanan Thangamayil
இதனையடுத்து வீட்டிற்குள் என்னை நீங்கள் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் நான் இந்த வீட்டு வாசலை விட்டு போகமாட்டேன் என்று தங்கமயில் அடம் பிடிக்கிறார். அதன் பின்னர் கோபத்துடன் வந்த கோமதி அவரை வெளியில் துரத்திவிட்டு காதவை அடைக்கிறார். பின்னர் மயில், பாண்டியனின் மாமியாரான காந்திமதியிடமும் , வடிவு, மாரியிடமும் சொல்லி கதறி அழுகிறார். இதெல்லாம் தெரியாத கோமதி உடனே பாக்கியத்திற்கு போன் போட்டு உங்களது மகள் எங்களது வீட்டிற்கு வந்து ஓ என்றூ ஒப்பாரி வைத்து அழுகிறாள். உடனே வந்து கூட்டிக்கிட்டு போங்க என்று கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியம் தனது கணவர் மாணிக்கத்துடன் உச்சகட்ட கோபத்துடன் சம்பந்தி வீட்டிற்கு வருகிறார்.
Thangamayil Dharna, Saravanan Suicide Threat
அங்கு குடும்பத்தோடு சேர்ந்து என்னுடைய மகளை வீட்டைவிட்டு விரட்டி விட்டீர்களே நீங்கள் எல்லோரும் நல்லா இருப்பீர்களா? என்று சாபம் விடுகிறார். இப்படி அவர் கூறியதைக் கேட்டு ஆத்திரத்துடன் வெளியில் வந்த சரவணன் இப்போது நீ இங்கிருந்து போகவில்லை என்றால் என்னுடைய சாவுக்கு நீ உன்னுடைய அப்பா, அம்மா தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று சரவணன் கூறியதைக் கேட்டு பாண்டியன் அதிர்ச்சியடைந்தார்.
Pandian Stores 2 Saravanan Divorce
பின்னர், என்னடா பேசிக்கிட்டு இருக்க என்று கேட்க, எனக்கு இவள் வேண்டாம், இவளிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கி கொடுத்துவிடுங்கள் என்றார். இதைக் கேட்டு மயில் அதிர்ச்சி அடைகிறார். சரவணன் கேட்ட மாதிரி அவருக்கு விவாகரத்து கிடைக்குமா? அல்லது மீண்டும் சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்களா? அப்படியும் இல்லையென்றால் தங்கமயிலின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பார்களா உள்ளிட்ட பல கேள்விகளுடன் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பார்க்கலாம்.