- Home
- Cinema
- தொலைக்காட்சி
- குடும்பத்தை பிரிக்க திட்டம்; நிலத்தின் மதிப்பு கேட்டு மொக்கை வாங்கிய தங்கமயில்; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
குடும்பத்தை பிரிக்க திட்டம்; நிலத்தின் மதிப்பு கேட்டு மொக்கை வாங்கிய தங்கமயில்; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்!
Thangamayil ask about Land Value in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 574ஆவது எபிசோடில் தங்கமயில் வயல் நிலத்தின் மதிப்பு பற்றி கேட்க என்ன நடக்கிறது என்ன நடக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தொடர்ந்து தரையில் தூங்கி வந்த சரவணனை, தங்கமயில் பெட்டில் படுக்க வற்புறுத்தியும் தூங்காத சரவணனன் கடைசியில் ஹாலுக்கு அப்போது அங்கு வந்த கோமதி உள்ளே சென்று தூங்க சொல்ல சரவணனும் கடைசியில் பெட்டில் தூங்கினார். தங்கமயில் அடுத்தடுத்து பொய் சொல்லி வந்த நிலையில் கடைசியாக சொன்ன தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற பொய்யை அவரால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தங்கமயிலை வெறுக்க ஆரம்பித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 574ஆவது எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகளும் கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் இன்றைய எபிசோடானது தங்கமயில் மீதான கோபத்தின் காரணமாக தொடர்ந்து தரையில் தூங்கும் சரவணனனுக்கும் தங்கமயிலுக்கும் இடையில் அடிக்கடி சண்டை வருகிறது. இதன் காரணமாக சரவணன் ஹாலில் வந்து தூங்க அங்கேயும் வந்து தங்கமயில் சண்டைக்கு வர உடனே கோமதி வந்து உள்ளே சென்று தூங்க சொல்கிறார்.
இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் இடம் பெற்றது. இதில் சென்னையில் நடைபெறும் டான்ஸ் போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன். இந்தப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நான் இந்த டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ளட்டுமா என்று ராஜி கேட்கிறார். அதற்கு கதிர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் எதற்காக என்ன காரணத்திற்காக டான்ஸ் ஷோவில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று கதிருக்கு நன்று தெரிந்துவிட்டது.
தனக்கு யாரும் உதவி செய்ய கூடாது, தன்னால் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கதிருக்கு ராஜீ தனக்கு தேவையான ரூ.10 லட்சத்திற்காகத்தான் டான்ஸ் ஷோவில் கலந்து கொள்ள விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டார். இதைத் தொடர்ந்து வயல் விற்பதைப் பற்றி தங்கமயில் பேச்சை ஆரம்பிக்க உடனே பாண்டியன் சரவணனை மட்டும் சும்மா விட்டுவிட மாட்டோம். அவனுக்கு தேவையான பங்கை சரியான நேரத்தை கொடுப்பேம். அவனுக்கு மட்டும் இல்ல யார் யார் என்னென்ன என்னென்ன எப்போ செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்வேன். ஆகையால், நீ ஒன்றும் கவலைப்பட தேவையில்லை என்று விளக்கமாக பதிலளித்தார்.
இதனால் கோபமடைந்த கோமதி, தங்கமயிலிடம் சென்று நீ என்ன வயலை விற்பது பற்றி உன்னுடைய புருஷனை காப்பாற்றுவது பற்றியும் பேசுற, என்னுடைய கணவர் மற்றும் எங்களை விடவா உனக்கு அவன் மேல் அக்கறை வந்துவிட்டது. உன்னுடைய வேலை ஏதுவோ அதை மட்டும் பார். தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது என்று கூறிவிட்டார். இதைப் பற்றி சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டக் காட்சி இந்த டாபிக் ஆரம்பிக்கும் போதே நடைபெற்றது. அதில் என்னுடைய அப்பாவிற்கு எனக்கு என்ன எப்போது செய்ய வேண்டும் என்று நன்கு தெரியும். நீ உன்னுடைய வேலையை மட்டும் பார் என்று சொல்லிவிட்டார்.
இதைத் தொடர்ந்து கதிர் டான்ஸ் போட்டியில் பங்கேற்க அனுமதி கொடுக்காத நிலையில் ராஜீ நேரடியாக சென்று பாண்டியனிடம் தான் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறிவிட்டார். எதில் கலந்து கொள்ள போகிற என்று கோமதி வந்து பார்த்து கேட்க அவருடன் வந்த தங்கமயிலும் ஓ நான் சொன்ன விளம்பரமா, இதில் கலந்து கொள்ள போறயா சூப்பர் என்று பாராட்ட, அப்போது தான் டோஸ் வாங்கியிருக்கும் தங்கமயில் சும்மா இருக்க வேண்டியது தானே, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கோமதியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். இறுதியாக கதிர் மற்றும் பாண்டியனிடம் அனுமதி கேட்டும் கிடைக்காத ராஜீ டான்ஸ் போட்டியில் பங்கேற்றாரா இல்லையா என்பது பற்றி நாளைய எபிசோடில் பார்க்கலாம்.