- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சிங்கப்பெண்ணே சீரியல் : ஆனந்தியை கர்ப்பமாக்கியது யார்? பஞ்சாயத்தில் உண்மையை உடைக்கும் அன்பு
சிங்கப்பெண்ணே சீரியல் : ஆனந்தியை கர்ப்பமாக்கியது யார்? பஞ்சாயத்தில் உண்மையை உடைக்கும் அன்பு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் அறிந்த அன்பு என்ன செய்தார் என்பதை பார்க்கலாம்.

Singappenne Serial Today Episode
சன் டிவியில் நம்பர் 1 சீரியல் என்றால் அது சிங்கப்பெண்ணே தான். இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி ரேஸில் நம்பர் 1 சீரியலாக இருக்கும் சிங்கப்பெண்ணேவில் இந்த வாரம் அன்பு மற்றும் ஆனந்தியின் கல்யாண எபிசோடு தான் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலிக்கிறார்கள். இவர்களில் அன்பு மீது ஆனந்தி காதல் வயப்படுகிறார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனந்தி திடீரென கர்ப்பமாகிறார். அவர் கர்ப்பமாக இருப்பது ஹாஸ்டல் வார்டனுக்கும், தோழிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள். இதனிடையே ஆனந்தி தன்னுடைய அக்கா கோகிலா திருமணத்தில் கலந்துகொள்கிறார். அப்போது அன்புடன் சேர்ந்து ஆனந்தி, ஆடிப்பாடி ஜாலியாக இருக்கும் வேலையில் கோகிலாவை சுயம்பு கடத்தி விடுகிறார். பின்னர் அவரை காப்பாற்றி காலையில் கோகிலாவுக்கு திருமணம் நடக்கிறது. இந்த நேரத்தில் திருமண மண்டபத்துக்குள் எண்ட்ரி கொடுக்கும் வில்லன் சுயம்பு நேற்றைய எபிசோடில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் தகவலை அனைவர் முன்னிலையிலும் போட்டுடைக்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
பஞ்சாயத்தில் தீர்ப்பு கேட்கும் சுயம்பு
கல்யாணத்துக்கு வந்த ஊர்ப் பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து நடக்கிறது. அப்போது ஆனந்தி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கீங்க என சுயம்பு கேள்வி எழுப்புவதோடு, முன்பு ஒரு பைத்தியக்கார பெண் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானபோது அவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததை சுட்டிக்காட்டி, தற்போது ஆனந்திக்கு பஞ்சாயத்தில் என்ன தீர்ப்பு கொடுக்க போகிறீர்கள் என கேட்கிறார். இந்த விஷயத்தில் அழகப்பன் குடும்பத்துடைய மானம் மட்டுமில்ல, நம்ம ஊர் மானமும் இருக்கு, அதனால் என்ன தீர்ப்புனு சொல்லுங்க என முறையிடுகிறார் சுயம்பு. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மறுபுறம் ஆனந்தி கதறி அழுகிறார்.
ஆனந்தியை மணமுடிக்க முடிவெடுக்கும் அன்பு
உடனே ஆனந்திக்காக சப்போர்ட்டுக்கு வரும் அன்பு, ஆனந்தி மனசறிஞ்சு எந்த தப்பும் செய்திருக்க மாட்டாள் என வாதிடுகிறார். இந்த ஊரோ, சொந்தக்காரர்களோ அவளை நம்பாவிட்டாலும் பரவாயில்லை. தெரியாம நடந்த தப்புக்கு ஆனந்தி எந்தவகையிலும் பொறுப்பாக மாட்டாள். ஆனந்தியும் நானும் மனசார விரும்புகிறோம். அவளுக்கு என்ன பிரச்சனை? ஏன் அவ இப்படி சொல்கிறாள்? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இதே இடத்தில் அவளுக்கு தாலிகட்டி நான் ஆனந்தியை என்னுடைய பொண்டாட்டி ஆக்கிக் கொள்கிறேன் என அன்பு சொல்கிறார். இதன்பின் அன்பு - ஆனந்தியின் திருமணம் நடந்ததா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.