- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஒரே நேரத்தில் 4 மெகா தொடர் ஜோடிகளின் திருமணம்; சன் டிவியில் களைகட்டும் கல்யாணத் திருவிழா!
ஒரே நேரத்தில் 4 மெகா தொடர் ஜோடிகளின் திருமணம்; சன் டிவியில் களைகட்டும் கல்யாணத் திருவிழா!
சன் டிவியில் சிங்கப்பெண்ணே, மருமகள், ஆடுகளம் மற்றும் எதிர்நீச்சல் 2 ஆகிய 4 மெகா சீரியல்களில் அடுத்தடுத்து திருமணம் நடைபெற உள்ளது.

Sun TV Serial Marriages
சன் டிவி சீரியல்கள் என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. அப்படி விறுவிறுப்பான கதைக்களத்துடன் தயாராவதால் தான் டிஆர்பி ரேஸில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது சன் டிவி. சீரியல்களில் பல்வேறு புது முயற்சிகளை எடுக்கும் சன் டிவி, அண்மையில் மகா சங்கமம் என்கிற பெயரில் மூன்று முடிச்சு, மருமகள் ஆகிய இரண்டு சீரியல்களை ஒன்றாக எடுத்து அதன் மூலம் டிஆர்பியையும் அள்ளியது. அந்த வகையில் தற்போது மற்றுமொரு ட்விஸ்டாக சன் டிவியின் நான்கு மெகாத் தொடர்களின் ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஜூலை மாதம் முழுக்க சன் டிவி தொடர்களில் திருமண திருவிழா களைகட்ட உள்ளது. கல்யாண நடைபெற உள்ள அந்த நான்கு தொடர்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மருமகள்
சன் டிவியில் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் மருமகள். இதில் கேப்ரியல்லா ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராகுல் ரவி நடித்து வருகிறார். இந்த சீரியலை நாராயண மூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில், மருமகள் சீரியலில் கல்யாண கலாட்டா களைகட்ட தொடங்கி உள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் சத்யா மற்றும் கார்த்திக் இடையேயான கல்யாணம் தான் இந்த மாதம் முழுக்க ஒளிபரப்பாக உள்ளது.
சிங்கப்பெண்ணே
சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் சீரியல் என்றால் அது சிங்கப்பெண்ணே சீரியல் தான். இந்த சீரியலில் மனிஷா மகேஷ் நாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலிலும் திருமண எபிசோடுகள் இந்த மாதம் முழுக்க ஒளிபரப்பாக உள்ளது. ஆனந்தி - அன்பு இடையேயான திருமண கொண்டாட்டங்கள் தான் களைகட்ட உள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த கல்யாண எபிசோடுக்காக தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
எதிர்நீச்சல் 2
எதிர்நீச்சல் 2 சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலின் முதல் சீசனில் ஆதிரை - கரிகாலன் இடையேயான திருமணம் பெரிய ஹைலைட்டாக பேசப்பட்டது. அதேபோல் எதிர்நீச்சல் 2ம் பாகத்திலும் கல்யாண எபிசோடு ஆரம்பமாக உள்ளது. அது வேறுயாருமில்லை. ஆதிகுணசேகரன் - ஈஸ்வரி ஜோடியின் மகனான தர்ஷனுக்கும், அன்புக்கரசிக்கும் இடையேயான திருமணம் தான் இந்த மாதம் முழுக்க நடைபெற இருக்கிறது. இந்த திருமண எபிசோடுகளும் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுகளம்
சன் டிவியில் டெல்னா டேவிஸ் நடிப்பில் புதிதாக தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் தான் ஆடுகளம். இந்த சீரியலில் சல்மானுல் பரிஸ், அக்ஷயா, அயுப், காயத்ரி ஜெயராமன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலில் சத்யா - அர்ஜுன் ஜோடிக்கு எப்போ திருமணம் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த திருமண எபிசோடுகள் இந்த மாதம் முழுக்க ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.