- Home
- Cinema
- தொலைக்காட்சி
- எதிர்நீச்சல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு நாயகிகள் கடத்தல்... அரைச்ச மாவையே அரைக்கும் சன் டிவி சீரியல்கள்
எதிர்நீச்சல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு நாயகிகள் கடத்தல்... அரைச்ச மாவையே அரைக்கும் சன் டிவி சீரியல்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு ஆகிய மூன்று சீரியல்களும் ஒரே மாதிரியான கதைக்களத்தில் நகர்ந்து வருவது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

Sun TV Serial Actresses Kidnapped
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அதன் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க ஒரே மாதிரியான யுக்தியை கையாண்டு சர்ச்சையில் சிக்கி உள்ளன. மூன்று சீரியல்களிலுமே ஒரே நேரத்தில் நடிகைகள் கடத்தப்படும் கதைக்களம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதை நோட் பண்ணிய ரசிகர்கள், இவங்களுக்கு கடத்தலைவிட்டா வேற கதையே தெரியாதா என விமர்சித்து வருகிறார். அந்த மூன்று சீரியல்களின் நேரமும் இன்று முதல் மாற்றப்பட்டு உள்ளது. அந்த மூன்று சீரியல்கள் வேறெதுவுமில்லை, சன் டிவியின் பிரைம் டைம் தொடர்களான சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு மற்றும் எதிர்நீச்சல் தொடர்கிறது தான்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் சீரியலில் கடத்தல் கதைக்களம் தான் கடந்த ஓராண்டாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த முறை சக்தி கடத்தப்பட்டு அவரை ஜனனி சென்று மீட்டு வந்தார். இம்முறை ஜனனி கடத்தப்பட்டு இருக்கிறார். அவரை தேவசகாயம் என்கிற புது வில்லன் கடத்தி வைத்துள்ளார். உடல் உறுப்புகளை திருடி விற்கும் கும்பலிடம் சிக்கி இருக்கும் ஜனனி, அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதே தற்போது உச்சக்கட்ட கேள்வியாக உள்ளது. அவரை சக்தி வந்து காப்பாற்றுவாரா? அல்லது ஜீவானந்தம் உதவியுடன் ஜனனி தப்பிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மூன்று முடிச்சு
தமிழ்நாட்டில் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது மூன்று முடிச்சு. அதிலும் நாயகி நந்தினி கடத்தப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்னர் சூர்யா கடத்தப்பட்டபோது அவரை நந்தினி கண்டுபிடித்து மீட்டார். இம்முறை நந்தினி கடத்தப்பட்டு இருப்பதால் அவரை சூர்யா மீட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாயகன் கண்முன்னே நந்தினியை கடத்திச் சென்றிருக்கிறார்கள். சினிமா பாணியில் சேசிங் காட்சிகளோடு இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதையடுத்து நந்தினியை சூர்யா பத்திரமாக மீட்டாரா? இல்லையா? என்பது இந்த வார இறுதிக்குள் தெரியவந்துவிடும்.
சிங்கப்பெண்ணே
தன்னை கர்ப்பமாக்கியது யார் என்று தெரியாமல் இருக்கும் ஆனந்தி, தான் ஆசைப்பட்டபடி அன்புவை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். அவரது வாழ்க்கை சந்தோஷமாக சென்றுகொண்டிருக்க, உன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது எனக்கு தெரியும் என ஒரு போன் கால் வருகிறது. அதை நம்பிச் செல்லும் ஆனந்தியை ஒரு காரில் கடத்திச் செல்கிறார்கள். கடத்தப்படும் ஆனந்தியை தேடி அலைகிறார் அன்பு. ஆனந்தியை கடத்தியது யார்? அவரின் கர்ப்பத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்தாரா ஆனந்தி என்பதை ஒரு வழியாக உடைக்க இருக்கிறார்கள் போல தெரிகிறது.

