- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சிறகடிக்க ஆசை : முத்து - மீனாவை தெரு தெருவாக அலையவிட்ட பைனான்சியர்... வக்கீல் சொன்ன ஷாக் தகவல்
சிறகடிக்க ஆசை : முத்து - மீனாவை தெரு தெருவாக அலையவிட்ட பைனான்சியர்... வக்கீல் சொன்ன ஷாக் தகவல்
சிறகடிக்க ஆசை சீரியலில் பைனான்சியர் வீட்டை ஜப்தி செய்ய உள்ளதாக நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், அவரை சந்திக்க முத்துவும் மீனாவும் சென்றுள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக அண்ணாமலையின் வீட்டை ஜப்தி செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார் பைனான்சியர். அதற்காக அவர்களுக்கு 3 மாதம் டைம் கொடுத்திருந்த அவர், அதற்குள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனால் பணத்தை ரெடி பண்ணும் வேலையில் இறங்கிய முத்து, மீனா முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாயை அந்த பைனான்சியரிடம் கொடுத்தனர். இவர்கள் இப்படியே சென்றால் 3 மாதத்தில் பணத்தை கொடுத்துவிடுவார்கள் என முடிவெடுத்து சிந்தாமணியுடன் பேசிய பைனான்சியர், தனக்கு உடனே பணம் வேண்டும் இல்லையென்றால் ஜப்தி செய்வேன் என நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பைனான்சியரை பார்க்க செல்லும் முத்து - மீனா
பைனான்சியர் அனுப்பிய ஜப்தி நோட்டீஸை பார்த்து அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை மனமுடைந்து போகிறார். மறுபுறம் மனோஜ் அக்கறையே இல்லாமல் வீட்டை விற்றுவிடலாம் என ஐடியா கொடுக்க, அவரை அனைவரும் திட்டி தீர்த்தனர். வீடு ஜப்தி செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முத்துவும் மீனாவும் பைனான்சியரை நேரில் பார்த்து பேச முடிவெடுத்து அவரின் கம்பெனிக்கு செல்கின்றனர். அங்கு அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த பைனான்சியர் அங்கு வரவில்லை. இதனால் டென்ஷன் ஆன முத்து அங்கிருக்கும் ஊழியர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர் பைனான்சியருக்கு போன் போட்டு கொடுக்கிறார். அவரோ தான் வெளியே இருப்பதாக சொல்லி, தான் இருக்கும் இடத்துக்கு வர சொல்கிறார்.
அலையவிடும் பைனான்சியர்
அந்த பைனான்சியர் பேச்சை கேட்டு, முத்துவும் மீனாவும் அவர் சொன்ன இடத்துக்கு சென்று பார்த்தால் அங்கும் அவர் இல்லை. பின்னர் தான் அண்ணா நகரில் இருப்பதாக சொல்கிறார். அங்கு சென்றாலும் அவர் இல்லை. இதனால் கடுப்பான முத்து, ஒழுங்கா நீ இருக்குற இடத்தை சொல்லுனு கேட்க, அவர் இறுதியாக தான் போலீஸ் ஸ்டேஷன் வந்திருப்பதாக சொல்கிறார். அங்கு சென்று பார்த்தாலும் அவர் இல்லை. இவன் நம்மை வைத்து கேம் ஆடுறான் என்று தெரிந்ததும், முத்துவும் மீனாவும் நேராக வக்கீலை சந்திக்க செல்கிறார்கள். அங்கு பைனான்சியர் தங்களை அலைக்களித்த விஷயத்தை சொல்கிறார். அவர் உங்க கூட பேசக்கூடாது என்பதற்காக தான் இப்படியெல்லாம் செய்கிறார் என கூறுகிறார் வக்கீல்.
அதிர்ச்சி கொடுத்த வக்கீல்
அதுமட்டுமின்றி இந்த வீட்டை ஜப்தி செய்ய அவர் அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற வைப்பதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது என கூறுகிறார் வக்கீல். கோடை விடுமுறை காரணமாக கோர்ட் 10 நாட்கள் மூடப்பட்டிருக்கும் விஷயத்தை சொல்லும் வக்கீல், இதனால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது என கூறுகிறார். இந்த விஷயமெல்லாம் தெரிந்து தான் அவர் ஜப்தி நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக சொல்கிறார். இதில் வேறு ஒன்றுமே பண்ண முடியாது என வக்கீல் சொன்னதும் சோகமாக வீட்டுக்கு கிளம்பி செல்கிறார் முத்து. அங்கு சென்றதும் என்ன ஆச்சு என அண்ணாமலை கேட்க, முத்து நடந்ததை எல்லாம் சொல்கிறார். இதைக்கேட்டதும் இடிந்துபோய் உட்கார்கிறார் அண்ணாமலை.
சந்தோஷத்தில் சிந்தாமணி
மறுபுறம் அந்த பைனான்சியர், சிந்தாமணிக்கு போன் போட்டு, நீங்க சொன்ன மாதிரியே அவங்களை அலையவிட்டேன் என கூறுகிறார். ரொம்ப சந்தோஷம், அவங்க இப்படி தெரு தெருவா அலையனும், உங்களை பார்த்திருந்தால் ஏதாவது பேசி அந்த வீட்டை ஜப்தி பண்ண விடாமல் தடுத்திருப்பார்கள் என கூறும் சிந்தாமணி, நாளைக்கு நானும் அங்க வர்றேன். அவங்க குடும்பம் ரோட்டுல நிக்குற கண்கொள்ளா காட்சியை நானும் பார்த்து ரசிக்க வேண்டும் என கூறுகிறார். இதையடுத்து என்ன ஆகப்போகிறது? வீட்டை ஜப்தி செய்ய விடாமல் தடுப்பாரா முத்து? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

