MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai Today Episode : டபுள் கேம் ஆடும் சிந்தாமணி... கைதான மனோஜை மீட்பாரா ரோகிணி? சிறகடிக்க ஆசை

Siragadikka Aasai Today Episode : டபுள் கேம் ஆடும் சிந்தாமணி... கைதான மனோஜை மீட்பாரா ரோகிணி? சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி பைனான்சியரை தூண்டிவிட்டு மனோஜை போலீஸிடம் சிக்க வைத்து கைது செய்ய வைத்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 28 2026, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தன்னிடம் வாங்கிய கடனை மூன்று மாதங்களில் திருப்பி கொடுக்க வேண்டும் என்று பைனான்சியர் கெடு விதித்த நிலையில், முத்துவும் மீனாவும் தீயாய் வேலை செய்ய தொடங்குகிறார். அவர்கள் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். இதை சிந்தாமணியிடம் கூறுகிறார் பைனான்சியர். இப்படியே போனால் 3 மாதத்திற்குள் இந்த முத்துவும் மீனாவும் பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள் என்பதை அறிந்த சிந்தாமணி, அவர்களை வேறு பக்கம் திசை திருப்பிவிட திட்டம் போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
சிந்தாமணியின் சதி
Image Credit : jiohotstar

சிந்தாமணியின் சதி

மனோஜ் மீது போலீஸில் புகார் கொடுக்க சொல்கிறார் சிந்தாமணி. அவன் ஃபோர்ஜரி பண்ணிவிட்டான் என சொல்லி புகார் கொடுக்க சொல்லும் சிந்தாமணி, அப்படி புகார் கொடுத்து மனோஜை கைது செய்ய வைத்தால் அந்த குடும்பம் அவமானப்படும். அதுக்கப்புறம் அவங்க பணம் சம்பாதிக்குறதை மறந்துட்டு, மனோஜை எப்படியாவது வெளியே எடுக்க வேண்டும், என்பதில் கவனம் செலுத்த தொடங்குவார்கள் என ஐடியா கொடுக்கிறார். இதையடுத்து பைனான்சியரும் சிந்தாமணி சொல்வதை கேட்டு வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார்.

Related Articles

Related image1
சீட்டிங் பண்ணிய சிந்தாமணி... விஜயாவுக்கு விதிக்கப்பட்ட கெடு - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Related image2
வீட்டை காப்பாற்ற மாடாக உழைக்கும் முத்து - மீனா... விஜயாவிடம் அடிவாங்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
35
கைதாகும் மனோஜ்
Image Credit : jiohotstar

கைதாகும் மனோஜ்

மறுபுறம் முத்துவும் மீனாவும் தாங்கள் முதற்கட்டமாக 10 லட்ச ரூபாய் கடனை அடைத்துவிட்டதாக சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து போலீசார் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் மனோஜை அரெஸ்ட் பண்ண வந்திருப்பதாக சொல்கிறார்கள். அவர் பைனான்சியரிடம், கடன் வாங்கும் போது அப்பாவோட கையெழுத்தை தானே போட்டு ஃபோர்ஜரி பண்ணி இருக்கிறார். அதற்காக மனோஜை அரெஸ்ட் பண்ணுவதாக கூறி போலீசார் அவரை தரதரவென இழுத்து செல்கிறார்கள். தன் மகனை போலீசார் கைது செய்து செல்வதை தெருவில் உள்ள அனைவரும் வேடிக்கை பார்த்ததால், விஜயா அவமானத்தில் கூனி குருகிப் போகிறார்.

45
ரோகிணிக்கு ஹிண்ட் கொடுக்கும் சிந்தாமணி
Image Credit : jiohotstar

ரோகிணிக்கு ஹிண்ட் கொடுக்கும் சிந்தாமணி

மறுபுறம் சிந்தாமணியை பார்ப்பதற்காக ரோகிணி, செல்கிறார். மனோஜை போலீசார் கைது செய்துவிட்டதாக சொல்லி சிந்தாமணியிடம் கதறி அழுகிறார் ரோகிணி. அதற்கு அவர், நான் தான் பைனான்சியரிடம் சொல்லி மனோஜ் மீது புகார் கொடுக்க சொல்லி அவனை அரெஸ்ட் பண்ண வச்சேன் என சொல்லும் சிந்தாமணி, எல்லாம் உனக்காக தான் என சொல்கிறார். புரியலயே ஆண்ட்டி என ரோகிணி கேட்க, இப்போ நீ போலீஸ் ஸ்டேஷன் போய் மனோஜை வெளியே எடுப்பதாக சொல்லி அவரிடம் பேசு, அதுக்கப்புறம் நம்ம எப்படியாச்சும் ஜாமீன்ல மனோஜை வெளிய எடுத்துடலாம். நீ தான் வெளிய எடுத்தன்னு தெரிஞ்சதுனா மனோஜ் உன் கூடவே வந்திருவான் என சொல்கிறார்.

55
என்ன நடக்கப்போகிறது?
Image Credit : jiohotstar

என்ன நடக்கப்போகிறது?

இதையடுத்து முத்து, மீனா, ஸ்வேதா ஆகியோர் வக்கீலை அழைத்து நடந்ததை கூறுகிறார்கள். அந்த வக்கீல் பின்னர் இன்ஸ்பெக்டரிடம் சென்று பேசிப் பார்க்கிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் இந்த வழக்குக்கு பெயில் கிடைக்காது என சொல்லிவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது? மனோஜை ரோகிணி ஜாமினில் வெளியே எடுப்பாரா? அல்லது அவர் சிறையிலேயே தத்தளிப்பாரா? சிந்தாமணியின் சதி வேலையால் தான் மனோஜ் ஜெயிலுக்கு சென்றிருக்கிறார் என்கிற உண்மை முத்து மற்றும் மீனாவுக்கு தெரியவருமா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Serial: ரூ.18 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்.! நடிகை ராதிகா சரத்குமார் மீது பகீர் புகார்களை அடுக்கிய பிரபல நடிகை.!
Recommended image3
Ethirneechal Thodargiradhu : உனக்கு 2 பொண்டாட்டி கேக்குதாடா? தர்ஷனை அடிவெளுத்த ஈஸ்வரி - ஜனனிக்கு தெரியவரும் உண்மை
Related Stories
Recommended image1
சீட்டிங் பண்ணிய சிந்தாமணி... விஜயாவுக்கு விதிக்கப்பட்ட கெடு - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்
Recommended image2
வீட்டை காப்பாற்ற மாடாக உழைக்கும் முத்து - மீனா... விஜயாவிடம் அடிவாங்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved