MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரோகிணி பக்கம் அந்தர் பல்டி அடித்த மனோஜ்; சிந்தாமணிக்கு செக் வைத்த மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்

ரோகிணி பக்கம் அந்தர் பல்டி அடித்த மனோஜ்; சிந்தாமணிக்கு செக் வைத்த மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜுக்கு பணம் கொடுத்து அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டுவந்துள்ளார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 02 2026, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், தன்னை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்ததால் மனோஜ், ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். இதனால் விஜயாவுக்கு கோபம் வந்து மனோஜை திட்டுகிறார். ஒழுங்கு மரியாதையா அந்த ரோகிணி கொடுத்த காச நீ தான் திருப்பி கொடுக்கணும், இனி இந்த வீட்டுக்குள்ள அவர் வருவானு நீ நினைச்சு கூட பார்க்கக்கூடாது என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிடுகிறார் விஜயா. அவர் இப்படி பேசுவதை பார்த்து முத்து, மீனாவுக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. நம்ம அம்மாவா இப்படி பேசுறாங்க என ஷாக் ஆகிப்போகிறார் முத்து.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
ரோகிணி பற்றி கணித்த மீனா
Image Credit : jiohotstar

ரோகிணி பற்றி கணித்த மீனா

அதன்பின்னர் முத்துவும் மீனாவும், தனியாக ரூமுக்குள் சென்று டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். எனக்கு என்னமோ இந்த ரோகிணியும், சிந்தாமணியும் கூட்டுக் களவாணிகளா இருப்பாங்களோனு சந்தேகமா இருக்கு. அவங்க ரெண்டு பேருக்கும் இடையே ஏதோ லிங்க் இருக்கு, ரோகிணி இந்த சிந்தாமணி தான் உதவி செஞ்சிட்டு இருக்குன்னு நினைக்குறேன்னு கரெக்டா கெஸ் பண்ணுகிறார் மீனா. இதுக்கப்புறம் என்ன செய்வதென்று யோசிக்கையில், சிந்தாமணி மீது புகார் கொடுக்கலாம் என்கிற முடிவுக்கு வரும் மீனா, அதற்கான வேலைகளில் இறங்குகிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai Today Episode : டபுள் கேம் ஆடும் சிந்தாமணி... கைதான மனோஜை மீட்பாரா ரோகிணி? சிறகடிக்க ஆசை
Related image2
வீட்டை காப்பாற்ற மாடாக உழைக்கும் முத்து - மீனா... விஜயாவிடம் அடிவாங்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
35
சிந்தாமணி vs மீனா
Image Credit : jiohotstar

சிந்தாமணி vs மீனா

நேராக சிந்தாமணி வீட்டிற்கு செல்கிறார் மீனா. அங்கு அவரோடு நிறைய பூ வியாபாரிகளையும் அழைத்து செல்கிறார். நீங்க இவங்களிடம் அநியாயத்துக்கு வட்டி வாங்கிட்டு, அவங்க வீட்டு பத்திரங்களை தராமல், நீங்களே வைத்துக் கொண்டு, அவர்களிடம் மேற்கொண்டு வட்டி கேட்டுக்கிட்டே இருக்கீங்க, ஒழுங்கா அவங்க பத்திரத்தை கொடுக்காவிட்டால், இந்த புகார் மனுக்களை எடுத்துக் கொண்டு கமிஷனர் ஆபிஸ் முன்னாடி நின்னு போராட்டம் பண்ணுவோம், அதன்பின்னர் நீங்க கம்பி தான் எண்ணனும் என சொல்லி பயமுறுத்துகிறார் மீனா.

45
சரண்டர் ஆன சிந்தாமணி
Image Credit : jiohotstar

சரண்டர் ஆன சிந்தாமணி

அதற்கெல்லாம் பயப்படாதது போல் நடித்த சிந்தாமணி, பஞ்ச் டயலாக் எல்லாம் பேசிக் கொண்டிருக்க, சரி நீ இப்படியே பேசிக்கிட்டு இரு, வெளிய தான் ஆட்டோ நிக்குது, நாங்க போய் கம்பிளைண்ட் கொடுக்குறோம் என மீனா சொன்னதும், சிந்தாமணி பயப்பட ஆரம்பிக்கிறார். அதன்பின்னர் நேராக வீட்டுக்குள் சென்று அவங்களோட பத்திரங்கள் எல்லாத்தையும் எடுத்து வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்கிறார். ஒருவழியாக மீனா, சிந்தாமணியை ஜெயித்துவிடுகிறார். அவரால் மீனாவை எதுவும் பண்ண முடியாமல் போகிறது. அவளை பழிவாங்க வேண்டும் என துடிக்கிறார் சிந்தாமணி.

55
மனோஜ் - ரோகிணி சந்திப்பு
Image Credit : jiohotstar

மனோஜ் - ரோகிணி சந்திப்பு

மறுபுறம் மனோஜ், தன்னுடைய ஷோரூமில் உட்கார்ந்துகொண்டு ரோகிணியை புகழ்ந்து தள்ளுகிறார். ஜீவாவும் மனோஜிடம் ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். அந்த நேரம் பார்த்து ரோகிணி அங்கே வருகிறார். அங்கு வந்ததும் மனோஜிடம் நல்ல விதமாக பேசும் ரோகிணி, அவருக்கு திருநீர் வைத்து விடுகிறார். மனோஜும் ரோகிணியிடம் நன்றாக பேச ஆரம்பிக்கிறார். நான் வீட்டுக்கு வர்றத பத்தி உங்க அம்மா என்ன சொன்னாங்க என ரோகிணி கேட்க, எங்க அம்மா நீ எப்பவுமே வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க, எனக்கே அதிர்ச்சியா தான் இருக்கு. என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார் மனோஜ். இதன்பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : ஃபிராடு வெளியபோ டி... ரோகிணியை விரட்டிவிட்ட விஜயா - மாட்டிக்கொண்டு முழிக்கும் மனோஜ்
Recommended image2
Ethirneechal Thodargiradhu : தர்ஷன் - அன்புக்கரசி கல்யாணம் நடந்ததா? ஆதி குணசேகரன் வைத்த எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷனை பழிவாங்கிய பார்கவி... அன்புக்கரசி கழுத்தில் தாலி ஏறுமா?
Related Stories
Recommended image1
Siragadikka Aasai Today Episode : டபுள் கேம் ஆடும் சிந்தாமணி... கைதான மனோஜை மீட்பாரா ரோகிணி? சிறகடிக்க ஆசை
Recommended image2
வீட்டை காப்பாற்ற மாடாக உழைக்கும் முத்து - மீனா... விஜயாவிடம் அடிவாங்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved