- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : ரேகாவை ஸ்கெட்ச் போட்டு கடத்திய முத்து... சத்யாவின் காதலுக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் சிந்தாமணி..!
Siragadikka Aasai : ரேகாவை ஸ்கெட்ச் போட்டு கடத்திய முத்து... சத்யாவின் காதலுக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் சிந்தாமணி..!
Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை ஆஸ்பத்திரியில் இருந்து வெற்றிகரமாக மீட்டு வந்துள்ளார் முத்து. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகா, சத்யாவை காதலிப்பதை அறிந்த சிந்தாமணியும், அவரது கணவரும், தங்கள் மகள் ரேகாவை திருப்பதியில் கடத்தி வைத்திருந்தார்கள். ரேகா தான் திருப்பதியில் இருக்கும் தகவலை சத்யாவிடம் சொன்னதை அடுத்து, முத்து ரேகாவிடம், மயக்கம் போட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகுமாறு சொல்கிறார். ரேகாவும் முத்து சொன்னபடி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக, இந்த விஷயம் சிந்தாமணிக்கு தெரியவந்து, அவர் இதெல்லாம் முத்துவின் வேலையாக தான் இருக்கும் என யூகிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Ethirneechal : இராவணன் மீது வந்த டவுட்... ஜனனியை விட்டு பிரியும் அருந்ததி - சிக்கப்போவது யார்?
ரேகாவை அலேக்காக கடத்திய முத்து
முத்து தன்னுடைய மனைவி மீனா மற்றும் சத்யா உடன் ஆம்புலன்ஸ் ஒன்றை எடுத்துக் கொண்டு ரேகா அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அங்கு சென்று ரேகாவை ஸ்கேன் எடுக்க வெளியே அழைத்து செல்ல வந்திருப்பதாக கூறி, ரெளடிகளை சமாளித்துவிட்டு, ரேகாவை வீல் சேரில் அமரவைத்து ஆம்புலன்ஸுக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் வெளியே ரேகாவின் தந்தை இருப்பதை பார்த்ததும் ஒரு ரூமுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறார்கள். பின்னர் ரேகாவின் அப்பா மாடிக்கு சென்றதும் ஆம்புலன்ஸில் ஏறி கிளம்புகிறார்கள்..
பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்லும் முத்து
மாடிக்கு சென்று ரூமில் ரேகா இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, அங்கிருந்த ரெளடிகளை எழுப்பி கேட்க, அவர்கள் மயக்க நிலையில் ஏதேதோ உலறிக் கொண்டிருக்க, பின்னர் கீழே வந்து தேடிப் பார்க்கிறார். அப்போது தான் அவர்கள் ஆம்புலன்ஸில் ரேகாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. பின்னர் முத்து, தன்னுடைய பாட்டி ஊருக்கு ரேகாவையும் சத்யாவையும் அழைத்து செல்கிறார். அங்கு தான் அவர்கள் இருவரும் பத்திரமாக இருப்பார்கள் என்பதால் அவர்களை அங்கு அழைத்து வந்ததாக கூறுகிறார் முத்து.
பாட்டியின் அரவணைப்பு
தன்னுடைய பாட்டியிடம் நடந்த விஷயத்தை சொல்கிறார் முத்து. அதற்கு அந்த பாட்டியும் சிந்தாமணி பொண்ணா இது. நான் இவங்கள பாத்துக்குறேன் என சொல்வதோடு, இந்த காலத்துல பெத்தவங்க பார்த்து நடத்துற கல்யாணத்தைவிட, ஒருத்தரை ஒருத்தர் காதலித்து திருமணம் செய்துகொள்பவர்கள் தான் சந்தோஷமா இருக்காங்க என கூறுகிறார். இதையடுத்து ரேகாவிடம், பேசும் பாட்டி, உன்னை பத்திரமா நான் பாத்துக்குறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

