- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சீதா எடுத்த முட்டாள்தனமான முடிவு... நீத்துவால் வில்லங்கத்தில் சிக்கும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சீதா எடுத்த முட்டாள்தனமான முடிவு... நீத்துவால் வில்லங்கத்தில் சிக்கும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் அருணின் பேச்சை நம்பி முத்து மற்றும் மீனா உடன் சண்டை போட்ட சீதா ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்திருக்கிறார். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, அருணை அடித்த நிலையில், இந்த பிரச்சனையில் முத்து மீது தான் தப்பு இருப்பதாக அருண் பிளேட்டை மாற்றிவிட, அருணின் அம்மாவும் சீதாவை சரமாரியாக சாடுகிறார். இனி அவர்களுடன் நீ பேசவே கூடாது எனவும் கண்டிஷன் போடுகிறார். இதையடுத்து தன் அம்மா வீட்டுக்கு செல்லும் சீதா, அங்கு வந்திருந்த முத்து மற்றும் மீனாவிடம் சண்டை போடுகிறார். அதுமட்டுமின்றி இனி நீங்க எனக்கு மாமாவே இல்லை என்றும், உங்க உறவே வேண்டாம் என்று கோபமாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பி செல்கிறார். இதனால் மனமுடைந்து போகிறார் முத்து.
கிரிஷின் பெற்றோராக மாறிய மனோஜ் - ரோகிணி
இதையடுத்து மனோஜ் தன்னுடைய அலுவலகத்தில் இருக்கும் போது அவருக்கு கிரிஷின் பள்ளியில் இருந்து போன் வருகிறது. அப்போது அந்த ஸ்கூல் மேனேஜர், கிரிஷ் இந்த முறை பள்ளியில் முதல் ரேங்க் எடுத்திருப்பதாகவும், அவனுக்கு சர்டிபிகேட் கொடுக்க இருக்கிறோம். அதை உங்கள் கையால் தான் வாங்குவேன் என கிரிஷ் விரும்புகிறான். அதனால் நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறார். இதற்கு மனோஜும் சம்மதம் தெரிவித்து கிரிஷின் ஸ்கூலுக்கு ரோகிணியோடு சென்று கிரிஷின் ஆசையை நிறைவேற்றுகிறார். அப்போது அங்கு முத்துவும் மீனாவும் வர, அவர்களிடமும் அந்த சர்டிபிகேட்டை காட்டி சந்தோஷப்படுகிறார் கிரிஷ்.
கிரிஷை விசாரிக்கும் விஜயா
பின்னர் மனோஜ் மற்றும் ரோகிணி, கிரிஷை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்கிறார்கள். கிரிஷ் இவர்களுடன் வருவதை பார்த்த விஜயா, நீ ஏண்டா இவனையெல்லாம் கூட்டிட்டு வர்ற என கேட்க, மனோஜ் நடந்ததை கூறுகிறார். இவர் எப்படி பர்ஸ்ட் ரேங்க் எடுத்தால், பார்த்து எழுதி பர்ஸ்ட் ரேங்க் எடுத்தியாடா என கிரிஷிடம் விஜயா கேட்க, அதைக்கேட்டு டென்ஷன் ஆன ரோகிணி, அவன் நல்லா படிப்பான் ஆண்டி என சொல்கிறார். பின்னர் விஜயாவின் சத்தத்தை கேட்டு எழுந்து வரும் அண்ணாமலை என்ன பிரச்சனை என கேட்கையில், முத்து நடந்தவற்றை கூறுகிறார். அந்த சமயத்தில் ரவி கோவாவில் இருந்து வீட்டுக்கு வருகிறார்.
நீத்துவால் சிக்கிய ரவி
ரவி வந்ததும் தான் ஜெயித்த கப்-ஐ காட்டி அனைவரிடமும் சந்தோஷப்படுகிறார். பின்னர் அனைவருக்கும் ஒரு கிஃப்ட் கொடுக்கிறார். இறுதியாக ரூமுக்குள் சென்று தன்னுடைய துணிகளை எல்லாம் பெட்டியில் இருந்து ரவி எடுத்து வைக்கும்போது, அதில் நீத்துவின் துணி ஒன்று இருக்கிறது. இதைப்பார்த்து ஷாக் ஆன ஸ்ருதி, நீ எப்போ லேடீஸ் டிரெஸ் எல்லாம் போட ஆரம்பிச்ச என கேட்க, அதற்கு ரவி, இது நீத்துவோட டிரெஸ் மாறி வந்திருக்கும் என சொல்கிறார். அப்போது ஸ்ருதிக்கு லைட்டாக ரவி மீது சந்தேகம் வருகிறது. இதையடுத்து என்ன ஆனது, என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

