MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அனல் பறக்க நடந்த மோதல்; சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 பைனலில் டைட்டிலை தட்டிதூக்கியது யார்?

அனல் பறக்க நடந்த மோதல்; சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 பைனலில் டைட்டிலை தட்டிதூக்கியது யார்?

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் என்கிற இசை நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. அதில் வெற்றிபெற்றது யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : May 12 2025, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Saregamapa lil Champs Season 4 Grand Finale
Image Credit : Twitter

Saregamapa lil Champs Season 4 Grand Finale

ஜீ தமிழில் நடத்தப்பட்டு வரும் புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி தான் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ். இந்நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் ஆகியவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படும். இதுவரை சீனியர்களுக்கான 4 சீசன்களும், ஜூனியர்களுக்கான நான்கு சீசன்களும் முடிவடைந்துள்ளது. குறிப்பாக சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் பிரம்மாண்ட இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

24
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4
Image Credit : Twitter

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவர்களாக பாடகி சைந்தவி, பாடகர் எஸ்.பி.பி சரண், பாடகி ஸ்வேதா மோகன், பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பணியாற்றினர். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான குட்டீஸ் கலந்துகொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் இறுதிப்போட்டிக்கு திவினேஷ், யோக ஸ்ரீ, ஹேமித்ரா, மஹதி, ஸ்ரீமதி, அபினேஷ் ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வாகி இருந்தனர்.

Related Articles

Related image1
Saregamapa : மகளின் காலில் விழுந்த தந்தை... தேம்பி தேம்பி அழுத நடுவர்கள் - சரிகமப நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
Related image2
Saregamapa : 12,000 பேர் பங்கேற்ற மெகா ஆடிஷன்... அதகளமாக ஆரம்பமாகிறது சரிகமப சீசன் 4 - அதுவும் இந்த தேதியிலா?
34
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 டைட்டில் வின்னர்
Image Credit : Twitter

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 டைட்டில் வின்னர்

இந்த நிலையில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் ஆர்யா, சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சிவகார்த்திகேயன் தான் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிவித்தார். அதன்படி இந்த சீசனில் கலக்கி வந்த திவினேஷ் தான் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். திவினேஷுக்கு டிராபியுடன் ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

44
டைட்டில் வின்னருக்கு மெல்லிசை இளவரசர் பட்டம்
Image Credit : Twitter

டைட்டில் வின்னருக்கு மெல்லிசை இளவரசர் பட்டம்

இதையடுத்து இரண்டாவது இடம் யோக ஸ்ரீக்கு கிடைத்தது. மூன்றாவது இடத்தை ஹேமித்ரா தட்டிச் சென்றார். சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட திவினேஷுக்கு மெல்லிசை இளவரசர் என்கிற பட்டமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் பழைய பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமானார் திவினேஷ். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்த நிலையில், தற்போது பைனலிலும் வெற்றிபெற்று அசத்தி உள்ளார்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாய்ப்பு கொடுக்க மறுத்த எம்.எஸ்.வி.! தனது பாடல் வரிகளால் எம்.எஸ்.வியை அழ வைத்த பாடலாசிரியர்.!
Recommended image2
நீத்துவை மருமகளாக்க ஆசைப்படும் விஜயா... அம்மாவால் அல்லல்படப்போகும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
Vijay TV : ஆரம்பிச்ச வேகத்தில் பிரபல சீரியலை இழுத்து மூடும் விஜய் டிவி... ஷாக் ஆன ரசிகர்கள்..!
Related Stories
Recommended image1
Saregamapa : மகளின் காலில் விழுந்த தந்தை... தேம்பி தேம்பி அழுத நடுவர்கள் - சரிகமப நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
Recommended image2
Saregamapa : 12,000 பேர் பங்கேற்ற மெகா ஆடிஷன்... அதகளமாக ஆரம்பமாகிறது சரிகமப சீசன் 4 - அதுவும் இந்த தேதியிலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved