Saregamapa : 12,000 பேர் பங்கேற்ற மெகா ஆடிஷன்... அதகளமாக ஆரம்பமாகிறது சரிகமப சீசன் 4 - அதுவும் இந்த தேதியிலா?
ஜீ தமிழில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. பல சாமானிய மக்களின் கனவை நனவாக்கி அவர்களின் இசை திறமையை உலகறிய செய்யும் மேடையாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.
ராக்ஸ்டார் ரமணியம்மா, வாவ் கார்த்திக், புருஷோத்தமன், நாகர்ஜுன், லக்ஷ்னா, அசானி, பிரியன் என பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக இந்த சரிகமப அமைந்துள்ளது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 27-முதல் சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மெகா ஆடிஷன், போட்டியாளர்கள் தேர்வு குறித்த பல சுவாரஷ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சீசனுக்காக தொடர்ச்சியாக 75 நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12,000 பேர் ஆடிஷனில் பங்கேற்றதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 12,000 பேரில் திறமையான 50 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையும் படியுங்கள்... பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட சோகம்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!
மேலும் மெகா ஆடிஷன் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமான செட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் இதில் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்வேதா மோகன், கே. எஸ் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கே. எஸ் ரவிக்குமார் 49 படங்களை இயக்கிய அனுபவத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதல் இரண்டு வாரங்கள் மெகா ஆடிஷன் சுற்று ஒளிபரப்பாகும் எனவும் இதன் மூலமாக இந்த நிகழ்ச்சியில் தொடர இருக்கும் திறமையானவர்களை போட்டியாளர்களை தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுவரை இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமே ஆடிஷனில் பங்கேற்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் நிலையில் இந்த முறை மலேஷியா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்த் என பல நாடுகளில் இருந்து பலர் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளனர்.
பெயிண்டர், ஓலை பின்னுபவர், போஸ்ட் woman என பல விதமான குடும்ப பின்புலங்களை கொண்டவர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்று இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியும் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Divya Bharathi : கொசுவலை போன்ற மெல்லிய சேலையில்... ஒல்லி பெல்லி இடையை காட்டி இளசுகளை இம்சிக்கும் திவ்ய பாரதி