- Home
- Cinema
- தொலைக்காட்சி
- முத்துவேல் மீது சக்திவேலுக்கு வந்த டவுட்... ராஜியிடம் பொய் சொன்ன கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
முத்துவேல் மீது சக்திவேலுக்கு வந்த டவுட்... ராஜியிடம் பொய் சொன்ன கதிர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேலுக்கு கேன்சர் சிகிச்சைக்காக கதிர் வீட்டில் பொய் சொல்லிவிட்டு திருச்சிக்கு கிளம்ப இருக்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடில், கதிர், ராஜியோட அப்பாவிடம், நானும் உங்களோடு தான் மருத்துவமனைக்கு வருவேன், நாம இருவரும் காரிலேயே சென்றுவிடலாம், நானே கார் எடுத்துட்டு வர்றேன் என சொல்லி இருக்கிறார். கதிர், பேசிக் கொண்டிருக்கும்போதே ராஜி அங்கு வந்துவிடுகிறார். உடனே போன் பேசுவதை பாதியிலேயே நிறுத்துவிட்டு கதிர் பதற்றமடைகிறார். இதை நோட் பண்ணும் ராஜி, ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க, என்ன ஆச்சு. இப்பல்லாம் ஒரு மாதிரி இருக்கியே என கேட்டவுடன், ஒன்னுமில்ல நான் நாளைக்கு திருச்சிக்கு போறேன். தான் மட்டும் தனியாக கார் ஓட்டிட்டு போக இருப்பதாக சொல்கிறார்.
ராஜியிடம் மழுப்பும் கதிர்
ஏன் டிரைவரோடு செல்லாமல் நீ மட்டும் தனியா போற என ராஜி கேட்டதும், ஏதேதோ சொல்லி சமாளிக்கப்பார்க்கிறார் கதிர். இவன் ஏதோ நம்மிடம் இருந்து மறைக்குறான் என ராஜிக்கு புரிகிறது. ஆனால் அவர் பெருசா எதுவும் கண்டுகொள்ளவில்லை. மறுபுறம் மீனா, தங்கமயிலிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சரவணன் தன்னிடம் வந்து பேசிய விஷயம், அவரை கண்டுகொள்ளாமல் தான் சென்ற விஷயம் போன்றவற்றை, தங்கமயில் மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு செந்தில் வந்துவிடுகிறார். அப்போது மீனா, போனை உடனே கட் பண்ணிவிடுகிறார்.
செந்திலுக்கு வந்த டவுட்
தங்கமயிலிடம் பேசியது இவனுக்கு கேட்டிருக்குமோ என்கிற பதற்றத்திலேயே இருக்கிறார் மீனா. இதைப்பார்த்த செந்திலுக்கு அவர் மீது டவுட் வருகிறது. மீனா அங்கிருந்து சென்றபின்னர் செந்தில் அவரின் போனை எடுத்து பார்க்கிறார். அப்போது மீனா தங்கமயில் பெயரை ஷியாமளா பதிவு செய்து வைத்திருக்கிறார். அதைப்பார்த்த செந்தில், இவ ஷியாமளா கிட்ட தான பேசிருக்கா, அப்புறம் ஏன் பதட்டமா இருக்கா என சந்தேகப்படுகிறார் செந்தில். இதையடுத்து மறுநாள் காலையில், கதிர் அவசர அவசரமாக எழுந்து கிளம்பி, சாப்பிடாமல் திருச்சிக்கு கிளம்புவதாக சொல்கிறார்.
ஊருக்கு கிளம்பும் முத்துவேல்
அப்போது அவரைப் பார்த்த பாண்டியன், எப்பவும் டிரைவர் தான அனுப்புவ, இப்போ என்ன நீ போற என கேட்க, அதற்கு அவர், எல்லா நேரமும் டிரைவரை அனுப்ப முடியாது, சில பேர் என்கூட வர்றது தான் சேஃப்னு நினைப்பாங்க, அதனால நான் அங்கு போய் ஆகணும்னு ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி, அவசர அவசரமா கிளம்பி வெளிய வர்றாரு கதிர். மறுபுறம் ராஜியின் தந்தையும் நான் திருச்சி வரை செல்கிறேன் என சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியே வருகிறார். நானும் உன்கூட வர்றேன்னு சக்திவேல் கேட்கிறார். ஆனால் ராஜியின் அப்பா அதெல்லாம் வேண்டாம் என சொல்லிவிடுகிறார்.
சந்தேகப்படும் சக்திவேல்
பின்னர் அண்ணனை வழியனுப்ப சக்திவேல் வீட்டுக்கு வெளியே வருகிறார். அந்த நேரம் பார்த்து கதிரும் பேக்கை மாட்டிக் கொண்டு வெளியே வந்து நிற்கிறார். முத்துவேலும் டாக்குமெண்ட்களை எடுத்துக் கொண்டு வெளியூர் போகப் போறேன் என சொன்னதால், கதிரை பார்த்ததும் சக்திவேலுக்கு லைட்டாக சந்தேகம் வருகிறது. நம்மளுக்கு தெரியாம இவங்க ரெண்டு பேரும் ஏதோ பிளான் போடுறாங்களோ என சந்தேகப்படுகிறார் சக்திவேல். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

