- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Chinna Marumagal Actor Naveen Hospitalized : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரின் நாயகன் நவீன், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Chinna Marumagal Actor Naveen Hospitalized
சின்னத்திரையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் “சின்ன மருமகள்” சீரியல், பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத இந்த தொடரில் ஸ்வேதா நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், சின்ன மருமகள் சீரியலின் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் நவீன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு என்ன ஆச்சு? எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

நவீனுக்கு என்ன ஆச்சு?
தகவலின்படி, சில நாட்களுக்கு முன்பு கடும் வெயிலில் ஆக்ஷன் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் வெப்பமான சூழலில் நடித்ததால், நடிகர் நவீனின் உடல் வெப்பநிலை திடீரென அதிகரித்து, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பிறகும் அவரின் உடல்நிலை சீராகாததால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற நவீன்
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து, ஆக்ஸிஜன் உதவி வழங்கியதுடன், முழுமையான ஓய்வு அவசியம் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சீரியலின் முக்கியமான திருமணக் காட்சிகள் திட்டமிட்டபடி நடைபெற வேண்டியிருந்ததால், தயாரிப்பு குழு அவரை மீண்டும் படப்பிடிப்பிற்கு வருமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து நேரடியாகவே நடிகர் நவீன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவீனுக்கு குவியும் பாராட்டு
உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும், எபிசோடுகள் தாமதமடையக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் அவர் தொடர்ந்து நடித்தது, ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், சீரியல் முக்கியம் தான், ஆனால் உடல்நலன் அதைவிட முக்கிய, அதை பார்த்துக் கொள்ளுங்கள் என நவீனுக்கு அட்வைஸ் பண்ணி வருகின்றன. சின்ன மருமகள் சீரியல் விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் டிஆர்பியிலும் படிப்படியாக முன்னேறி வருகிறது.

