MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஆரம்பிச்சு ஒரு மாசம் தான் ஆகுது அதுக்குள்ளயா...! பாரதி கண்ணம்மா 2 சீரியலில் இருந்து விலகிய நடிகை

ஆரம்பிச்சு ஒரு மாசம் தான் ஆகுது அதுக்குள்ளயா...! பாரதி கண்ணம்மா 2 சீரியலில் இருந்து விலகிய நடிகை

பிரவீன் பென்னட் இயக்கிய பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் சீசன் வெற்றியடைந்த நிலையில், தற்போது அதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 07 2023, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் மவுசு இருப்பதால் தற்போது சீசன் 1, சீசன் 2 என சில சீரியல்கள் சீசன் வாரியாக நீண்டு கொண்டு செல்கின்றன. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலும் தற்போது 2-வது சீசனில் நகர்ந்து வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதற்கு முக்கிய காரணம் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி என்றே சொல்லலாம்.

24
ரோஷினி, வினுஷா

ரோஷினி, வினுஷா

அவர் இந்த சீரியலை விட்டு விலகிய பின்னர் அவருக்கு பதில் வினுஷா என்பவரை கண்ணம்மாவாக நடிக்க வைத்தனர். அதன் பின் சீரியல் டல் அடிக்க தொடங்கியதால், வேறு வழியின்றி எண்ட் கார்டு போட்டு, தற்போது அதன் இரண்டாவது சீசனை ஆரம்பித்து விட்டார்கள். இது முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. இதையும் பிரவீன் தான் இயக்கி வருகிறார்.

இதையும் படியுங்கள்...ஹீரோவை தொடர்ந்து ஹீரோயினையும் மாற்றிய பாலா... வணங்கான் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

34
சிபு சூர்யன்

சிபு சூர்யன்

பாரதி கண்ணம்மா சீசன் 2-வில் வினுஷா நாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக பாரதி கேரக்டரில், சிபு சூர்யன் என்பவர் நடித்து வருகிறார். மேலும் ரூபாஸ்ரீ, தீபா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது தான் இந்த சீரியல் படிப்படியாக பிக் அப் ஆகத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், அதில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

44
பிரியங்கா தாஸ், சாய் ரித்து

பிரியங்கா தாஸ், சாய் ரித்து

பாரதி கண்ணம்மா 2 சீரியலில் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா தாஸ் என்பவர் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது அவர் அந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதால், அவருக்கு பதில் சாய் ரித்து என்பவர் அஞ்சலியாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சீரியல் ஆரம்பிச்சு ஒரு மாதமே ஆகும் நிலையில், நடிகை ஒருவர் விலகி இருப்பது பேசு பொருள் ஆகி உள்ளது. அவர் எதற்காக விலகினார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்...Gopi sudhakar : கோபி, சுதாகரின் யூடியூப் சேனலுக்கு தடையா?... வடக்கன்ஸ் வீடியோவால் கிளம்பிய புது சிக்கல்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Recommended image2
மகளைக் கண்டுபிடித்த விக்ரம்! நிலா தான் தன் மகள் எனத் தெரிந்ததும் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு!
Recommended image3
ஆக்‌ஷன் மோடில் கார்த்திகை தீபம்! புதையல், மோதல் என பறக்கும் காட்சிகள் - லாஜிக் எங்கே எனப் புலம்பும் ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved