- Home
- Cinema
- தொலைக்காட்சி
- போடா டியூப்லைட்... மனோஜை திட்டித்தீர்த்த ரோகிணி; மீனாவுக்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ் - சிறகடிக்க ஆசை சீரியல்
போடா டியூப்லைட்... மனோஜை திட்டித்தீர்த்த ரோகிணி; மீனாவுக்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ் - சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜிடம் இருந்து 50 ஆயிரம் பணம் வாங்கிய விஷயம் விஜயாவுக்கு தெரிந்ததால் தன்னுடைய கணவர் மீது செம கோபத்தில் இருக்கிறார் ரோகிணி.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி காசு கேட்டு மிரட்டியதால், வேறு வழியின்றி மனோஜிடம் பொய் சொல்லி 50 ஆயிரம் ரூபாயை வாங்கி இருந்தார் ரோகிணி. இதையடுத்து வீட்டுக்கு வந்த மனோஜிடம் விஜயா காசு கேட்டபோது, அவர் தான் ரோகிணிக்கு 50 ஆயிரத்தை கொடுத்த விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு கடுப்பான விஜயா, உனக்கு எதுக்கு அவ்வளவு காசு என கேட்க, தன்னுடைய தோழி வித்யாவின் திருமணத்துக்கு மொய் செய்ய வாங்கியதாக சொல்கிறார். அதற்கு 101 ரூபா செஞ்சா போதாதா... இவ்வளவு செய்யனுமா என கேட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
ரோகிணியிடம் திட்டு வாங்கிய மனோஜ்
இதையடுத்து ரூமுக்குள் மனோஜை அழைத்து சென்ற ரோகிணி, அவரை சரமாரியாக திட்டுகிறார். எனக்கு பணம் கொடுத்தது தெரிஞ்சா உங்க அம்மா உன்னை திட்டுவாங்கனு தெரியாதா.. அப்பறம் எதுக்கு எனக்கு பணம் கொடுத்ததை உங்க அம்மாகிட்ட சொன்ன. நான் ஏதோ உனக்கு எதுவும் பண்ணாதது மாதிரில அவங்க பேசுறாங்க. ஷோரூம்ல நான் உனக்கு வேலை பார்க்காம இருக்கேனா. எப்பயாவது தான் பிரைடல் மேக் அப் போறேன். மத்த நேரம் ஃபுல்லா நான் ஷோரூம்ல தான உட்காந்துட்டு இருக்கேன். அந்த ஷோரூம் வைக்க உனக்கு யார் உதவி செஞ்சது என ரோகிணி கேட்க, அதற்கு மனோஜ் நீ தான் என சொல்கிறார்.
மீனாவுக்காக முத்து என்னவெல்லாம் செய்யுறாரு பாரு
தொடர்ந்து பேசும் ரோகிணி, பேருக்கு பின்னாடி இவ்வளவு டிகிரி போட்டிருக்கேல்ல, உனக்கு அறிவு கொஞ்சமாவது இருக்கா என கேட்கிறார். முத்து உன்னை மக்குனு சொல்றது சில நேரத்துல கரெக்டா தான் இருக்கு மனோஜ் என திட்டுகிறார். இதற்கு முன்னாடி நான் உன்னை இப்படியெல்லாம் பேசியிருக்கேனா... ஆனால் நீ தான் என்னை இப்படியெல்லாம் பேச வச்சிட்டு இருக்க. எனக்கு இந்த வீட்டுல யாருமே சப்போர்ட் பண்றதில்ல. நீயும் இப்படி இருக்க. மீனாவோட வண்டி தொலைஞ்சி போச்சு, அவளுக்கு புது வண்டி வாங்கிக் கொடுக்க முத்து என்னவெல்லாம் செய்கிறார் பாரு.
மீனாவுக்கு புது பைக் வாங்கி கொடுத்த முத்து
மீனாவுக்கு ஒன்னுன்னா உங்க அப்பா, ரவி, ஸ்ருதி எல்லாருமே போட்டி போட்டு பணம் கொடுக்குறாங்க. ஏன் எனக்கு மட்டும் யாருமே எதுவுமே செய்ய மாட்டேங்குறாங்க. என்னை மட்டும் இந்த வீட்டில் யாருமே மதிப்பதில்லை. என்னை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். நீயும் என்னை இப்படி ட்ரீட் பண்ணா நான் என்ன தான் பண்ணுவேன் என ஃபீல் பண்ணி பேசுகிறார் ரோகிணி. மறுபுறம் மீனாவுக்கு சர்ப்ரைஸ் செய்யும் விதமாக புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொடுத்துள்ளார் முத்து. இருவரும் கோவிலில் பூஜை போட்டு வண்டியில் ஜோடியாக ரைடு சென்று மகிழ்ந்துள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.