- Home
- Cinema
- தொலைக்காட்சி
- முத்துவிடம் கையும் களவுமாக சிக்கிய சிந்தாமணி... பணம் கேட்டு மிரட்டப்படும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல்
முத்துவிடம் கையும் களவுமாக சிக்கிய சிந்தாமணி... பணம் கேட்டு மிரட்டப்படும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, சிந்தாமணியை நேரில் சந்தித்து, அவரை பிளாக்மெயில் செய்வதோடு, மீனாவின் பைக்கை திரும்பி தராவிட்டால் உங்க காரை கொளுத்திடுவேன் எனவும் மிரட்டுகிறார்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறடிக்க ஆசை சீரியலில் மீனாவின் பைக்கை சிந்தாமணியின் ஆட்கள் தான் திருடினார்கள் என்கிற விஷயம் முத்துவுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் நேரடியாக சிந்தாமணியை சந்திக்க செல்கிறார். அவர் யோகா கிளாஸில் இருந்து வெளியே வந்ததும், தன்னுடைய கார் எங்கே என தேடிக்கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் முத்து, காரை நான் தான் தூக்கிட்டேன் என சொல்கிறார். அதை சிந்தாமணி நம்பாததால், உடனே தன்னுடைய போனில் உள்ள ஆதாரத்தை காட்டுகிறார். என்னுடைய காரையா தூக்குற இரு உங்க அம்மாகிட்ட சொல்றேன் என்று சிந்தாமணி சொன்னதும். அப்படியே நீங்க செஞ்ச வேலையையும் நான் சொல்றேன் என கூறுகிறார் முத்து.
சிந்தாமணியை மிரட்டும் முத்து
மீனா வண்டியை ஏன் தூக்குனீங்க என முத்து கேட்க, அதற்கு அவர் நான் அதெல்லாம் பண்ணல என மழுப்புகிறார். உண்மையை சொல்லாவிட்டால் உங்க காரை கொளுத்தி தீபாவளி கொண்டாடிருவேன் என முத்து மிரட்டியதும் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக் கொள்கிறார் சிந்தாமணி. பின்னர் காரை வரச் சொன்னால் மீனாவின் வண்டி எங்கே இருக்கிறது என்பதை சொல்கிறேன் என கண்டிஷன் போடுகிறார் சிந்தாமணி. இதையடுத்து கார் அங்கே வருகிறது. அதில் ஏறி செல்லும் முன் ஒரு அட்ரெஸை கொடுத்து, இங்கே தான் மீனா வண்டி இருக்கிறது என சொல்கிறார் சிந்தாமணி.
மீனாவின் வண்டியை பார்சல் பண்ணிய கும்பல்
அவர் சொன்ன இடத்துக்கு சென்று மீனாவின் வண்டியை தேடிப் பார்க்கிறார் முத்து. அங்கு அந்த வண்டி இல்லாததால், அங்கு இருப்பவர்களை அடித்து அந்த வண்டியை என்ன செய்தீர்கள் என கேட்கிறார். அதற்கு அவர்கள் அந்த பைக் பீகாருக்கு அனுப்பிவிட்டதாகவும், இனி அது கிடைக்காது எனவும் கூறுகிறார்கள். இதனால் பைக்குக்கான காசை அவர்களிடம் இருந்து வசூலிக்க முடிவெடுக்கும் முத்து, திருடியவர்களிடம் இருந்து 30 ஆயிரம் கேட்கிறார். எஞ்சியுள்ள 40 ஆயிரத்தை சிந்தாமணியிடம் வாங்கித் தர வேண்டும் எனவும் உத்தரவிடுகிறார். அவர்களும் சிந்தாமணிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறார்கள்.
ரோகிணியை பிளாக்மெயில் செய்யும் சிந்தாமணி
ரோகிணி சொல்லி தான் இதையெல்லாம் செய்திருந்தார் சிந்தாமணி, அதனால் ரோகிணிக்கே போன் போட்டு 40 ஆயிரம் கேட்கிறார். கொடுக்காவிட்டால் உன்னால் தான் இதெல்லாம் செய்தேன் என சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறார். இதனால் வேறுவழியின்றி பணம் கொடுக்க சம்மதிக்கிறார் ரோகிணி. அந்த பணத்தை தன்னுடைய கணவர் மனோஜிடம் கேட்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன ஆனது? ரோகிணி கேட்ட பணத்தை மனோஜ் கொடுத்தாரா? சிந்தாமணியிடம் பைக்கை தூக்க சொன்னது ரோகிணி தான் என்கிற உண்மை முத்துவுக்கு தெரியவந்ததா? என்பதை இனி வரும் எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.