MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மனோஜை மடக்க ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்

மனோஜை மடக்க ரோகிணி போட்ட மாஸ்டர் பிளான்... முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி - சிறகடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தன் மீது போட்டுள்ள டைவர்ஸ் கேஸை திரும்பப் பெற வைக்க ரோகிணி மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டிருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 04 2026, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் அருணின் அம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற முத்துவை அசிங்கப்படுத்தி அனுப்பிய அருண், என்னோட அம்மா சாவுக்கு நீ தான் காரணம் என்றும் சண்டைபோட்டுள்ளார். இதையடுத்து முத்துவை வந்து சந்திக்கும் செல்வத்தின் மனைவி, தன்னுடைய கணவரை எப்படியாவது வெளியே கொண்டு வந்திருங்க என கெஞ்சிக் கேட்கிறார். செல்வத்தை ஜாமினில் எடுத்தால் அருணுக்கு கோபம் இன்னும் அதிகமாகும் என்பது தெரிந்தும், செல்வத்திற்காக வக்கீலை சந்திக்க முத்துவும், மீனாவும் சென்றிருக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
செல்வத்தை ஜாமினில் எடுக்க முயலும் முத்து
Image Credit : jiohotstar

செல்வத்தை ஜாமினில் எடுக்க முயலும் முத்து

மனோஜின் டைவர்ஸ் கேஸை நடத்தும் வக்கீலிடம் தான் செல்வத்தை ஜாமினில் வெளியே எடுப்பது தொடர்பாக பேசி உள்ளார் முத்து. அப்போது அந்த வக்கீல், அடிபட்டு கையில் கட்டுடன் இருக்கும் தன்னுடைய கணவரை விழுந்து விழுந்து கவனிப்பதோடு, அவருக்கு சாப்பாடும் ஊட்டி விடுகிறார். இதைப்பார்த்த முத்துவும், மீனாவும் இந்த காலத்துல இப்படி ஒரு பாசமான கணவன், மனைவியா என சந்தோஷப்படுகிறார்கள். அதன்பின்னர் செல்வத்தின் கேஸை பற்றி விவரமாக வக்கீலிடம் சொல்கிறார்கள். அதற்கு அவர் இது பெரிய விஷயமே இல்லை, விபத்து தான, நீங்க கவலைப்படாதீங்க நான் அவரை ஜாமினில் எடுக்கிறேன் என சொல்கிறார்.

Related Articles

Related image1
அசிங்கப்பட்ட முத்து... ரவியிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ருதியின் அப்பா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Related image2
விபத்தில் பறிபோன அருண் அம்மாவின் உயிர்... முத்து மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
35
அருணின் அடாவடி
Image Credit : jiohotstar

அருணின் அடாவடி

மறுபுறம் செல்வத்தின் மனைவியும், நண்பர்களும் அருணின் வீட்டிற்கு செல்கிறார்கள். எப்படியாச்சும் தன்னுடைய கணவரை விடச் சொல்லி கேட்கலாம் என செல்வத்தின் மனைவி செல்ல, அருண் வழக்கம்போல் தாம் தூம் என குதிக்கிறார். செல்வத்தின் மனைவியை திட்டும் அவர், உடனிருந்த முத்துவின் நண்பர்களையும் அடிக்க பாய்கிறார். அப்போது அங்கு முத்துவும் மீனாவும் வருகிறார்கள். சண்டைபோட்ட அருண், முத்துவை பார்த்ததும் வீட்டுக்குள் சென்றுவிடுகிறார். இதையடுத்து செல்வத்தின் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் முத்து, தான் செல்வத்தை ஜாமினில் எடுக்க ஏற்பாடு செய்வதாக கூறி இருக்கிறார்.

45
மனோஜுக்கு போன் போடும் ரோகிணி
Image Credit : jiohotstar

மனோஜுக்கு போன் போடும் ரோகிணி

பின்னர் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கு ஸ்ருதியை பற்றி அண்ணாமலை, விஜயா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தனியாக ரூமில் இருக்கும் மனோஜுக்கு ரோகிணியிடம் இருந்து கால் வருகிறது. அதை எடுத்து பேசுகிறார் மனோஜ். அப்போது ரொமாண்டிக்காக பேசும் ரோகிணி, மனோஜின் மனசை மாற்ற முயற்சிக்கிறார். இந்த டைவர்ஸ் கேஸில் இருந்து தப்பிக்க ரோகிணிக்கு ஒரே வழி தான் இருக்கிறது. மனோஜே தனக்கு டைவர்ஸ் வேண்டாம் என சொல்ல வைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் தப்பிக்க முடியும் என முடிவெடுத்து, மனோஜை தன் வழிக்கு கொண்டுவர பிளான் போடுகிறார் ரோகிணி.

55
முத்துவிடம் மன்னிப்பு கேட்கும் ரவி
Image Credit : jiohotstar

முத்துவிடம் மன்னிப்பு கேட்கும் ரவி

கொஞ்ச நேரம் கழித்து ரவி வீட்டுக்கு வருகிறார். வந்த உடனே முத்துவை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கிறார் ரவி. தான் உன்னை தவறாக நினைத்துவிட்டதாகவும், அதற்கு என்னை மன்னித்துவிடு என்றும் ஃபீல் பண்ணுகிறார் ரவி. முத்துவும் பெருந்தன்மையோடு ரவியை மன்னித்துவிடுகிறார். அப்போது ரவியின் பாக்கெட்டில் பாட்டில் சத்தம் கேட்கிறது. ரவி சரக்கு வாங்கிட்டு வந்திருக்கும் விஷயம் மீனாவுக்கும் தெரிந்துவிடுகிறது. இதனால் இரவில் ரவி, மனோஜ் மற்றும் முத்து உடன் சேர்ந்து மாடியில் சரக்கடிக்க பிளான் போட்டிருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேவசகாயம்... அடிச்சு தூக்க சொன்ன ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
Moondru Mudichu: இன்று வெளியான ஹாட் நியூஸ்! ‘மூன்று முடிச்சு’ சீரியலில் தொடங்கும் புதிய அத்தியாயம்!
Recommended image3
OTT This Week: தியேட்டருக்கு போக முடியலையா? கவலை விடுங்க! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மாஸ் படங்கள்!
Related Stories
Recommended image1
அசிங்கப்பட்ட முத்து... ரவியிடம் கையும் களவுமாக சிக்கிய ஸ்ருதியின் அப்பா - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
விபத்தில் பறிபோன அருண் அம்மாவின் உயிர்... முத்து மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved