MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • விபத்தில் பறிபோன அருண் அம்மாவின் உயிர்... முத்து மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

விபத்தில் பறிபோன அருண் அம்மாவின் உயிர்... முத்து மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவிடம் சண்டைபோட்டு சென்ற செல்வம் அருணின் அம்மா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 02 2026, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்துவை ரவி உடன் இனி பழகக்கூடாது என்று சொல்லி முத்து மிரட்டியதை அடுத்து மறுதினமே நீத்துவின் ரெஸ்டாரண்ட் சில மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறது. முத்து தான் இதையெல்லாம் செய்திருப்பார் என நீத்து சொல்ல, அதைக்கேட்ட ரவி கடுப்பாகி முத்துவிடம் வந்து சண்டை போட்டிருக்கிறார். அதேபோல் ரெளடிகள் சிலர் நீத்துவின் காலையும் அடித்து உடைத்திருக்கிறார்கள். இதனால் நீத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை ரவி தான் பார்த்துக் கொள்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ரோகிணி செய்யும் அட்ராசிட்டி
Image Credit : jiohotstar

ரோகிணி செய்யும் அட்ராசிட்டி

மனோஜின் ஷோரூமிற்கு வரும் ரோகிணி, அங்கு ஒரு கஷ்டமரையும் அழைத்து வந்து, அவருக்கு ஓவன் பார்க்க இருப்பதாக சொல்கிறார். அவருக்கு என்னென்ன மாடல் ஓவன் இருக்கிறது என்று ஜீவா காட்ட, அந்த நபர் ரோகிணியிடம் வழிந்து வழிந்து பேசுகிறார். இதைப்பார்த்து மனோஜ் கடுப்பாகிறார். அதேபோல் அவருக்காக வாங்கி வந்த டீ-யையும் ரோகிணி உடன் சேர்ந்து ஒரே கப்பில் அந்த நபர் குடிக்க, மனோஜுக்கு கோபம் உச்சிக்கு ஏறுகிறது. மனோஜை வெறுப்பேற்ற ரோகிணியும் அந்த நபரிடம் சிரித்து சிரித்து பேசுகிறார். பின்னர் மனோஜிடம் கணக்குவழக்கை பார்க்க அழைக்கிறார். அவர் இன்னொரு நாள் பார்க்கலாம் நீ இங்க இருந்து கிளம்பு என சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.

Related Articles

Related image1
முத்துவுக்கு வில்லனாக மாறும் ரவி... நீத்துவால் வெடித்த புது பிரச்சனை - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Related image2
ஒரே டீலில் மனோஜை கிளீன் போல்டு ஆக்கிய ரோகிணி... நீத்துவுக்கு முத்து கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை அப்டேட்
35
ஸ்ருதியிடம் உண்மையை சொன்ன மீனா
Image Credit : jiohotstar

ஸ்ருதியிடம் உண்மையை சொன்ன மீனா

இதையடுத்து மீனா, ஸ்ருதியை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பார்த்த ஸ்ருதியின் அப்பா, என் பொண்ணை இங்க அனுப்பிட்டு நீங்கெல்லாம் சந்தோஷமா இருக்கீங்களா என கேட்க, அதற்கு மீனா, நாங்க ஸ்ருதியை அனுப்பல, அவங்க எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம் என சொல்ல, அதற்கு ஸ்ருதியின் அம்மா, என் பொண்ணு அங்க வரமாட்டா, மாப்ள வந்து இங்க ஸ்ருதி கூட இருக்கணும் என சொல்கிறார். அப்போது தான் நீத்துவின் ரெஸ்டாரண்ட் எரிந்துபோன விஷயத்தை சொல்கிறார் மீனா. அதேபோல் அந்த பழி முத்து மீது விழுந்ததாகவும், ரவி தற்போது நீத்துவுடன் மருத்துவமனையில் இருப்பதையும் சொல்லிவிடுகிறார்.

45
பலியான அருணின் அம்மா
Image Credit : jiohotstar

பலியான அருணின் அம்மா

இதன்பின்னர் அங்கிருந்து கிளம்பும் மீனா, ஒரு கடையில் பூ கொடுக்கும் போது அங்கு ஒரு பெண் கார் மோதி கீழே விழுந்ததை கேள்விப்பட்டு, அது யார் என பார்க்க செல்கிறார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெண் வேறுயாருமில்லை மீனாவின் தங்கச்சி சீதாவின் மாமியார் தான். அருணின் அம்மா அடிபட்டு பேச்சு மூச்சின்றி கிடக்கும் விஷயத்தை முத்து, சீதா ஆகியோருக்கு போன் போட்டு சொல்கிறார் மீனா. இதன்பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

55
செல்வத்தின் கார் மோதியதால் பறிபோன உயிர்
Image Credit : jiohotstar

செல்வத்தின் கார் மோதியதால் பறிபோன உயிர்

அருணின் அம்மா மீது மோதிய காரை ஓட்டி வந்தது வேறுயாருமில்லை முத்துவின் நண்பன் செல்வம் தான். அவர் முத்துவிடம் சண்டைபோட்டுவிட்டு கோபத்தில் சென்றுகொண்டிருந்த போது தான் அருணின் அம்மா மீது மோதிவிடுகிறார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். பின்னர் அருண் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முத்து வர, அவரை வாசலிலேயே தடுத்து நிறுத்தும் அருண், உன்னால தான் எல்லாமே என சொல்ல முத்து ஷாக் ஆகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம். அருணின் அம்மாவாக சீரியலில் நடித்துள்ள ராஜேஸ்வரி நிஜத்திலும் இறந்துவிட்டார். அவர் கடந்த மாதம் தற்கொலை செய்து உயிரிழந்தார். அவரது கதையை சீரியலிலும் தற்போது முடித்திருக்கிறார்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Recommended image2
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!
Recommended image3
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நிறுத்தப்படுகிறது - சன் டிவியின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
Related Stories
Recommended image1
முத்துவுக்கு வில்லனாக மாறும் ரவி... நீத்துவால் வெடித்த புது பிரச்சனை - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
ஒரே டீலில் மனோஜை கிளீன் போல்டு ஆக்கிய ரோகிணி... நீத்துவுக்கு முத்து கொடுத்த வார்னிங் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved