- Home
- Cinema
- தொலைக்காட்சி
- வித்யா கல்யாணத்தால் வில்லங்கத்தில் சிக்கிய ரோகிணி... சித்தி மேட்டரால் மீனாவுக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை
வித்யா கல்யாணத்தால் வில்லங்கத்தில் சிக்கிய ரோகிணி... சித்தி மேட்டரால் மீனாவுக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா கல்யாணத்தில் கலந்துகொண்ட ரோகிணி, தன்னுடைய முதல் கணவரின் வீட்டாரிடம் சிக்கிக் கொள்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் தோழி வித்யாவிற்கு கல்யாணம் நடைபெற்றது. கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொள்ள ரோகிணி வந்திருந்தார். அதுமட்டுமின்றி இந்த கல்யாணம் கைகூட முக்கிய காரணம் முத்து - மீனா தான். அதனால் இந்த கல்யாணத்தில் அவர்கள் இருவருமே கலந்துகொண்டார்கள். இந்த கல்யாணத்தில் ரோகிணியின் முதல் கணவர் வீட்டாரும் கலந்துகொள்ள, அவர்கள் ரோகிணியை அடையாளம் கண்டு, இது கல்யாணி தான என்கிற சந்தேகத்தில் அவரிடம் பேச செல்கிறார்கள். இதன் பின்னர் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
வித்யா திருமணம்
அந்த பெண்ணை பார்த்ததும் ஒளிந்துகொள்ளும் ரோகிணி, தன்னுடைய தோழி மகேஸ்வரியை அனுப்பி அவரிடம் பேச வைக்கிறார். அப்போது அது கல்யாணி தான என கேட்க, அவரோ அது ரோகிணி என சொல்லிவிட்டு செல்கிறார். பின்னர் மீனாவிடமும் அந்தப் பெண், கல்யாணி பற்றி பேசுகிறார். இதையடுத்து ரோகிணியிடமே வந்து நீ கல்யாணி தான என பேசுகிறார். அப்போது தான் பிசியாக இருப்பதை போல் காட்டிக் கொண்டு அங்கிருந்து நழுவி சென்றுவிடுகிறார் ரோகிணி. பின்னர் வித்யாவின் கல்யாணம் முடிகிறது. அப்போது முத்துவும் மீனாவும் தான் தாலி எடுத்துக் கொடுக்கிறார்கள்.
சொந்தக்கார பெண்ணுக்கு செம டோஸ் கொடுத்த ரோகிணி
கல்யாணம் முடிந்ததும் தன்னுடைய சொந்தக்கார பெண்ணை, வித்யாவின் சித்தி என மீனாவிடம் சொல்லும் ரோகிணி, அவரை சாப்பிட அழைத்து செல்வதாக கூறிவிட்டு, தனியே அழைத்து சென்று திட்டுகிறார். கல்யாணத்துக்கு வந்தோமா, வாழ்த்துனோமா, சாப்டோமானு போயிட்டே இருக்கனும். இந்த சொந்தம் கொண்டாடுற வேலையெல்லாம் வேண்டாம். எல்லாமே முடிஞ்சு போச்சு. நான் தான் உங்க சகவாசமே வேண்டாம்னு தள்ளிவந்துட்டேன்ல, தேவையில்லாம அடுத்தவங்க வாழ்க்கையில ஏன் மூக்கை நுழைக்குறீங்க. உங்க வேலை என்னவோ அதைமட்டும் பார்த்துட்டு போங்க என திட்டிவிடுகிறார். இதனால் டென்ஷனான அந்த பெண், இனிமே உன்கிட்ட பேசவே மாட்டேன் என சொல்லிவிட்டு செல்கிறார்.
மீனாவுக்கு வந்த சந்தேகம்
பின்னர் மேடையில் போட்டோ எடுக்க வந்த மீனாவிடம், ரோகிணி எங்கே என வித்யா கேட்க, அவங்க உன்னுடைய சித்தியை சாப்பிட கூட்டிட்டு போயிருக்காங்க என சொல்கிறார். அப்போது வித்யா தனக்கு சித்தியே கிடையாது என சொல்கிறார். இதனால் மீனாவுக்கு டவுட் வருகிறது. வீட்டுக்கு சென்று கல்யாணத்தில் எடுத்த போட்டோவை முத்து பார்த்துக் கொண்டிருந்தபோது கிரீஷின் பாட்டி வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இந்த தகவல் ரோகிணிக்கும் தெரிந்து அவர் தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு திட்டுகிறார். இதையடுத்து என்ன நடக்கும் என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.