- Home
- Cinema
- தொலைக்காட்சி
- குற்ற உணர்ச்சியால் குமுறும் மீனா... குஷியில் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
குற்ற உணர்ச்சியால் குமுறும் மீனா... குஷியில் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்தும் அதை குடும்பத்தினரிடம் இருந்து மறைப்பதால், குற்ற உணர்ச்சி ஏற்பட்டு கடும் அப்செட்டில் இருக்கிறார் மீனா. அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றது. ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மை மீனாவுக்கு தெரியவந்துள்ளது. ரோகிணி தன்னுடைய தந்தைக்கு திதி கொடுக்க சென்ற நிலையில், அவர் கிரிஷின் அம்மா என்கிற உண்மையை கண்டுபிடித்த மீனா, அவருக்கு பளார் என அறைவிட்டார். அதுமட்டுமின்றி இந்த உண்மையை அனைவரிடமும் சொல்லப்போவதாக கிளம்பிய மீனாவை, எமோஷனல் பிளாக்மெயில் செய்த ரோகிணி, நீ உண்மையை சொன்னா நான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியதால், தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கினார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
ரோகிணியை வெளுத்து வாங்கும் மீனா
ஊரில் தீபாவளி கொண்டாட சென்றிருந்த அனைவரும் மீண்டும் சென்னைக்கு திரும்பிவிட்ட நிலையில், வீட்டுக்கு வந்த பின்பும் ரோகிணி விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்லாமல் மூடி மறைத்ததைப் பற்றி நினைத்து ஒருவித நெருடலுடனே இருக்கிறார் மீனா. அப்போது கிச்சனுக்கு செல்லும் ரோகிணி, தயவு செஞ்சு எதுவும் சொல்லிடாதீங்க என சொல்ல, அதைக்கேட்டு டென்ஷன் ஆன மீனா, எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பத்துக்கிட்ட மறைக்குறது துரோகம்னு மாமா சொன்னாரு. இப்போ நானும் துரோகம் தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். அந்த வார்த்தையெல்லாம் உன்னை உருத்தவில்லையா என கோபத்துடன் கேட்கிறார் மீனா.
ரோகிணிக்கு மீனா கொடுத்த வார்னிங்
தொடர்ந்து பேசும் அவர், என் புருஷம் என்மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காரு. இவ்ளோ பெரிய விஷயம் தெரிஞ்சும் அவர்கிட்ட சொல்லவில்லை என தெரிந்தால் அவர் உடைந்தே போய் விடுவார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் தலையே வெடிச்சிரும்போல இருக்கு. என்னால இப்படி ஒரு விஷயத்தை மறைத்து வாழ முடியாது என மீனா சொன்னதும், அய்யய்யோ இவ இப்பவே போட்டு கொடுத்திடுவா போல என யோசிக்கும் ரோகிணி, என் வாழ்க்கை மட்டுமில்ல, என் உயிரும் கிரிஷோட உயிரும் உங்க கையில தான் இருக்கு என அவர் சொன்னதும் கடுப்பான மீனா, சும்மா இதையே சொல்லி மிரட்டாத என ரோகிணியை எச்சரிக்கிறார்.
செம சந்தோஷத்தில் ரோகிணி
இதையடுத்து மீனாவிடம் பேசும் அவருடைய மனசாட்சி, ரோகிணி தற்கொலை செய்துகொள்வேன் என சொல்லி உன்னை பயமுறுத்தி பாக்குறா. அவகிட்ட இருந்த பிரச்சனையை இப்போ உன்னோட பக்கம் திருப்பி விட்டுட்டா என சொன்னதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி நிற்கிறார் மீனா. மறுபுறம் ரோகிணி தான் மனோஜுக்கு வாங்கிக் கொடுத்த மிகப்பெரிய ஆர்டர் விஷயமாக பில்டரை சந்திக்க செல்கிறார். அங்கு அவர்கள் 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்ததால் செம குஷியில் இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.