- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரோகிணியை ஸ்கெட்ச் போட்டு துரத்தும் பிரச்சனை... மீனாவை தொடர்ந்து முத்து கொடுத்த ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை
ரோகிணியை ஸ்கெட்ச் போட்டு துரத்தும் பிரச்சனை... மீனாவை தொடர்ந்து முத்து கொடுத்த ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு ரோகிணி பற்றிய அனைத்து ரகசியங்களும் தெரிந்த நிலையில், தற்போது முத்துவால் அடுத்த பிரச்சனையில் சிக்கி உள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மையும், இத்தனை நாட்களாக அவர் தங்களை ஏமாற்றி வந்ததையும் மீனா கண்டுபிடித்துவிடுகிறார். அதுமட்டுமின்றி கிரிஷின் அம்மாவும் ரோகிணி தான் என்கிற ரகசியமும் மீனாவுக்கு தெரியவந்துள்ளது. இந்த ரகசியங்களை குடும்பத்தினரிடம் சொல்லியே தீருவேன் என ஒற்றைக் காலில் நின்ற மீனாவை, எமோஷனல் பிளாக்மெயில் செய்து, அவரை சொல்லவிடாமல் தடுத்துவிடுகிறார் ரோகிணி. இதையடுத்து ரோகிணி மற்றும் மீனா இருவரும் பூஜையில் கலந்துகொண்டனர். இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
முத்துவிடம் சிக்கும் கிரிஷ் பாட்டி
தீபாவளி கொண்டாட ஊருக்கு வந்திருந்த அண்ணாமலை குடும்பத்தினருக்கு விருந்து ஏற்பாடு நடக்கிறது. இதற்காக இலை வாங்கிவர முத்துவை அனுப்பிவிடுகிறார்கள். அப்போது முத்து, கிரிஷ் மற்றும் அவரது பாட்டி லெட்சுமியை பார்த்துவிடுகிறார். உடனே அவர்களிடம் என்ன இங்கு வந்திருக்கீங்க என விசாரிக்கிறார். அவர்களும் கிரிஷின் தாத்தாவுக்கு திதி கொடுக்க வந்திருப்பதாக சொல்கிறார்கள். இதையடுத்து அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைக்கும் முத்து, அங்கு வந்து நீங்கள் சாப்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டும் என சொல்கிறார். அவர்களும் வேறு வழியின்றி ஓகே சொல்கிறார்கள்.
விருந்துக்கு அழைத்து வந்த முத்து
வீட்டில் ரோகிணி ஏமாற்றியதைப் பற்றிய யோசனையிலேயே இருக்கும் மீனா, சமையலில் கோட்டைவிடுகிறார். அப்பளங்களை எல்லாம் கருகவிட்டு பொரித்துத் தர, அதைப்பார்த்த ஸ்ருதி, என்ன ஆச்சு மீனா என கேட்க, அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் முத்து, நம் வீட்டுக்கு விருந்தாளி வந்திருப்பதாக சொல்ல, யாராக இருக்கும் என மீனாவும் ஆவலோடு பார்க்க வர, கிரிஷும் அவரது பாட்டியும் உள்ளே எண்ட்ரி கொடுக்கிறார்கள். இதைப்பார்த்த ரோகிணி வெடவெடத்துப் போகிறார். பின்னர் மீனாவிடம் சென்று, முத்துவுக்கு எதுவும் தெரிஞ்சிருக்காதுல்ல என கேட்கிறார். அதற்கு மீனா, அவருக்கு உண்மை தெரிஞ்சிருந்தா, இந்நேரம் நீ வெளிய போயிருப்ப என சொல்கிறார்.
மீனாவிடம் கெஞ்சும் ரோகிணி
உண்மையை மறைக்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சி தனக்கு உறுத்துவதாக சொல்லும் மீனா, தற்போது அவர்கள் இங்கேயே வந்திருப்பதால், அவர்களின் முகத்தை கூட என்னால பார்க்க முடியல என கூறுகிறார். உணர்ச்சிவசப்பட்டு யார் கிட்டயும் உண்மையை சொல்லிடாதிங்க மீனா என ரோகிணி கெஞ்சுகிறார். அதற்கு மீனா, இப்ப கூட ஒன்னும் இல்ல, எல்லார்கிட்டையும் நீயே உண்மையை சொல்லிடு என சொல்கிறார். அதற்கு ரோகிணி, நான் கண்டிப்பா எல்லார்கிட்டையும் ஒரு நாள் உண்மையை சொல்கிறேன். தயவு செஞ்சு இப்ப வேண்டாம் என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.