- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரோகிணி அனுபவித்த கொடுமைகள்... பிளாஷ்பேக் கேட்டு மனம் மாறும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
ரோகிணி அனுபவித்த கொடுமைகள்... பிளாஷ்பேக் கேட்டு மனம் மாறும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மையை குடும்பத்தினரிடம் சொல்லுவேன் என ஒற்றைக்காலில் நின்ற மீனாவிடம், தன்னுடைய பிளாஷ்பேக் சொல்லி உருக வைத்துள்ளார் ரோகிணி.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்தும் அதை வெளியே சொல்ல முடியாமல் ஒருவித குழப்பத்திலேயே இருக்கும் மீனா, சமையலில் கோட்டைவிடுகிறார். ஏடாகூடமாக சமைத்து அனைவரிடமும் திட்டு வாங்குகிறார். குறிப்பாக விஜயா, மீனாவை கடுமையாக சாடுகிறார். இதனால் அப்செட் ஆன மீனா, கிச்சனுக்குள் செல்ல, அவரை சமாதானப்படுத்த ரோகிணியும் போகிறார். அங்கே ரோகிணியை பார்த்ததும் உன்னால் தான் நான் இப்படியெல்லாம் திட்டு வாங்குகிறேன். என்னால் இதற்கு மேல் உன்னைப்பற்றிய உன்மையை மூடி மறைக்க முடியாது. நான் எல்லாரிடமும் சொல்லப்போகிறேன் என சொல்கிறார்.
மீனாவை மிரட்டும் ரோகிணி
அப்போது அங்கிருந்த கத்தியை எடுக்கும் ரோகிணி, நீ உண்மையை அவங்ககிட்ட சொன்னேனா நான் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார். சும்மா இந்த மாதிரிலாம் மிரட்டாத என மீனா சொல்ல, அதற்கு ரோகிணி, நான் மிரட்டவில்லை. பிடிச்ச வாழ்க்கையை வாழவில்லை என்றால் அந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம் என சொல்கிறார். பின்னர் ரோகிணி கையில் இருந்த கத்தியை பிடுங்கி கீழே போடுகிறார் மீனா. சத்தம் கேட்டு, என்ன மீனா கீழ விழுந்துட்டியா என முத்து கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லி சமாளிக்கிறார் மீனா.
ரோகிணியிடம் கோபத்தை கொட்டிய மீனா
பின்னர் மாடிக்கு சென்று தனியாக ஃபீல் பண்ணும் மீனாவை சமாதானப்படுத்த செல்கிறார் ரோகிணி. அப்போது அழுதுகொண்டிருந்த மீனாவை பார்த்து ஏன் அழுகுறீங்க என கேட்க, நான் முதல்முறையாக குற்ற உணர்ச்சியால் அழுகிறேன் என மீனா சொல்கிறார். உனக்கு இருக்குறது வாயா இல்ல பொய் மூட்டையா, எப்படி உன்னால இவ்வளவு பொய் சொல்லிட்டு நிம்மதியா இருக்க முடியுது. ஏன் இவ்வளவு பொய் சொன்ன? என மீனா கேட்க, என் கதை தெரிஞ்சா உங்களுக்கே என்பக்கம் இருக்குற நியாயம் புரியும் மீனா என தன்னுடைய பிளாஷ்பேக் கதையை சொல்லுகிறார் ரோகிணி.
ரோகிணியின் பிளாஷ்பேக்
நான் ரொம்ப சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய தந்தை ஒரு ஃபேக்ட்ரியில் வேலை செய்துகொண்டிருந்தார். வீட்டில் எப்போதுமே கடன் தொல்லை. நான் படிச்சு அந்த கடனையெல்லாம் அடைக்கணும்னு இருந்தேன். நான் காலேஜ் முதலாம் ஆண்டு படிக்கும் போது என் வாழ்க்கையில் விதி விளையாட ஆரம்பித்தது. என் அப்பா வேலை செய்யும் கம்பெனி ஓனருக்கு ரெண்டு தம்பிகள். மூத்தவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நான் என்னுடைய அப்பாவுக்கு டெய்லி சாப்பாடு கொண்டு வந்து தருவதை பார்த்த அந்த கம்பெனி ஓனர் என்னை அவரது இரண்டாவது மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டார்.
கல்யாணத்தால் ரோகிணி அனுபவித்த கொடுமைகள்
அவருக்கு என்னைவிட 15 வயசு அதிகம். அதனால் நான் கல்யாணத்துக்கு மறுத்தேன். ஆனால் என்னோட அப்பா, அம்மா கேட்கவே இல்லை. இந்த மாதிரி பெரிய இடம் அமையாது. கடவுளா பார்த்து இந்த வாய்ப்ப கொடுத்திருக்காருனு கெஞ்சு என்னை சம்மதிக்க வைத்தார்கள். கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாள் எனக்கு எக்ஸாம் இருந்தது. நான் இரவில் படிச்சிட்டு இருந்தேன். அப்போ ரூமுக்குள் வந்த என் கணவர் உனக்கு எதுக்குடி படிப்புனு சொல்லி என் புக்கை எல்லாம் தூக்கி எறிந்தான். எனக்கு பொண்டாட்டியா இருக்குறது தான் உன் வேலைனு சொல்லி என்னுடைய சம்மதமே இல்லாம என்னை தொட்டான்.
ஃபீல் பண்ணிய மீனா
அடுத்த நாள் காலையில் நான் அவனுக்கு காஃபி எடுத்துட்டு போகும் போது அவன் விஸ்கி பாட்டிலோட உட்கார்ந்துட்டு இருந்தான். அப்போது தான் தெரிஞ்சது அவன் மிகப்பெரிய குடிகாரன் என்று. கல்யாணம் பண்ணிவச்சா சரி ஆகிடுவான்னு அந்த விஷயத்தை எல்லோரும் என்னிடம் இருந்து மறைத்துவிட்டார்கள். ஆனால் அவன் மாறவே இல்லை. தினமும் குடிப்பான். காரணமே இல்லாம என்னை அடிச்சு கொடுமைப்படுத்துவான். ஒருகட்டத்தில் செத்துடலாம்னு நினைச்சேன். அப்போ தான் நான் கர்ப்பம் ஆனேன். அதனால் என்னால சாகவும் முடியல. 3 மாசம் தான் நான் அந்த ஆள் கூட வாழ்ந்தேன். ஒருநாள் அந்த ஆள் குடிச்சிட்டு வரும்போது விபத்தில் இறந்துட்டான். அந்த ஆளோட அண்ணன் எங்க குடும்பத்தினரை மிரட்டி, 5 லட்சம் கொடுத்து எங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டு அந்த வீட்டை விட்டே விரட்டி விட்டுட்டாங்க என ரோகிணி தன்னுடைய பிளாஷ்பேக் சொன்னதும் கலங்கிப்போனார் மீனா. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.