- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திக்காக மாறி ரொமான்ஸ் மூடில் கவிதை அருவியா கொட்டிய ரேவதி – கும்பகர்ணன் மாதிரி தூங்கிய கார்த்திக்!
கார்த்திக்காக மாறி ரொமான்ஸ் மூடில் கவிதை அருவியா கொட்டிய ரேவதி – கும்பகர்ணன் மாதிரி தூங்கிய கார்த்திக்!
Revathi Look alike Karthik and Feel in Romance Mood : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் ரேவதி கார்த்திக்காக மாறி ரொமான்ஸ் மூடில் கவிதையாக கொட்டியுள்ளார்.

ரேவதி அண்ட் கார்த்திக் ராஜா ரொமான்ஸ்
Revathi Look alike Karthik and Feel in Romance Mood : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரகலாவின் விவாகரத்து காட்சிகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ரேவதியின் ரொமாஸ் காட்சி இடம் பெற்றுள்ளது. எத்தனை முறை தனது காதலை வெளிப்படுத்தினாலும் கார்த்திக் அதற்கு அசருவதாக தெரியவில்லை. நேரடியாக தனது காதலை வெளிப்படுத்திய போதிலும் கார்த்திக் நீ ஆஸ்திரேலியா சென்று உன்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள் என்று எப்போதும் பேசி வருகிறார்.
கார்த்திகை தீபம் 2
ஆனால், ரேவதி தான் தொடர்ந்து கார்த்திக்கை காதலிக்கிறேன் காதலிக்கிறேன் என்று தனது காதலை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே கார்த்திக் தான் தனது அத்தை பையன் என்பது தெரியும் என்று அவரிடமே சொல்லிவிட்டார். அதோடு கல்யாணத்தில் தெரிந்தோ தெரியாமலோ அம்மா எனக்கு உதவி செய்து விட்டார்கள். உன்னைப் பற்றி நன்கு அறிந்த பிறகு தான் நான் உன்னை காதலிக்கவே ஆரம்பித்தேன்.
கார்த்திக்காக மாறி ரேவதியை ரொமான்ஸ் பண்ணும் ரேவதி
மேலும், கணவரின் நல்லது கெட்டதில் பங்கேற்பதில் மனைவியாக எனக்கும் உரிமைகள் உண்டு. அதனை நான் சந்தோஷமாக செய்கிறேன். ஏதோ என்னால் முடிந்த உதவிகளை உனக்கு செய்கிறேன் என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் ரேவதி கார்த்திக்காக மாறி எப்படி ரொமான்ஸ் பண்ண வேண்டும், எப்படி காதலிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளார்.
கார்த்திக் மாதிரி உடை அணிந்த ரேவதி
கார்த்திக்கின் சட்டை மற்றும் வேஷ்டியை, கையில் கயிறு, கழுத்தில் பாசி என்று எல்லாவற்றையும் அணிந்து கொண்டு முழு கார்த்திக்காக மாறி ரேவதியை ரொமான்ஸ் செய்துள்ளார். அதில் ரேவதிக்காக கவிதையும் சொல்லியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது உன்னை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ஒரு வயலின் கொடு வாசித்துவிடுகிறேன் என்று கவிதை அருவி மழையாக கொட்டியுள்ளார்.
எப்படியெல்லாம் ரேவதிக்கு புரபோஸ் செய்ய வேண்டும், ரொமான்ஸ் செய்ய வேண்டும், காதலிக்க வேண்டும் என்று கார்த்திக்காக மாறி ரேவதி கொஞ்சும் போடும் கார்த்திக் ஒரு புறம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால், ரேவதி சற்று ஏமாற்றமடைந்துள்ளார்.