MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை... ரம்யாவுக்கு காத்திருந்த செம்ம ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை... ரம்யாவுக்கு காத்திருந்த செம்ம ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் ரம்யாவை பொண்ணு பார்க்க வந்த ரமேஷ் கொடுத்த ட்விஸ்ட் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 07 2024, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த கல்யாணம் நடந்தால் அபிராமி உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவிடம் ஐஸ்வர்யா உண்மையை உடைத்த நிலையில் இன்று நடக்கப் போவதை பார்க்கலாம். ஐஸ்வர்யா சொன்னதைக் கேட்டு ஷாக்கான தீபா, நேராக அபிராமியிடம் சென்று, இந்தக் கல்யாணம் வேண்டாம் நிறுத்திவிடுங்கள் என சொல்கிறாள். உடனே அபிராமி அதெல்லாம் ஒன்னும் இல்லை உன் அப்பா அம்மா சொன்னதா தான சொன்னாங்க, அவங்கள கூப்பிடு கேட்கலாம் என்று தீபாவின் பெற்றோரை  வரவைத்து விசாரிக்கையில், அவர்கள் நாங்கள் அப்படி சொல்லவே இல்லை என சொல்கின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

மேலும் இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்க வேண்டும் என்று தான் பேசிக்கொண்டு இருந்ததாக சொல்கின்றனர். உடனே தீபா, இனிமேல் இன்னொரு வாட்டி இதுமாதிரி ஏதாச்சும் பண்ணீங்க என்னை வேற மாதிரி ஆளா பார்ப்பீங்க என்று  ஐஸ்வர்யாவை எச்சரிக்கிறார். அபிராமியும் தன் பங்கிற்கு ஐஸ்வர்யாவை செம்மயாக திட்டி விடுகிறாள். அதன் பின்னர் ரம்யாவை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதால், மீனாட்சி, மைதிலி மற்றும் தீபா ஆகியோர் ரம்யாவை அழகுபடுத்துகின்றனர். 

இதையும் படியுங்கள்... ரோல்ஸ் ராய்ஸை விற்ற கையோடு லேட்டஸ்ட் மாடல் சொகுசு காரை சொந்தமாக வாங்கிய விஜய் - அதன் விலை இத்தனை கோடியா?

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

மாப்பிள்ளை ரமேஷ் வீட்டுக்கு வந்ததும், காபி கொண்டு போய் கொடுக்குமாறு ரம்யாவை சொல்கிறார்கள். அதற்கு அவள் நான் ஒரு பெரிய கம்பெனியோட ஓனர், நான் எப்படி இதெல்லாம் பண்ணுவேன் என்று சொல்லி கொடுக்க மறுக்கிறாள். உடனே தீபா அவளிடம் இதெல்லாம் காலம் காலமா இருக்கு, நீ நெனச்சதும் அதை மாற்றிவிட முடியாது என்று சொல்லி மனசை மாற்றி, ரம்யாவிடம் காபியை கொடுத்து அனுப்புகிறாள். ரம்யாவும் தீபா பேச்சை கேட்டு, காபி கொண்டு வந்து கொடுக்கிறாள். 

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

ரம்யாவின் அப்பா மாப்பிள்ளையை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொல்கிறார். ரம்யாவும் ரமேஷ் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவான் என்கிற தைரியத்தில் தனக்கு ரமேஷை பிடித்திருப்பதாக சொல்லிவிடுகிறாள். ஆனால் மாப்பிள்ளையாக வந்த ரமேஷ் தனக்கு ரம்யாவை பிடித்திருப்பதாக சொல்ல, ரம்யா கடுப்பாகிறாள். இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். உடனே தட்டையும் மாற்றுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக ரம்யா கல்யாணத்தில் என்னென்ன ட்விஸ்ட் என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... ஒரு உயர்ந்த சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது! வினேஷ் போகத்திற்கு சமந்தா ஆதரவு!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பணத்துக்கு ஆசைப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தாலிகட்டும் மனோஜ்... காத்திருக்கும் செம ட்விஸ்ட்
Recommended image2
Pandian Stores 2 : குமாருக்கும் அரசிக்கும் கல்யாணம்? அப்பத்தாவின் மாஸ்டர் பிளான்... செந்திலுக்கு மீனா வைத்த செக்!
Recommended image3
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved