- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பழனிவேலுக்கு திருமணம் நடந்ததா? பாண்டியனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
பழனிவேலுக்கு திருமணம் நடந்ததா? பாண்டியனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிவேலுக்கு திருமணம் நடைபெற்று மணமக்களை வீட்டிற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் அதிக எதிர்பார்ப்புகளுடன் சென்று கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். கடந்த 2018 ஆம் ஆண்டு அண்ணன், அண்ணி 3 தம்பிகளுடன் தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட 1348 எபிசோடுகள் வரையில் வெற்றிகரமாக டெலிகாஸ்ட் ஆனது. இந்த சீசன் முடிந்து 2 நாட்கள் கடந்த நிலையில், இந்த சீரியலிலேயே அப்பா, அம்மா, 2 மகள்கள், 3 மகன்கள், 2 அண்ணன்கள், ஒரு தம்பி, அம்மா, அண்ணி என்று வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பு செய்யப்பட்டது.
500 எபிசோடுகளை நோக்கி பாண்டியன் ஸ்டோர் 2
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 முதல் எபிசோடை ஒளிபரப்பான நிலையில் தற்போது 400 எபிசோடுகளை கடந்து 500 எபிசோடை நோக்கி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நிரோஷா (கோமதி), ஸ்டாலின் முத்து (பாண்டியன்), ஹேமா ராஜ்குமார் (மீனா), ராஜ்குமார் மனோகரன் (பழனிவேல்), விஜே கதிர்வேல் கந்தசாமி (சரவண பாண்டியன்), சரண்யா துரடி சுந்தர்ராஜ் (தங்கமயில்), வெங்கட் ரங்கநாதன் (செந்தில் பாண்டியன்), ஆகாஷ் பிரேம்குமார் (கதிரவன் பாண்டியன்), சத்யா சாய் கிருஷ்ணன் (அரசி), ஷாலினி (ராஜேஸ்வரி), விலாசினி (குழலி), அஜய் ரத்னம் (முத்துவேல்), பாண்டி ரவி (சக்திவேல்) என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
கடையில் பொட்டலம் போடுறான்; அவனுக்கு நிச்சயமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அண்ணன்கள் வைத்த டுவிஸ்ட்!
பாண்டியனின் 3 பிள்ளைகளுக்கும் அடுத்தடுத்து நடந்த திருமணம்:
இந்த நிலையில் தான் பாண்டியனின் 3 மகன்களுக்கும் திருமணம் நடந்த நிலையில் அவரது மைத்துனன் பழனிவேலுக்கு மட்டும் இதுவரையில் திருமணம் நடைபெறாமல் இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்து வந்தார். அப்படி தான் முதல் முறையாக நடத்தப்பட்ட திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகளை பழனிவேலுவின் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து தடுத்து நிறுத்தினர்.
பழனிவேலுக்கு இரண்டாவது முறையாக நடந்த திருமண ஏற்பாடு
இதையடுத்து திருமணம் வேண்டாம் என்று இருந்த பழனிவேலுவிற்கு இதே போன்று 2ஆவது முறையாக திருமண ஏற்பாடுகளை பாண்டியன் செய்தார். பெண் பார்க்கும் படலுமும் நடைபெற்று முடிந்து மணமேடை வரை வந்து அந்த திருமணமும் நின்று போனது. மணமகள் வீட்டார் தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி மணமேடையிலிருந்து எழுந்து சென்றனர். எவ்வளவோ கேட்டும் அதற்கான காரணத்தை மட்டும் அவர்கள் சொல்லவே இல்லை.
பழனிவேலுவின் அண்ணன்கள் செய்த சதி:
ஆனால், இதற்கு பின் பழனிவேலுவின் அண்ணன்கள் இருப்பது அவர்கள் யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை. இந்த நிலையில் தான் பாண்டியன் ஏற்பாடு செய்த அதே மணமேடையில் பழனிவேலுவின் அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் மாரியின் சித்தி பெண்ணை பழனிவேலுவிற்காக பேசியிருக்கிறார்கள். அவர் தான் நடிகை சாந்தினி பிரகாஷ் (சுகன்யா). இவர் பிரியமானவள், காற்றின் மொழி, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, டார்லிங் டார்லிங், சுமங்கலி, பூவே பூச்சூடவா உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேல் நிச்சயதார்த்தம் நடக்குமா, நடக்காதா? டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்!
பழனிவேலுவிற்கும் சுகன்யாவிற்கும் திருமணம்:
இவருக்கு இது 2ஆவது திருமணம். இன்றைய எபிசோடில் பழனிவேலுவிற்கும் சுகன்யாவிற்கும் சக்திவேல் மற்றும் முத்துவேல் விருப்பப்படி நல்லபடியாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மணமேடையில் சக்திவேல் மற்றும் முத்துவேல் குடும்பத்தினர் இருக்க, பாண்டியன் குடும்பத்தினர் மணமேடைக்கு கீழ் நின்றனர். அவர்களை புகைப்படம் கூட எடுக்க முத்துவேல் அனுமதிக்கவில்லை. கடைசியில் பாண்டியன் பழனிவேலுவிற்காக வாங்கி வைத்திருந்த தங்க செயினை அணிவித்து தனது குடும்பத்துடன் வீட்டிற்கு வந்துவிட்டனர்.
மணமக்களின் வருகைக்காக காத்திருந்த பாண்டியன்:
அவர்கள், மணமக்களின் வருகைக்காக காத்திருந்த நிலையில் அவர்கள் வந்ததும் அவர்களுக்கு முத்துவேலுவின் வீட்டில் ஆரத்தி எடுத்து மணமக்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைவது போன்று இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளை பழனிவேல் தனது மனைவி சுகன்யாவுடன் முத்துவேல் வீட்டிற்கு சென்றாரா அல்லது பாண்டியன் வீட்டிற்கு மீண்டும் வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவழியாக பழனிவேலுவிற்கு திருமணம் நடந்த நிலையில, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் அடுத்ததாக அரசி மற்றும் குமரவேலு (சக்திவேல் ஆதி) ஆகியோருக்கு இடையிலான லவ் டிராக் மற்றும் அவர்களது காதலில் உண்டாகும் பிரச்சனைகளை பற்றி தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.