MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • எதிர்நீச்சல் தொடருக்கு தாவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை... அப்போ இனி சரவெடி தான்!

எதிர்நீச்சல் தொடருக்கு தாவிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை... அப்போ இனி சரவெடி தான்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல நடிகை தற்போது எதிர்நீச்சல் தொடருக்கு தாவி இருக்கிறாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 21 2023, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ethirneechal

ethirneechal

தொலைக்காட்சி சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல் தான். திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் தொடங்கி ஓராண்டே ஆகும் நிலையில், இதற்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் இந்த சீரியலில் விறுவிறுப்பான கதைக்களமும், அதில் நடிக்கும் நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு தான். தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

24
ethirneechal

ethirneechal

தொலைக்காட்சியை பொறுத்தவரை அது ஒரு பிரைம் டைமாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் இதுவரை பல்வேறு ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு டிஆர்பி ரேட்டிங்கை பெற்று எதிர்நீச்சல் சீரியல் சாதனையும் படைத்துள்ளது. இந்த சீரியலில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் கதாபாத்திரம் என்றால் அது ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரிமுத்துவின் கதாபாத்திரம் தான்.

இதையும் படியுங்கள்... கயலிடம் கையும் களவுமாக சிக்கிய எழிலின் அம்மா! திருமணத்தில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்.. இனி நடக்க போவது இதுதான்!

34

எம்மா ஏய் என சவுண்டு விட்டு அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் தற்போது மீம் டெம்பிளேட்டுகளாக கலக்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக நந்தினியாக நடிக்கும் ஹரிப்பிரியாவின் கதாபாத்திரம், குணசேகரனுக்கு நோஸ் கட் கொடுப்பதில் கில்லாடியாக இருக்கும் நந்தினி அவரைப் போலவே கிண்டலடித்து பேசுவது வேறலெவலில் இருக்கும். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பம்சம் கொண்டதாக இருக்கும் இந்த சீரியலில் ஒரு புது கேரக்டர் எண்ட்ரி கொடுக்க உள்ளதாம்.

44
shanthi williams

shanthi williams

அவர் வேறு யாருமில்லை, அனுபவமிக்க சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் தான். இவர் இதற்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, சந்திரலேகா, மகராசி போன்ற தொடர்களில் நடித்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் அம்மாவாக நடித்து வந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு எதிர்நீச்சல் சீரியல் ஆஃபர் வந்திருக்கிறது. இவரின் வருகையால் இனி எதிர்நீச்சல் சீரியல் மேலும் களைகட்டப்போகிறது.

இதையும் படியுங்கள்... kolai review : விஜய் ஆண்டனி வென்றாரா? வெறுப்பேற்றினாரா? - கொலை படத்தின் விமர்சனம் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved