kolai review : விஜய் ஆண்டனி வென்றாரா? வெறுப்பேற்றினாரா? - கொலை படத்தின் விமர்சனம் இதோ
பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் கொலை திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள திரைப்படம் தான் கொலை. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ள இப்படத்தில் நடிகை ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரீஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகி உள்ள இப்படம் உலகளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... திருச்சி ஸ்பா செண்டரில் விபச்சார தொழில் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
சுமார்
கொலை டல்லான படமாக உள்ளது. படத்தை அணுகிய விதம் நல்லா இருக்கு, மெதுவாக கதை சொல்வதும் ஓகே தான் ஆனால், அது கவரும் விதமாக இருந்திருக்கலாம். ஆச்சர்யப்படுத்தும் காட்சிகள் ஒன்று கூட இல்லை. விஜய் ஆண்டனி படம் முழுக்க நிதானமாகவே உள்ளார். ரித்திகாவுக்கு நடிக்க ஒன்னுமில்லை. பின்னணி இசை நன்றாக இருந்தது. 2, 3 காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் வி.எப்.எக்ஸ் சுமார். மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். போர் ஆன மர்டர் மிஸ்ட்ரி படம் இது என பதிவிட்டுள்ளார்.
டல் அடிக்கிறது
கொலை பிலோ ஆவரேஜ் கிரைம் திரில்லர் படம். நடிப்பும், சில காட்சியமைப்பும் அருமையாக உள்ளது. நிறைய காட்சிகள் டல் அடிக்கும் வகையில் உள்ளன. டுவிஸ்டுகள் அனைத்தும் கணிக்கும் படி உள்ளது. படத்தில் நிறைய பிரச்சனை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
விறுவிறுப்பில்லை
கொலை திரைப்படம் மும்பை மாடலின் கொலையுடன் ஆரம்பிக்கிறது. பின்னர் விசாரணை தொடங்குகிறது. தூக்கம் வரவைக்கும் திரைக்கதை படத்திற்கு சுத்தமாக கைகொடுக்கவில்லை. படத்தின் மீது ஒரு கனெக்ட் வரவில்லை. மேக்கிங் நல்லா இருக்கு, எந்த கேரக்டரும் வலுவாக இல்லை. விஜய் ஆண்டனி ஓகே, மோசமான திரைக்கதை விறுவிறுப்பாக எதுவுமில்லை என பதிவிட்டுள்ளார்.
போரான படம்
கொலை படம் மிகவும் ஆவரேஜாக உள்ளது. மெதுவாக, போர் அடிக்கும் வகையில் உள்ளது. அடே பிரிவியூ ஷோ ரிவியூவர்களா உங்க பேச்சையெல்லாம் கேக்கவே கூடாது என படம் பார்த்த நெட்டிசன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்... டாப் ஹீரோஸுக்கு ஆப்பு வைக்கும் விதமாக புது ரூல்ஸ் போட்ட பெப்சி.. மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை