டாப் ஹீரோஸுக்கு ஆப்பு வைக்கும் விதமாக புது ரூல்ஸ் போட்ட பெப்சி.. மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
தமிழ் படங்களின் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் தான் நடத்த வேண்டும் என தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி புது ரூல்ஸ் போட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியின் கீழ் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெறும் படப்பிடிப்புகளில் பெப்சி ஊழியர்கள் தான் பணியாற்றுவார்கள். இப்படி இருக்கையில், நடிகர்கள் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை பெரும்பாலும் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளிநாட்டில் தான் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் நடத்தப்பட்டது. இதேபோல் விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலும், லியோ பட ஷூட்டிங் காஷ்மீரிலும் நடைபெற்றது. ரஜினி படங்களுக்கும் இதே நிலை தான் இருந்தது. இதனால் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையும் படியுங்கள்... ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டது... மணிப்பூர் சம்பவம் குறித்து கமல்ஹாசன் காட்டம்
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி தமிழ் படங்களின் படப்பிடிப்பை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் எனவும் வெளிநாடுகளிலோ அல்லது வெளிமாநிலங்களிலோ அவசியமின்றி படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளனர்.
இதுதவிர சமீப காலமாக தமிழ் நடிகர்கள் பெரும்பாலானோர் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்கின்றனர். இதனால் தெலுங்கு நடிகர்கள் அதிகளவில் அப்படத்தில் நடிக்க வைப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு முடிவுகட்டும் விதமாக தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்களையே பயன்படுத்த வேண்டும் என பெப்சி அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள்ளோ அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள்ளோ படப்பிடிப்பை முடிக்காவிட்டால் தயாரிப்பு நிர்வாகிகளுக்கு எழுத்துப் பூர்வமாக உரிய பதில் அளிக்க வேண்டும் என பெப்சி தெரிவித்துள்ளது. அதோடு ஒரு படத்தின் இயக்குனரே அக்கதையின் எழுத்தாளராக இருந்தால், கதை உரிமையில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவரே பொறுப்பேற்க வேண்டும், இந்த பிரச்சனையில் தயாரிப்பாளர் பாதிக்கப்பட கூடாது என பெப்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேற்கண்ட புதிய விதிகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்சி எச்சரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... திருச்சி ஸ்பா செண்டரில் விபச்சார தொழில் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்